Don’t Be a Positive Parent!

உங்கள் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பது நீங்கள் கீழ்க்கண்டவற்றில் நீங்கள் எந்த வகையான parenting முறையினை கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது தான்.

Positive parenting

Negative parenting

True parenting

பெரும்பாலானவர்களுக்கு Negative Parentஆக இருக்கக் கூடாது என்பது தெரியும். ஆனால் ஏன் Positive Parent ஆக இருக்கக் கூடாது என்பது தெரிவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இதை தொடர்ந்து படியுங்கள்!

rs=w:1440,h:1440

Details

ஏன் Positive Parent ஆக இருக்கக் கூடாது?

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வயதுக்கு தகுந்த விஷயங்களை கடந்து அதீதமாக அறிவுரை கொடுத்துவிட்டு, அவர்களின் குழந்தை தன்மையை மறுத்துவிட்டு, தங்களோடு இணையாக விவாதிக்கும் குழந்தையாக வளர்த்து விடுகின்றனர். இதுவே இவர்களுக்கு அதாவது பெற்றோர்களுக்கு எதிர்வினையாக மாறி பெற்றோர் குழந்தைகளுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கி விடுகிறது. இது நடக்கும் பொழுது குழந்தைகள் எட்டாம் வகுப்பு கடந்து விடுகின்றனர். இவைதான் ஒழுக்கச் சீர்கேடு, கல்வி முரண்பாடு, டிஜிட்டலில் அடிமையாகுதல், பாலியல் பிரச்சினைகள் போன்றவைகளுக்கு மூலகாரணமாக மாறிவிடுகிறது!

rs=w:1440,h:1440

ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றுமொரு விஷயம் உள்ளது! குழந்தைகளுடைய இயல்புத் தன்மையினை குழந்தைப் பருவத்திலேயே மாற்ற முற்படுவது தான் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு அடிப்படை. சிங்கத்தை வேட்டையாடுவதற்குத் தேவை சிங்கத்தை பலவீனப்படுத்தும் திறமை அல்ல. அல்லது அதனுடைய இயல்பு திறனை குறைப்பதற்காக சிகிச்சையும் பயிற்சியும் அல்ல. மாறாக சிங்கத்தை வேட்டையாடுபவர்களுக்கு திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தை அதிகரிப்பதும் அவருடைய நுண்ணறிவு, நுண் செயல் இவற்றை அதிகரித்து, சிங்கத்தை வேட்டையாட வைப்பது தான் தேவை.

இதனை புரிந்து கொள்வதற்கு இன்றைய சமுதாயத்திற்கு MSK தியரி மிக மிக அவசியமாகிறது! MSK என்பது Mind Set Knowledge என்பதன் சுருக்கம். ஒவ்வொரு மனிதருடைய Mind Set எப்படி இருக்கிறதோ அதன் படி தான் அவர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். அந்த உலகம் வெற்றி அல்லது தோல்வி அடைவதற்கு காரணம், அந்த உலகத்தை அவர்கள் பார்த்த விதமும், அணுகிய விதமுமே ஆகும்!

இதுவே நமது MSK எனப்படும் Mind Set Knowledge Theoryக்கான அடிப்படை! இந்த Mind Set Knowledge சுமார் 25 ஆண்டு கால ஆராய்ச்சியின் அடிப்படையில் எங்களால் கண்டறியப்பட்டது! எங்களது MSK Life Clinic Foundationன் தலைமை அலுவலகம் கோயம்பத்தூரில் 83/84, ஒப்பணக்காரத்தெருவில் உள்ளது. தென்னிந்தியாவில் துவங்கப்பட்ட முதல் Life Clinic இதுவே ஆகும்!

rs=w:1440,h:1440

எங்களது MSK Life Clinic Foundation மூலமாக இதுவரை சுமார்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை கொடுத்திருக்கின்றோம்.

 • குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பதன் காரணங்கள்
 • ஆன்லைன் வகுப்பில் எற்படும் 35 க்கும் மேற்பட்ட வகையான பிரச்சனைகள்
 • படிக்க மாட்டேன் என அடம் பிடிப்பதற்கான காரணங்கள்
 • பெற்றோர்களை மதிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்
 • குழந்தைகளை மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதனால் எற்படும் விளைவுகள்
 • நல்ல மதிப்பெண்கள் இருந்தும் நன்கு படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத காரணங்கள்
 • அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருப்பதற்கான உளவியல் காரணங்கள்
 • குழந்தைகளினால் அழிந்து வரும் நிறுவனங்களைப் பற்றிய ஆய்வுகள்
 • உடலில் ஏற்படும் மன அழுத்த நோய்கள்
 • தேர்வு காலத்தில் குழந்தைகளிடம் கவனிக்கப்பட வேண்டிய காரணிகள்
 • மாணவர்களுக்கு ஏற்படும் கணக்கு பாடத்தைப் பற்றிய பதற்றமும் விளைவும்
 • பெருகிவரும் பள்ளிக்காதல்
 • குழந்தைகள் சரியில்லாமல் போனால் அந்த மனபாதிப்பினால் பெற்றோருக்கு  ஏற்படும் உடல் பாதிப்புகள்

போன்றவைகளை எங்களது Mind Lab மூலமாக முழுமையாக ஆராய்ந்து கண்டறிந்த உளவியல் தீர்வுகளை இங்கே நாங்கள் தந்திருக்கின்றோம்!

இன்றைய சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு சார்ந்த பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த ‘Positive Parenting’ தான். அதை புரிந்துகொள்ள கீழ்க்கண்ட தகவல்களை கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுப்பதன் காரணங்கள்

நாம் அனைத்து வகையிலும் சரியாகவும் சிறப்பாகவும் தான் செயல்படுகிறோம். ஆனாலும் நமது குழந்தை ஏன் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிக்கிறது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் பெற்றோர் பலர் உண்டு. உண்மையில் இதற்கான உளவியல் காரணங்கள் மிகவும் ஆழமானவை.

rs=w:1440,h:1440

உதாரணமாக எங்களை அணுகிய சில பெற்றோருக்கு நிகழ்ந்த அனுபவங்களைக் கூறலாம்.

முதல் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை பெற்றோர்கள் கிளினிக்குக்கு அழைத்து வந்தனர். அக்குழந்தை உள்ளே வருவதற்கு அடம் பிடித்தது. அக்குழந்தையோடு சுமார் ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம் வந்ததனால் குழந்தையை அவர்களிடம் இருக்க வைத்து, பெற்றோர்களை அழைத்து என்ன சிக்கல் என கேட்டேன்.

அதற்கு அவர்கள் கடந்த ஆறு மாதமாக பள்ளி செல்லவில்லை; அழுகிறான்; அடம் பிடிக்கிறான்; நாங்கள் அனைத்து விதமான சிகிச்சைகளையும் பார்த்து விட்டோம். கடைசியாக எங்கள் நண்பர் உங்களைப் பார்க்கச் சொன்னார் என்று கூறினார்கள்.

குழந்தையை அழைத்து வரச் சொன்னேன். குழந்தை மிகுந்த குரல் எழுப்பி அடம் பிடித்தது. யார் அழைத்தும் உள்ளே வரவில்லை. இதே முறையில் தினமும், பெற்றோரையும், குழந்தையையும் வரவழைத்து சுமார் நான்கு வாரம் கிளினிக்கின் உள்ளே அழைக்காமல் வெளியே அமர்த்தி மட்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னோம்.

பிறகு 5வது வாரம் குழந்தையிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து உள ஆய்வு செய்யும் போது தான் தெரிந்தது, அக்குழந்தைக்கு புத்தகத்தையோ நோட்டையோ காண்பித்தால் போதும் உடனே பெருமூச்சு விடுவதுண்டு,

கண், வாய் ஆகியவற்றை கடித்துக் கொள்வான்  என்பது. பின்பு துடியாய் துடித்து விடுவான். அக்குழந்தையை சில வாரங்கள் வரவழைத்து உள ஆய்வு செய்த பின் தான், இந்த “புத்தக நோட்டு சார்ந்த மன அதிர்ச்சிக்கான காரணம் டீச்சர் அடித்தது தான் என தெரிந்தது”!

அப்படி மன அதிர்ச்சி உண்டாகும் வரை ஏன் டீச்சர் அடித்தார் என்பது தான் மிகப் பெரிய கதை. குடும்பத்தில் ஒரே குழந்தை என்பதால் அனைவருக்கும் அவன் செல்லம். அவன் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து, அதோடு நில்லாமல் அக்குழந்தை சொன்னதை அனைத்தையும் செய்வார்கள். அவன் கேட்டு ஏதேனும் வாங்கிக் கொடுக்கவில்லை எனில் உடனே தனது தாயாரின் ஆடையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அடம் பிடிப்பான்.

rs=w:1440,h:1440

உடனே அவர்கள் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். இவ்வாறு அவன் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள பழக்கப்படுத்தி விட்டார்கள் அவனது பெற்றோர்கள். அதுவே அவன் மனதில், எது வேண்டுமென்றாலும் உடையை பிடித்து இழுத்தால் கிடைத்து விடும் என பதிவாகி விட்டது.

இதே பழக்கத்தால் பள்ளி சென்று சுமார் காலை 11.00 மணிக்கு நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று அடம் பிடிக்க, டீச்சர் வேண்டாம் என்று சொல்ல, உடனே டீச்சரின் உடையை பிடித்து இழுத்ததுடன் அவர் வகுப்பறைக்கு வெளியே வந்தும் அவன் விடவில்லை. அவர் தனது உடை கிழியாமல் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அக்குழந்தையை அடித்துத்தான் உடையிலிருந்து கையை எடுக்க வைக்க முடிந்திருந்தது.

மனதால் அவன் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அறிந்து கொண்டு, அக்குழந்தைக்கு நடந்ததை மனதிலிருந்து மாற்றி, பயத்தை அகற்றிய பின்பு, 6 மாதங்கள் கழித்து அவன் அதே பள்ளிக்கு செல்கிறான்.

இதற்கு யார் பொறுப்பு என்றால்… பெற்றோர்கள் தான்! குழந்தையின் நடத்தையை உடனே மாற்றி விட முயற்சி செய்யாமல் விட்டால் அது பிடித்தமாகவும், அனுபவமாகவும் மாறி அதே நடத்தையை அனைவருக்கும் செய்து பிறரையும் துன்பப்படுத்தி விடும்.

அந்த சமயத்தில் பெரும்பாலும் பெற்றோர்கள் அடுத்தவர்கள் மீது மட்டும் குறை சொல்கிறார்கள். மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள். ஆனால் தன் குழந்தையின் தவறை மறந்து அவர்களே நியாயம் கற்பிக்கின்றனர்.

அக்குழந்தையை பெற்றோர்கள் ஆரம்பத்தில் உளவியல் ரீதியாக சரி செய்திருக்கலாம்.

M S K THEORY

“ஒரு குழந்தை செய்வதை பெற்றோர் ‘சரி’, ‘சரி’ என்று சொல்லும் போது அந்த குழந்தை இந்த உலகத்தில் ‘அது தான் சரி’ என்று எடுத்துக் கொள்ளும். அதனுடைய விளைவு மிகப்பெரிய தவறாகப் போய்விடும்.”

பொதுவாக இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெற்றோர்கள் உளவியல் ரீதியில் சரி செய்ய முயலுவதில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் ஆலோசனை கேட்டு விட்டு அவர்கள் தங்களது அனுபவத்தின் மூலமாக தெரிந்த எதையாவது கூறக்கேட்டு தவறான வழிகளில் மாணவர்களை கையாண்டு விடுகின்றனர். இது சிக்கல்களை மேலும் அதிகரிக்குமே தவிர குறைப்பதில்லை. பெரும்பாலாக இத்தகைய ஆலோசனைகளை வழங்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகளை பெற்றோர்கள் போதுமானதாக உணர்கின்றனர்.

உண்மையில் ஆறுதல் வேறு, தீர்வு வேறு. இத்தகைய பிரச்சனைகளில் சரியான தீர்வுகளை தகுந்த உளவியல் நிபுணர்களால் மட்டுமே வழங்க முடியும். இன்னும் சில பெற்றோர் பிரச்சனைகளை தங்கள் அறிவுக்கு எட்டியவரையில் அணுகி விட்டு, இதற்கு மேல் ‘எல்லாம் கர்ம வினையின் செயல், நம் கையில் ஒன்றுமில்லை’ என்று கூறிக்கொண்டு ஒதுங்கி விடுகின்றனர்! உண்மையில் கர்மாவுக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் கர்மா என்பதனுடைய விளக்கம் காஸ்மிக் லா அண்ட் ஆர்டர் உடைய சட்ட திட்டங்கள் ஆகும். அதாவது பிரபஞ்சத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாகும்.

‘கர்மா’ என்பதைப் பற்றிய பலதரப்பட்ட மக்களின் இந்தவிதமான தவறான புரிதல்களை மாற்றுவதற்காகவும், கர்மாவைப் பற்றி இலக்கிய பூர்வமாகவும், உளவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்ற முயற்சியிலும் நாம் “கர்மாவை கையில் எடுங்கள்” என்னும் ஓர் அறிய புத்தகத்தையே வெளியிட்டுள்ளோம். உண்மையில் கர்மா என்பது பனிஷ்மென்ட் கிடையாது! கர்மாவை கையிலெடுப்பது சாத்தியமே என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

இந்த புத்தகத்தைப் பற்றிய மேலும் தகவல்களை நீங்கள் இந்த இணைப்பை கிளிக் (click) செய்து பெறலாம். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்து பெறுங்கள்.

rs=w:1440,h:1440

நல்ல குழந்தைகள் அமைவது கூட அவரவர்களுடைய கர்மவினை என்று பலர் சொல்கின்றனர். அதை ஏற்றுக் கொள்வதற்கு பல்வேறு உதாரணங்களையும் கூறுகின்றனர். இப்படி கர்மவினை என்றாலே மதம் சார்ந்த கோட்பாடுகள் இனம் சார்ந்த கோட்பாடுகள் என்று நம்முடைய சிந்தனை முடக்கப்பட்டு அல்லது அடக்கப்பட்டு விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு தெளிவான மனநிலையினை பெறுவதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு ஓர் வாய்ப்பாக அமையும்!

ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் எங்கள் நிறுவனத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்கிறார். ஒரு மூன்றாம் வகுப்பு மாணவனை சந்திப்பதற்காக நேரத்தைக் கேட்கிறார். இரண்டு நாட்கள் கழித்து பெற்றோர் ஒரு அழுகின்ற குழந்தையை கூட்டி வருகின்றனர். அக்குழந்தையைத் தனியே அழைத்து சில மனப்பரிசோதனைகளை செய்து விட்டு உண்மையைக் கண்டு பிடிக்க முடிந்தது. பல நாட்களாக அக்குழந்தை பள்ளி செல்ல மறுக்கிறது. பெற்றோர் முதலில் கொஞ்சுகின்றனர்.

பின்பு கெஞ்சுகின்றனர், பின்பு அடிக்கின்றனர், அதன் பின்பு அவனை இழுத்து செல்கின்றனர். ஆனால், அவன் பள்ளியின் நுழை வாயிலுக்கு அருகில் சென்றவுடன் திரும்பி விடுகிறான்! பள்ளிக்குள்ளே செல்ல மறுக்கிறான். இது தான் அவனுடைய குறைபாடு. இத்தகைய சூழ்நிலையில் தலைமை ஆசிரியர் என்னிடம் அவனை சந்திப்பதற்கான ஒரு சந்திப்புத் திட்டத்தை (appointment) வாங்கினார்.

rs=w:1440,h:1440

ஏன் அவ்வாறு செய்கிறான் என்று மன ஆய்வு செய்தேன். அப்போது ஒரு உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது. பெற்றோர்கள் இருவரும் அவனுக்கு மிகுந்த மதிப்பு கொடுத்து நடத்தி வந்துள்ளனர். அவனிடம் பேசும் பொழுதும், அவனைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் பொழுதும், “போங்க”, “வாங்க”, “அவர்”, “இவர்” என்று தான் பேசுவார்கள். அங்கனம் பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான மதிப்பைப் பெற்று அனுபவித்து வந்த அந்த சிறுவன், அதே அனுபவங்களையே பள்ளியிலும் எதிர்பார்கிறான்.

தன்னுடைய பெற்றோர்கள் அவனுக்கு அளித்த மரியாதையையும், மதிப்பையும் சக மாணவர்களிடமும் வகுப்பாசிரியர்களிடமும் எதிர்பார்கிறான். ஆனால், பள்ளியில் அவனுக்கு கிடைக்கப் பெற்றவை அவனுடைய எதிர்பார்ப்புக்கு முரணான அனுபவங்களே! வகுப்பாசிரியர்  ‘இங்கே வா’, ‘அங்கே போ’  என “மரியாதையில்லாமல்” (அவனைப்பொறுத்தவரை) நடந்து கொண்டார். சக மாணவர்களோ ‘போடா’, ‘வாடா’  என “முரட்டுத்தனமாக” (இதுவும் அவனைப்பொறுத்தவரை தான்) அவனை அழைத்தனர். பள்ளியில் எதிர்பாராமல் நேர்ந்த “கொடுமைகள்” (இது கூட அவனைப்பொறுத்தவரை தான்) அவனுக்கு மிக அதிர்ச்சியைக் கொடுத்தன. அதனால் அவற்றை எல்லாம் தாங்க அவனால் இயலவில்லை என கண்டறிந்தேன்.

பின்பு அக்குழந்தைக்கு உளவியல் ஆலோசனையை அளித்தேன். பயிற்சிக்குப் பின் அக்குழந்தை, பள்ளிச் சூழ்நிலைகளை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் நிலைமைக்கு வந்தது.  பயிற்சியின் பலனைக் கண்டுணர ஏறக்குறைய இரண்டு மாதங்களாகி விட்டது.

M S K THEORY

 “பெற்றோர் ‘புகழ்ச்சி’ அடிப்படையில் ஒரு குழந்தையை புகழப் புகழ, மற்றவர்களும் தம்மை அதேப்போல புகழ வேண்டும் என அந்த குழந்தை எதிர் பார்க்கத் துவங்கி விடும்! மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட செய்திகள் வந்தால் அந்த குழந்தையால் தாங்கிக்கொள்ளவே முடியாமல் போய்விடும்!”

ஆகவே, பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக மரியாதையுடன் பேசி பழகாதீர்கள். அது ஆபத்து விளைவிக்கக்கூடும். Positive Parenting இல் இருக்கும் அடிப்படை பிரச்சனையே இந்த அதீத செல்லம் தான்! அதீத செல்லம், ஆபத்தின் அறிகுறி! (Details: Click Here) இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்பிற்குத் தேவை Positive Parenting அல்ல! True Parenting தான். ஆகவே எங்களது MSK Life Clinic Foundation இல் நாங்கள் True Parenting Forum ஐ உருவாக்கியுள்ளோம். இதைப் பற்றிய தகவல்களை நீங்கள் இந்த video courseஇல் காண முடியும்.

Video Course 1: True Parenting Forum ஓர் அறிமுகம் (PW: 1411)

ஆன்லைன் வகுப்பில் எற்படும் பலவிதமான பிரச்சனைகள்

இதுவரை செல்போன் இன்டர்நெட் இவைகளை பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்தி வந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்பொழுது அதன் மூலமாக கல்வி பெற வேண்டும் அல்லது கல்விக்காக டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்னும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது!

ஆரம்பத்தில் மாணவர்கள் இந்த செல்போன், டிஜிட்டல் சாதனங்களை மிக ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவற்றின் மூலமாக படிக்க வேண்டும்… ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்… டெஸ்ட் எழுத வேண்டும் என்ற கால மாற்றம் ஏற்படும் பொழுது, அவர்களால் முழுமையாக கேளிக்கை என்று சொல்லக்கூடிய என்டர்டெயின்மென்ட் மனப்பான்மையில் இருந்து வெளியே வர முடியாமல், ஆன்லைன் வகுப்புகளை புறக்கணித்து செல்போன் சாதனங்களில் இருந்து வெறுப்புணர்வு கொண்டு வெளியே செல்ல விரும்புகின்றனர். இது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது!

நீண்ட காலமாக எங்களுடைய எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன், மாணவர்களின் நடத்தை மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவு திறனை மேம்படுத்த நடைமுறை ஆய்வுகளை செய்து மாணவர்களை முறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் பயன்பாட்டு உளவியலை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கொடுத்து வருகிறோம்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினை முழுமையாக சரி செய்ய விரும்பினால் நாம் அதனை முதலில் பெற்றோரிடம் தான் துவங்க வேண்டும். அதுவும் திருமணமாகும் காலம் துவங்கி, தாய் கருவுற்றிருக்கும் காலம் வரை இருக்கும் பெற்றோரின் நடத்தைகள் கூட ஓர் குழந்தையின் DNA வில் பதிவாகி இருக்கும். எனவே பெற்றோருக்கும் ‘Marriage Therapy’ மிகவும் அவசியமானது. இதைப்பற்றிய விரிவான விளக்கத்தினை எங்களது MARRIAGE FITNESS for PRE MARITAL & POST MARITAL COUPLE என்ற ஆங்கில புத்தகத்தில் நீங்கள் காண முடியும்.

rs=w:1440,h:1440

இதுவரை ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற்று வரும் மாணவர்களுக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உங்களுக்கு விழிப்புணர்வுக்காக கொடுக்கிறோம். இது போன்ற பிரச்சனைகள் உங்கள் குழந்தைகளிடமும் காணப்படுகின்றனவா என்பதை கொஞ்சம் கவனியுங்கள்!

 1. Online Class பிடிக்கவில்லை என்று சொல்கின்றார்களா?
 2. Online Class-ல் அதிக Homework கொடுக்கின்றனர் என்று சொல்லி அச்செயலை செய்ய சங்கடப்படுகின்றார்களா?
 3. Online Class-ல் எதுவுமே புரியவில்லை என்று சொல்லி எந்த செயலும் செய்யாமல் தப்பிக்கின்றார்களா?
 4. Online Class-ல் கொடுக்கும் பயிற்சிகள் விட, தான் செய்வது தான் சரி என்று பெற்றோர்களிடம் சண்டையிடுகின்றார்களா?
 5. Online Class-ல் எடுக்கும் பாடத்தை பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் தன் இஷ்டம் போல செய்து கொள்கின்றீர்களா? அது தவறு என்று சொன்னால் கோபம் ஆத்திரம் அடைகிறார்களா?
 6. Online Class-ல் தான் இருக்கிறேன் என்று சொல்லி மற்ற தேவையற்ற செயல்களிலில் ஈடுபடுகிறார்களா?
 7. Online Class தான் செய்து கொள்கிறேன் என்று சொல்லி phone-ல் Game விளையாடிக் கொண்டிருக்கிறார்களா?
 8. Online Class-ல் Vedio Call என்றால் சந்தோஷமாக பார்த்துவிட்டு online வகுப்பில் செய்யவேண்டிய பயிற்சிகளை செய்யாமல் நேரத்தை வீணடிக்கின்றார்களா?
 9. Online Class-ல் கொடுக்கப்படும் பயிற்சிகளை செய்ததை பெற்றோர்கள் சரி செய்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் பெற்றோர்கள் மீது கோபப் படுகின்றார்களா?
rs=w:1440,h:1440

10. Online Class-ல் கொடுக்கும் பயிற்சிகளை முழுமையாக முடிக்காமல் பாதி மட்டுமே செய்து விட்டு, எல்லாம் முடித்து விட்டேன் என்று தப்பித்துக் கொள்கின்றார்களா?

11. Online Class அந்த குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் விளையாட்டு, TV போன்ற பொழுது போக்குகளில் அதிகமாக ஈடுபடுகின்றார்களா?

12. Online Class-ல் கொடுக்கப்படும் பயிற்சிகள் என்ன என்பதை பார்க்க பெற்றோர்களை அனுமதிப்பதில்லையா?

13. Online Class-ல் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகள் என்ன என்பதை பார்க்க பெற்றோர்களை அனுமதிப்பதில்லையா? பார்க்க முயற்சி செய்தால் அதை செல்போனிலிருந்து delete செய்து விடுகிறார்களா?

14. Online Class-ல் கொடுக்கப்படும் பரிச்சைகளை பார்த்து எழுதி அனுப்பிவிட்டு 10/10 வாங்கி விட்டேன் என்று சொல்லி பெற்றோர்களை ஏமாற்றுகின்றார்களா?

15. Online Class-ல் பயிற்சிகளை செய்ய கஷ்டப்பட்டுக் கொண்டு தலைவலி, கழுத்து வலி, கை வலி என்று சொல்லி பயிற்சிகளை முடிக்காமல் தப்பித்துக் கொள்கின்றார்களா?

16. Online Class-ல் பயிற்சிகளை பாதி மட்டும் முடித்துவிட்டு இன்று இவ்வளவு தான் என்று சொல்லி பெற்றோர்களை ஏமாற்றுகின்றார்களா?

17. Online Class-ல் பயிற்சிகள் செய்யும் போது கோபம், அழுகை, விளையாடுதல், முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற செயல்களை செய்கின்றார்களா?

18. Online Class-ல் கொடுக்கப்படும் பயிற்சிகளை எழுதும் போது வேக வேகமாக கிறுக்கலாக எழுதுகின்றார்களா?

19. Online Class-ல் செய்யும் பயிற்சிகளை அதற்கான நோட்டில் செய்யாமல் ஏதாவது ஒரு இடத்தில் செய்கின்றார்களா? ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டால் உங்களிடம் வாக்குவாதம் செய்கின்றார்களா?

20. Online Class-ல் உள்ள பயிற்சிகளை செய்ய ஏற்படும் சந்தேகங்களை கேட்க, மற்றவர்களிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருக்கிறார்களா?

rs=w:1440,h:1440

21. Online Class-ல் கொடுக்கப்படும் பயிற்சிகளை செய்து முடித்து விட்டேன். அது என்னவென்று எனக்கு தெரியாது உனக்கு வேண்டுமென்றால் நீ கேட்டுக் கொள் என்று கடுமையாக உங்களிடம் பேசுவது போன்ற செயல்கள் செய்வது உண்டா?

22. Online Class-ல் உள்ள பயிற்சிகளை செய்ய அவசரப்பட்டுக் கொண்டு, தானும் குழம்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்பிக் கொண்டு நேரத்தை வீணடிக்கின்றார்களா?

23. Online Class-ல் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை செய்ய சந்தேகம் உள்ளது என்று சொல்லி அதிக நேரம் phone-ல் மற்றவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கின்றார்களா?

24. Online Class-ல் பயிற்சிகள் எடுக்க எனக்கு தனி phone வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்துகிறார்களா?

25. Online Class-ல் நிறைய படிக்க எழுத கொடுக்கின்றனர்… இது கஷ்டமாக உள்ளது… இது வேண்டாம் என்றும், தனக்கு உடம்பு சரி இல்லை என்றும் சொல்லிக் கொண்டு அப்பயிற்சிகளை செய்ய மறுக்கின்றார்களா?

26. Online Class-ல் எழுத கொடுப்பது அதிகமாக இருக்கிறது… எனக்கு எழுதி எழுதி கை வலிக்கிறது என்று புலம்பிக் கொண்டு அப் பயிற்சியை செய்வதில்லையா?

rs=w:1440,h:1440

27. Online Class-ல் பயிற்சிகள் முடித்தவுடன் அடுத்த பயிற்சிகள் ஆரம்பிக்கும் வரை எந்த செயலும் செய்யாமல் நேரத்தை வீணடிக்கின்றார்களா? பொழுது போக்குகளில் அதிகமாக ஈடுபடுகின்றார்களா?

28. Online Class-ல் கொடுக்கும் பயிற்சிகள் பற்றி பெற்றோர்களாகிய நீங்கள் எது சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் செய்யாமல் உங்களிடம் வாக்குவாதம் செய்கின்றார்களா?

29. Online Class-ல் கொடுக்கப்படும் பயிற்சிகள் எனக்கு எல்லாம் தெரியும் இது கூட உங்களுக்கு தெரியவில்லையா என்று பெற்றோர்களை மற்றவர்கள் முன்பு அவமானப்படுத்துகின்றார்களா?

30. Online வகுப்பில் மற்ற மாணவர்கள் மிக விரைவாக முடித்து விட்டனர், என்னால் முடியவில்லை… அதனால் எனக்கு இந்த வகுப்பு பிடிக்கவில்லை என புகார் சொல்லிக்கொண்டே தப்பித்துக் கொள்ள விரும்புகிறார்களா?

31. ஆன்லைன் வகுப்பு நடக்கும் நேரத்தில் வெளியே சென்று விட்டு நேரத்தை கடத்தி விட்டு எனக்கு மறந்துவிட்டது என சொல்கிறார்களா?

32. ஆன்லைன் உழைப்பு என்று சொன்னவுடன் பயப்படுகிறார்களா?

33. ஆன்லைன் வகுப்பில் சந்தேகம் உள்ளது என சொல்லிக்கொண்டு மற்ற நண்பர்களிடத்தில் அதிகமாக பேசி நேரத்தை வீணடிக்கிறார்களா?

rs=w:1440,h:1440

34. ஆன்லைன் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் அனைத்தும் எனக்கு தெரியும் என்னை ஏன் மீண்டும் சிரமப்பட வைக்கிறார்கள் என புலம்புகிறார்களா?

35. என்னை விளையாட விடாமல், டிவி பார்க்கவிடாமல், செல்போனில் கேம் விளையாட விடாமல் ஏன் ஆன்லைன் கிளாஸில் என்னை ஈடுபட சொல்கிறீர்கள் எனக்கு பிடிக்கவில்லை… நான் விளையாட வேண்டும் என சண்டையிடுகிறார்களா?

இதுபோன்ற மாணவர்களின் நடத்தைக்கு பல்வேறு உளவியல் காரணங்கள் உள்ளன! இவற்றை கண்டறிந்து நீக்குவதற்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனி மனோதத்துவ உளவியல் ரீதியான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை நாங்கள் வழங்கி வருகிறோம்.

இதற்கான சிறப்பு உளவியல் சார்ந்த ‘டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ்’ அதாவது MSK Digital Intelligence skill development Therapyயில் நீங்களும் இணைந்து பயன் பெற முடியும் . இத்தகைய பிரச்சனைகளை Positive Parents ஆல் கண்டிப்பாக கையாள இயலாது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீங்கள் True Parent ஆக மாறவேண்டியது மிக மிக அவசியம்.

M S K THEORY

“காரில் பயணம் போகும் போது டிரைவரிடம் ‘இப்படி ஓட்டு.. அப்படி ஓட்டு… என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி சொல்லிக்கொண்டிருந்தால் அவரால் காரை இயல்பாக ஓட்ட இயலாது. அதேப்போல மாணவர்களுக்கும், Compulsive Education ஐ விட   Impulsive Education  தான் சிறந்து!”

நீங்கள் எந்த அளவுக்கு TRUE PARENT ஆக இருக்கிறீர்கள்?

நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளிடம் TRUE PARENTஆக இருக்கிறீர்கள்? எந்தெந்த விசயங்களில் அவ்வாறு POSITIVE PARENTஆக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் பலவிதமான குழந்தை வளர்ப்பு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நீங்கள் விடு பட முடியும்.

உங்கள் குழந்தைகளை வளர்ப்பது யார்? நீங்கள் தானே?

சரி.. அப்படியானால், உங்களின் குழந்தைகளது படிக்கும் திறன் குறைந்தால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? கண்டிப்பாக அதுவும் நீங்கள் தானே?

OK… நமது அனுபவம் மூலமாக நமது குழந்தைகளை நன்றாகத்தான் படிக்க வைக்கிறோம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் நஉங்களதுகுழந்தைகள் படிப்பதற்கு நீங்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் சோதித்துப் பார்க்க நீங்கள் தயாரா?

இந்த இணைப்பில் 20 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பெண் உண்டு!! நீங்கள் எந்த அளவுக்கு அதிக மதிப்பெண் பெறுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் குழந்தைகள் படிப்பதற்கு சிறந்த வகையில் உதவுகிறீர்கள் என்று பொருள். கேள்விகளை காண இங்கே அழுத்தவும். (Click Here)

rs=w:1440,h:1440

குழந்தைகள் படிக்க மாட்டேன் என அடம் பிடிப்பதற்கான காரணங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக எல்.கே.ஜியிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடம் நடத்தை மாறுபாடுகள் மிக அதிகமாக காணப்படுகிறது. விபரம் தெரிந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை உடனடியாக எங்களது நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, நடத்தை மாற்ற ஆலோசனை வழிமுறைகள் பெற்றுக் கொள்கின்றனர். பலர் அவை வயது ஆக ஆக சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் குழந்தையின் நடத்தை கட்டுப்பாட்டை இழக்கும் போது தான் வருகின்றனர்.

இவை போன்று பல்வேறு விதமான பிரச்சனைகளால் பெற்றோரும், ஆசிரியரும் கவலையடைந்துள்ளார்கள். இதன் அடிப்படைக் காரணம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மன பாதிப்பு தான். மேற்கூறிய நடத்தைகள் குழந்தைகளிடம் காணப்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறை மாற்று ஆலோசனைக்கு குழந்தையை உட்படுத்துதல் அவசியமாகும். அவ்வாறு செய்யவில்லை என்றால் நாளடைவில் அக்குழந்தை, ‘தான் செய்ததே சரி’ என கற்பனை செய்து கொண்டு, மென் மேலும் சமூகத்திற்கு எதிராக நடக்க ஒரு வாய்ப்பாக மாறி விடும்.

இது போன்ற குழந்தைகள் நடத்தை மாறுபாடு இல்லாமல் இருக்க கர்ப்ப காலத்தில் மனோதத்துவ ரீதியிலான மனப்பதிவு மாற்று ஆலோசனை அவசியம்.

rs=w:1440,h:1440

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலை, எதிர்காலத்தைப் பற்றிய பயம், பெற்றோர்களை விட்டு பிரிந்து இருந்தல், கணவன் மனைவி பிரச்சனை, மாமியார் மாமனார் பிரச்சனை, உடல் நல பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமின்மை, பொருளாதார பிரச்சனை, மற்றவர்கள் செலுத்தும் அதிகக் கட்டுப்பாடு, அன்பு பரிமாற்றக் குறைவு, தேவையற்ற பயம் போன்ற பிரச்சனைகள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்டால் மனப்பதிவு மாற்று ஆலோசனை தேவை.

வளர் இளம் பருவ குழந்தைகளிடையே பல்வேறு விதமான குறைபாடுகள் தென்பட்டாலும் குறிப்பிடும் படியான வகையிலுள்ள ஓர் குறைபாடு ‘குழந்தைகளின் எழுத்துத் திறன் மற்றும் நடத்தை சார்ந்த குறைபாடு’ ஆகும். இதனை பெரும்பாலான பெற்றோர்களால் சரிவர கையாள முடிவதில்லை. இதைப்பற்றிய ஓர் விழிப்புணர்வை இந்த வீடியோவில் நாம் காணலாம்.

Video Course 2: குழந்தைகளின் எழுத்துத் திறன் மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வு (PW: 1411)

குழந்தைகள் படிக்க மாட்டேன் என அடம் பிடிப்பதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவற்றை சாதாரணமாக பெற்றோரால் கண்டறிய இயலாது. மாற்றவும் முடியாது. இதனை புரிந்து கொள்வதற்காக ஒரு சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

ஐந்தாவது படிக்கும் மாணவன் ஒருவனை அவனது தந்தை அழைத்து வந்தார். “இவன் சரியாக படிப்பதில்லை… ஒரு நிமிடம் கூட அமர்ந்து படிக்க மாட்டேன் என்கிறான். வகுப்பு அறையில் அடிக்கடி வேடிக்கை பார்க்கிறான். இவனுக்கு பல மருந்துகள் வாங்கிக்கூட கொடுத்து விட்டேன்.

அவன் மாறவில்லை. MSK பவுண்டேஷனில் இவ்வாறான மாணவர்களுக்கு திறன் மற்றும் நடத்தை மேம்பாடு ஆலோசனை பயிற்சி வழங்கப்படுவதாக நண்பர் ஒருவர் சொல்லக்கேட்டு உங்களிடம் வந்தேன். இவனை சரிப்படுத்தி விட்டால் உங்களை நான் மறக்கவே மாட்டேன்” என அந்த தந்தை கூறினார்.

அம்மாணவனை அழைத்து உளவியல் ரீதியாக ஆய்வு செய்தேன். அப்போது தான் தெரிந்தது அவனுக்கு அம்மா இல்லை… இறந்து விட்டார். அவனின் தந்தையிடம் கேட்டேன். அவர் அதைப் பற்றிச் சொல்லி அழுதார். எப்படி அவனது அம்மா இறந்தார் என்று அவர் கூறிய செய்தி மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மாணவன், அவனது அம்மா, அப்பா அனைவரும் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வந்துள்ளனர். எந்தவித கஷ்டமும் இல்லை. ஆனால், இந்த மாணவனின் தாயாரிடம், அவரின் அப்பா (மாணவனின் தாத்தா)அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். அதில் ‘இன்று தனக்கு இவ்வளவு பணம் வியாபாரத்தில் நஷ்டம்’ என தினமும் நஷ்டக்கணக்கை கூறுவார். இதைக் கேட்ட மாணவனின் தாயார், தனது பெற்றோர் கஷ்டப்படுகிறார்கள் என அடிக்கடி கவலைப்பட்டதால் மூளையில் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு ஒரு கை, கால் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்! ஒரு வருடம் அளித்த மருத்துவம் பயனளிக்காமல் இறந்து விட்டார்.

rs=w:1440,h:1440

இதைக் கேட்டதும் நான் அந்த மாணவனின் தந்தையிடம் ஏன் உளவியல் ஆலோசனை எடுத்துக்கொள்ளவில்லை என கேட்டேன். அவரோ, தனது மனைவிக்கு கை, கால்கள் செயல்படாததற்குத் தான் மருத்துவம் பார்த்தேனே தவிர, அதை உருவாக்கிய மன அழுத்தத்திற்கு உளவியல் ஆலோசனை எடுக்க வேண்டும் என தெரியவில்லை எனக்கூறி அழுதார். இவர்கள் யாவரும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் நண்பர்களே… உடல் நோய் என்பது வெளியில் தெரியும். ஆனால் வெளி நோயை உருவாக்குவது உள்ளே உள்ள உள இயக்கம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு அடிக்கடி நோய் முற்றினாலும் மருந்து பயனில்லாமல் போவது, கை, கால் சரியாக செயல்படாமல் இருப்பது, தலைவலி, படபடப்பு, திடீரென அழுகை போன்றவை உள பாதிப்பு ஏற்பட்டதன் வெளி அடையாளம் என்று புரிந்து உளவியல் ரீதியாக ஆய்வு செய்து உளவியல் பாதிப்பை சரி செய்தால் இவ்வாறு ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

இப்படி அம்மா இறந்த சோகம் மாணவனுக்கு மனதில் மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆறு மாத மனோதத்துவ ஆலோசனைக்குப் பின், தற்போது பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளான்.

M S K THEORY 

“உங்கள் குழந்தைகளை வளர்ப்புப் பிராணிகளைப் போல வளர்க்க வேண்டாம். மீன்தொட்டியில் வளர்த்த மீனை கடலில் கொண்டுபோய் விட்டால் அது அந்த சூழ்நிலையினை சமாளிக்காது! அதேரீதியில் வளர்ப்பு பிராணிகளைப் போல வளர்க்கப்பட்ட, பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் இல்லாத குழந்தைகள் வாழ்வியல் ரீதியாக ஊனமுற்ற குழந்தைகளே!!”

rs=w:1440,h:1440

10 ஆவது வகுப்பு மாணவனை அவனுடைய தந்தை அழைத்து வந்தார். “அவன் அடிக்கடி கோபப்படுகிறான். என்றும் பள்ளியில் இருந்து வந்தவுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுகிறான்… படிப்பை பெருமளவில் புறக்கணிக்கிறான்.” இது பெற்றோருடைய புலம்பல்.

அவனுடைய மதிப்பெண்ணை பற்றி கேட்டேன். அவன் மூன்று பாடங்களில் தவறி விட்டதாக தகவல். அந்த தந்தை ஆசிரியப் பணி செய்கிறார். இந்த ஆசிரிய பெருமகனுடைய மகனுக்கு ஏன் இப்படி நேர்ந்தது?

அந்த மாணவனிடம் தனிப்பட்ட முறையில் மன ஆய்வை நடத்தினேன். ஆய்வு மூலமாக ஒரு உண்மை வெளிவந்தது. தெரிந்தோ தெரியாமலோ தகப்பனார் அவனுடைய மனதில் தவறான எண்ணத்தை விதைத்திருக்கிறார். மகனுடைய படிப்பை தன்னுடைய தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டார்.

ஆசிரியரின் மகன் என்பதால் நன்றாக படித்து உயர்ந்த மதிப்பெண் வாங்குவது புறக்கணிக்க முடியாத பொறுப்பு என்று அவனை புரிய வைக்க முயன்றிருக்கிறார்.  “நீ யார் என்று தெரியுமா? ஆசிரியரின் மகன். நீ படிக்கவில்லை எனில் எனது மானமே கப்பலேறும். நான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் படிக்கின்றார்கள்.” இந்த அறிவுரையை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தார். மகனுக்கு தொல்லையாக அமையும்படி தகப்பனார் வார்த்தைகளால் கத்தினார்.

rs=w:1440,h:1440

தந்தையின் ஆசிரியப் பட்டமும் அந்தப் பொறுப்புக்கேற்ற தன்மானமும் மகனுக்கு பெருஞ்சுமையாக மாறிற்று. அந்தச் சுமையால் அவன் சோர்வடைந்தான்.

“உனக்கு என்ன கேடு?” என்று படிப்பில் தங்களுடைய எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் மகனை, பெற்றோர்கள் திரும்பத் திரும்ப திட்டியபொழுது, அவனுடைய மனமுடைந்தது. அவனுடைய மன உளைச்சல் பெருங்கோபமாக உருவம் கொண்டது. மனம் பாறை போல் கடுமையானது. அவனிடம் பழி வாங்கும் எண்ணம் பிறந்தது.

“என்னுடைய திறமைகளை, ஆளுமையை பொருட்படுத்தாத பெற்றோர்களுக்கு தங்கள் மானம் தான் பெரிதா? அப்படியென்றால், அவர்கள் மானம் போனால் தான் நான் நிம்மதி அடைவேன்.” என ஊரறியும் படி நடக்கலானான். இந்த சூழ்நிலையில் தான் தந்தையார் மகனை அழைத்து வந்தார்.

அவனுக்கு வாரம் ஒரு முறை உளவியல் சார்ந்த மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின் அவன் வகுப்பில் முதலிடம் அடைந்தான்.

M S K THEORY

 “உங்கள் குழந்தைகளை உங்களுடைய விருப்பத்திற்கும், ஆசைக்குமாக வளக்காதீர்கள்/ இந்த உலகின் இயல்புக்குத் தகுந்தாற்போல பழக்குங்கள்”

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் தன்னுடைய மகனுடன் எங்கள் பவுண்டேஷனுக்கு வந்தார். அதிகமான எண்ணிக்கையிலான மருத்துவ சீட்டுகளுடன் தன் உதவியாளரையும் உடன் அழைத்து வந்தார்.

“மூன்று ஆண்டுகளாக தொடர் சிகிச்சை அளித்தும் இதுவரையில் தன் மகனுக்கு எந்த நோயும் குணமாகவில்லை” என்று தன் மகனைப் பற்றி கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

“என்னுடைய மகன் மிக நல்லவன், மிகவும் புத்திசாலி. வகுப்பில் மதிப்பெண் அதிகம் வாங்குவான். ஆனால் காலையில் எழுந்தவுடன் புலம்பிக் கொண்டே இருப்பான். அளவை மீறி சுத்தம் பார்ப்பான், பேருந்துப் பயணம் செய்ய விரும்ப மாட்டான். ரயில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முதல் வகுப்பு, குளிர் சாதன வசதி இருந்தால் மட்டும் தான் வருவான். வீட்டில் சிறு குப்பை இருந்தாலும் உடனே கோபப்படுவான்.

rs=w:1440,h:1440

மேலும் அவன் தனிமையை விரும்புகிறான். அடிக்கடி வயிற்று வலி உள்ளதாகக் கூறுகிறான். தலை வலியும் அவனுக்கு உள்ளது. எதற்கெடுத்தாலும் கோபப்படுவான். அவன் பள்ளிக்குச் சென்ற இரண்டு மணி நேரத்திற்குள் பள்ளியில் இருந்து அழைப்பு வரும். என்னவென்று கேட்டால் ‘உடனே வந்து உங்கள் மகனை அழைத்து செல்லுங்கள்,

அவனுக்கு உடல் நிலை சரியில்லை’ என்று கூறுவார்கள். நாங்கள் உடனடியாகச் சென்று அவனை அழைத்து வந்து மருத்துவமனைக்குச் செல்வோம். அடுத்த நாள் மீண்டும் இதே சிக்கல் வரும். இப்படியாக வருடங்கள் பல கடந்து விட்டது. இப்போது பத்தாம் வகுப்பிற்கு செல்கிறான்”என்று அந்தத்தாய் கண்ணீருடன் சொல்லி முடித்தார்.

பின்பு அந்த மாணவனை உள ஆய்வு செய்தோம். அவன் கூறிய விஷயம் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “சார், எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு ஏன் இப்படி நடக்கிறது” என்று அழுதான். மீண்டும் உள ஆய்வு செய்த போது தான் பல விசயங்கள் தெரிந்தது. அதாவது அந்த சிறுவனின் தந்தையும் ஓர் உயர் அதிகாரி தான். அவனுக்கு அதிகமாக அறிவுரை கூறி, அவனை மிகப்பெரிய கற்பனை உலகத்தில் தள்ளி விட்டு உள்ளார்.

அம்மாவும் தினமும் தனது அலுவலகத்தில் வேலை வாங்குவது போல் ஒவ்வொரு மணி நேரமும், “நீ இப்படி இரு, அப்படி இரு, அவர்கள் மோசம், இவர்கள் மோசம், நீ யாருடனும் சேரக் கூடாது, எங்கள் தகுதிக்கு ஏற்ப இருக்க வேண்டும், நீ மிகவும் உயர்ந்தவன், உன்னை வைத்து தான் எங்களது மானம் மரியாதை உள்ளது’ என்றெல்லாம், தனது மகன் தனிப்பிறவி என்பது போல அவனுக்கு வசதிகள் செய்து கொடுத்து, அவனின் மனதைக் கெடுத்து வைத்துள்ளனர். இதன் விளைவாக, அவன் இயல்பு நிலையில் வாழ முடியாமல் பயம், வெறுப்பு, மற்றவர்களைப் பற்றி தாழ்வு எண்ணம் போன்ற மனக்கலக்கங்களும், குழப்பங்களும் உண்டாக, உடல் நோய்களும் உருவாகி விட்டிருக்கிறது!

rs=w:1440,h:1440

தொடர் மருந்தில்லா மனோதத்துவ ஆலோசனை மூலமாக இப்போது அவன் நலமாக உள்ளான். அவனுடைய பெற்றோர்கள் அலைபேசி மூலம் எங்களை அடிக்கடி தொடர்பு கொண்டு அவன் இயல்புநிலைக்கு வருவதைப் பற்றி எங்களிடம் கூறி,மிகவும் நெகழ்ச்சியும் ஆனந்தமும் அடைகின்றனர்.

M S K THEORY

“எதிர்பார்ப்பு என்பது வேறு… திட்டம் என்பது வேறு… எதிர்பார்ப்பு என்பது இயலாத நிலையில் ஏங்குதல். திட்டமிடல் என்பது செயல்படுத்தத்தக்கது. குழந்தைகளிடம் பெற்றோர் எதையோ எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சரியான செயல்பாடு அல்ல. தேவை திட்டமிடல் மட்டுமே…”

குழந்தைகள் பெற்றோர்களை மதிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்

நாம் ஏற்கனவே கூறியது போல, உங்கள் குழந்தைகளை வளர்ப்பது யார்? நீங்கள் தான். உங்களின் குழந்தைகளது படிக்கும் திறன் குறைந்தால் அதற்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் இருந்தால் என்ன செய்வது? உண்மையில் இதற்கும் இரண்டு வகையான காரணங்கள் இருக்கலாம்.

1. பெற்றோரிடம் உள்ள மன அழுத்தம் மற்றும் சோம்பேறி மன நோய்

2. குழந்தைகளிடம் உள்ள நடத்தை சார்ந்த குறைபாடுகள்.

முதலில் பெற்றோர்களிடம் மன அழுத்தம் மற்றும் சோம்பேறி மன நோய் அறிகுறிகள் இருக்குமானால் அவை உடனடியாக கண்டறியப்பட்டு களையப்பட வேண்டியது அவசியம். ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர் தங்களுக்கு மன அழுத்தம் மற்றும் சோம்பேறி மன நோய்கள் இருப்பதை உணர்வதும் இல்லை. ஒத்துக்கொள்வதும் இல்லை. இதைப்பற்றிய மேலும் விரிவான விளக்கத்தினை இந்த video courseஇல் நீங்கள் காணலாம்.

Video Course 3: பெற்றோர்களின் மன அழுத்தம் மற்றும் சோம்பேறி மன நோய் அறிகுறிகள் (PW: 1411)

அடுத்து கவனிக்கப்பட வேண்டியவை குழந்தைகளிடம் உள்ள நடத்தை சார்ந்த குறைபாடுகள். இவற்றையும் சாதாரணமாக பெற்றோரால் கண்டறிந்து நீக்கிவிட முடியாது. ஏனென்றால் அவை ஏற்படுவதற்கு ஆழமான உளவியல் காரணங்கள் இருக்கலாம். அவற்றை சரியான உளவியல் நிபுணரால் மட்டுமே கண்டறிய முடியும்! இதை விளக்க எங்களது அனுபவங்கள் சிலவற்றை இங்கே தருகிறோம்.

ஒரு நாள் ஒரு +1 மாணவியை அழைத்து வந்தனர் அவளுடைய பெற்றோர். அவள் எப்பொழுதும் பெற்றோர்களை எதிர்த்துப் பேசுபவள். வகுப்பாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் கடித்து பேசுவது வழக்கம். யாருடைய அறிவுரைகளுக்கும் அவள் செவி கொடுக்கவில்லை.

தான் செய்வதெல்லாம் சரி என நடந்து கொள்வாள். குறைந்த மதிப்பெண் பெற்றாலும், அதைப் பற்றி கவனமோ கவலையோ அவளுக்குக் கிடையாது. “நான் முடிந்த அளவுக்குத் தான் படிப்பேன்” எனப் பிடிவாதமாக கூறுவாள்.

நான் அந்த மாணவிக்கு உளவியல் ஆய்வு நடத்தினேன். அவளுடைய நடத்தையின் காரணத்தை கண்டறிய முடிந்தது. அவள் பெற்றோர்களுக்கு செல்லக் குழந்தை. எப்போதும் தனது மகளைப் பற்றி அவர்கள் மிகப் பெருமையாக உறவினர் மத்தியில் பேசுவார்கள். சிறு வயதிலிருந்தே மகளை ஒருபோதும் அவர்கள் திட்டியது கிடையாது. அவளுக்கு ஒரு குறையேனும் இருப்பதாக ஏற்றுக் கொண்டதுமில்லை. மற்றவர்கள் யாராவது மகளுடைய குறையை ஏதாவது சுட்டிக்காட்டினால் பெற்றோர்களே அவளுக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள். வகுப்பில் வாங்கும் மதிப்பெண் மற்றும் அவளுடைய நடத்தையை பற்றி பள்ளி ஆசிரியர்கள் கண்டிக்கும் போது உடனடியாக ஆசிரியரிடம் சென்று “எங்கள் மகள் மிகவும் நல்லவள்.

rs=w:1440,h:1440

அவள் படிக்காததற்கு காரணம் நீங்கள் சரியான முறையில் பாடம் நடத்தவில்லை என்பதே… என் மகள் எது செய்தாலும் மிகவும் சரியாகத் தான் இருக்கும்… தவறு உங்கள் பக்கம் தான்.” என மகள் முன்னிலையில் ஆசிரியரைப் பொருட்படுத்தாமல் பேசுவார்கள். மகளுடைய இயல்பு உருவாக்குவதில் பெற்றோர்களின் அணுகுமுறை தவறானது என்று சொல்ல வேண்டியதில்லை. அவர்களுடைய குழந்தைப்பாசம் வழி தவறி சென்றதால் கவலைக்குரிய விளைவுகள் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

தன்னைக் குறித்து, “நான் முற்றிலும் சரியானவள்… மற்றவர்கள் முழுமையாக தவறானவர்கள்” என்றும் அபாயகரமான முடிவுக்கு வந்து விட்டாள். பெற்றோர்களுக்கு “எந்த குறையுமில்லாத ஒரு குழந்தை” ஒன்று உருவானது.

அந்த மாணவியின் ஆளுமையில் உறைந்து போன இன்னாத கருத்துகளை முறியடித்து இனிய மனப்பான்மையை அமைத்துக் கொடுக்க நீண்ட நாள் தேவைப்பட்டது.

M S K THEORY

“நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்காகவே ஒவ்வொன்றையும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் குழந்தை, ‘தனது வேலை குறைவு’ என்றும் ‘மற்றவர்களே அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள்’ என்ற மனப்பான்மையோடும் வளர்ந்து விடும்!”

ஆக பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளிடம் எற்படும் நடத்தை சார்ந்த குறைபாட்டிற்கு பெற்றோர்களே காரணமாக அமைந்திருப்பதை நாம் காண முடியும். எனவே முதலில் பெற்றோரை உளவியல் ரீதியிலாக ஆய்வு செய்த பிறகுதான் குழந்தைகளை ஆய்வு செய்து சரிப்படுத்த முடியும். ஏனென்றால் பெரும்பாலான பெற்றோருக்கு குழந்தைகளை வளர்க்க வேண்டுமா? அல்லது பழக்க வேண்டுமா? என்பது கூட தெரிவதில்லை. உண்மையில் வளர்ப்பது என்பது உடல் சார்ந்தது. பழக்குவது என்பது மனம் சார்ந்தது.

உங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டாம், பழக்குங்கள். ‘வளர்த்தல்’ என்பது உடல் சார்ந்தது. ‘பழக்குதல்’ என்பது மனம் சார்ந்தது. அதாவது பழக்குதல் எனபது ஒரு குழந்தையை செயலுக்கு உட்படுத்துதல் ஆகும்! உங்கள் குழந்தைகளுக்கு ‘உலகம் இப்படித்தான் இருக்கிறது, என்று காட்டுங்கள்… அது போதும்! இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள குழந்தைகளை வளர்க்க வேண்டுமா? பழக்க வேண்டுமா? என்னும் இந்த video courseஐ பாருங்கள்

Video Course 4: குழந்தைகளை வளர்க்க வேண்டுமா? பழக்க வேண்டுமா?(PW: 1411)

குழந்தைகளை மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் தான் சேர்ப்பேன் என பெற்றோர் அடம் பிடிப்பதால் எற்படும் விளைவுகள்

தானறியாமல் தனது மனதில் பதிவான அனுபவங்களில் தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் பார்க்கின்றனர். தான் அனுபவிக்க முடியாதவை எல்லாம் தன் குழந்தை அனுபவிக்க வேண்டும்… தனக்கு கிடைக்காத பெருமைகள் தன் குழந்தைக்கு கிடைக்க வேண்டும்… என்கின்ற எண்ணங்களுடன் பலர் தங்கள் குழந்தைகளை தங்கள் வருமான நிலையை மீறி மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கின்றனர்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எங்களது லைப் கிளினிக் பவுண்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தையை மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் சேர்க்கப் போகிறோம்… ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை கட்டணம் உள்ளது… அங்கேயே மாணவர்களுக்கு தங்கும் விடுதி உள்ளது… எங்கள் குழந்தை எங்களிடம் இருந்தால் நாங்கள் சொல்வதை கேட்க மாட்டான்… என்று கூறினார்கள்.

பின்பு அக்குழந்தையின் நடத்தைகளை ஆய்வு செய்து விட்டு, “உங்கள் குழந்தைக்கு உள்ள உள நடத்தை சார்ந்த பிரச்சனையை சரி செய்து விடலாம். நீங்கள் உங்கள் வருமான வரம்புக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தில் சேர்த்து விடுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள், “சார்… நாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை… அவன் மிக உயர்ந்த நிலையில் வாழ வேண்டும்” என்று கூறி விட்டுச் சென்று விட்டனர். ஆனால் சென்ற வாரம் அக்குழந்தையை அழைத்து வந்தனர்.

rs=w:1440,h:1440

தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் என்றும் எட்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்ததை நினைவுபடுத்தி விட்டு இருவரும் அழுதனர். குழந்தையை வெளியே காத்திருக்க வைத்து விட்டு, “என்ன பிரச்சனை? ஏன் அழுகிறீர்கள்” என கேட்டேன். “சார், எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன் கூறியதை நாங்கள் செயல்படுத்தவில்லை. தற்போது தினம் தினம் சாகின்றோம்.” என்றனர்.

என்ன பிரச்சனை? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “எங்கள் குழந்தை எங்களைப் பார்த்து, “நீங்கள் எல்லாம் பெற்றோர்களா? பிச்சைக்காரர்கள். என்னுடன் படிக்கும் மாணவர்களின் அப்பா, அம்மா 20 லட்சத்தில் வைத்துள்ளனர். என் நண்பன் 50 ஆயிரத்தில் செல்போன் வைத்துள்ளான். அவர்கள் வீடு 7 கோடியில் உள்ளது.

அவனுக்கு தனி ஆப்பிள் லேப்டாப் உள்ளது. நீங்கள் என்னை பள்ளிக்கு அழைக்க வர வேண்டாம். உங்களை பெற்றோர் என்று நண்பர்களிடம் அறிமுகப்படுத்த பிடிக்கவில்லை. நீங்கள் என் தகுதிக்கு நிகரானவர் இல்லை. எனக்கு உங்களுடன் வாழப் பிடிக்கவில்லை.

என் நண்பர்கள் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ரூ. 50 ஆயிரம் பாக்கெட் மணியாக செலவு செய்கின்றனர்.” என்றெல்லாம் தங்கள் குழந்தை தங்களை இகழ்வதாகக் கூறினர். பிறகு அவர்கள் அதிர்ச்சியான ஒரு செய்தியையும் கூறினர். அவர்கள் அந்த உயர்ந்த நிறுவனத்திலிருந்து அவனை மாற்றி அரசு பள்ளியில் சேர்த்ததாகவும், ஆனாலும் அவன் அவர்களை மிரட்டுவதாகவும் கூறினார்.

பிறகு அவர்களை, “நீங்கள் தொடர் உளவியல் நடத்தை மேம்பாட்டு சிகிச்சைக்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தேன். இதே போல் பல பெற்றோர்கள் தகுதிக்கு மீறி, ஆடம்பரமான கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளைப் படிப்பதற்காக சேர்த்து விட்டு, அந்த பிள்ளைகளாலேயே கஷ்டப்படுகின்றனர். இதை புரிந்து கொள்ள பலருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகின்றன.

True Parenting பற்றிய பலவிதமான விரிவான விளக்கங்களையும், பெற்றோருக்குத் தேவையான பலவிதமான தகவல்களையும் எங்களது ‘Don’t Be a Positive Parent‘ என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் தந்துள்ளோம். இந்த புத்தகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த இணைப்பினை click செய்து தெரிந்து கொள்ளவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்து காணவும்.

rs=w:1440,h:1440

M S K THEORY

“ஒவ்வொரு மாணவனும் தங்களது தரத்தை உயர்த்துவதற்குத் தான் கல்வியே தவிர, பெற்றோர் தங்கள் குழந்தைகளை ‘இந்த மாதிரியான பள்ளியில் இணைத்து விட்டார்கள்’ என்று பெருமை பேசுவதற்காக அல்ல கல்வி. இதனை முதலில் பெற்றோரும் பின்பு மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.”

மற்றுமொரு அனுபவத்தினை இங்கே கூறியாக வேண்டும்.

ஒரு பெற்றோர் எங்களுடைய நிறுவனத்திற்கு வந்து, “சார், என் குழந்தையோடு மிகவும் கஷ்டத்துடன் வாழ்கிறேன். நாங்கள் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை. அவள் கேட்டதை உடனடியாக நாங்கள் செய்கின்றோம். எந்த பலனும் இல்லை.” என்று புலம்பினர். அதோடு,

“ஆறாவது படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம்… ஆனால் அந்த பள்ளியில் விளையாட்டு பாடம் இல்லை என்று கூறி வேறு பள்ளியில் சேர்த்தோம்.  பின்பு 8 ஆம் வகுப்பில் ‘இங்கு விளையாட்டு உள்ளது, ஆனால் ஆசிரியர் சரியில்லை’ என்று கூறி வேறு பள்ளியில் சேர்த்தோம். பின்பு 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விட்டது.

‘இனி +2 வில் பார்த்துக் கொள்ளலாம்… இதனை பற்றிப் பேசக் கூடாது’ என்று சொன்னாள். +2 விலும் மதிப்பெண் சுமாராகத்தான் இருந்தது.  ‘இது முக்கியமில்லை. கல்லூரியில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி விட்டு, குறிப்பிட்ட கல்லூரியில் தான் சேர வேண்டும் என அடம் பிடித்தாள். அவள் விரும்பிய கல்லூரியிலேயே சேர்த்து விட்டோம். இப்போது அங்கு சேர்ந்த பின்பும், இந்தப் படிப்பு பிடிக்கவில்லை, எனக்கு வேறு படிப்பு படிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்,” என்று அழுது  கொண்டே கூறினர்.

நான் அவர்களிடம் இந்த உண்மையைக் கூறினேன். “உங்களின் குழந்தையின் விருப்பம் என்பது ஆசை, இது இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை! ஆனால் திறமை என்பது செயல்படக்கூடிய தன்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், பலர் தங்களின் குழந்தைகளின் விருப்பத்தையே செயல்படுத்திக் கொடுத்து தோல்வியடைந்து விடுகின்றனர்.

rs=w:1440,h:1440

கல்லூரி அல்லது பள்ளியில் உங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் போது, உங்களின் பெருமைக்கும் உங்களின் தகுதிக்கும் ஏற்றது போல் உங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்களின் குழந்தைக்கு என்ன திறமை உள்ளது என்று எப்பொழுதும் நீங்கள் கண்டறிய முடியாது. அதற்கென தனி உள ஆய்வு உள்ளது.” என்று நான் கூறியதைக் கேட்ட அந்த பெற்றோர்கள், “என் மகள் எங்கும் ஆலோசனை பெற வரமாட்டேன் என்கிறாள்” என்று கூறினர்.

ஒரு குழந்தை ஆலோசனையை மறுத்தல் , அதிகமாகக் கோபப்படுதல், தனது தேவையை பூர்த்தி செய்ய அடம் பிடித்தல், மற்றவர்களை ஈர்க்கும் படி நவீனமான அலைபேசி மற்றும் ஊர்தியை வாங்குதல், பெற்றோர்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுதல், இரவில் வீட்டுக்கு வராமல் மற்ற இடங்களில் தங்குதல், நீண்ட நேரம் வெளியே சுற்றுதல், தேவையில்லாமல் பணம் செலவு செய்தல்,

‘நான் பின்னாளில் அப்படியாவேன், இப்படி இருப்பேன்’ என்று பெருமை பேசுதல், உடன் பிறந்தவர்களிடம் சண்டை போடுதல், படிப்பதில் ஆர்வம் குறைந்திருத்தல் இவை போன்ற அறிகுறிகளை குழந்தையின் நடத்தையில் பார்க்கும்பொழுது, மேம்பாட்டு ஆலோசனை எடுக்க பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ‘பின்னாளில் சரியாகி விடும்’ என்று நம்பி ஏமாற்றமடைகிறார்கள்.

ஆகவே பெற்றோர்களே, உங்களின் குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்காணியுங்கள். நடத்தையில் மாறுபாடு ஏற்பட்டால் காலந்தாழ்த்தாமல் உடனடி ஆலோசனை பெற்று உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளி மயமாக்குங்கள்.

M S K THEORY

 “கடமை அளவு குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் செலவு செய்தால் பணம் சேமிப்பாக மாறும். பெருமை அளவிற்கு குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், சமூகத்திற்கும் செலவு செய்தால் அது கடன் சுமையை அதிகரித்து விடும். பணம் என்பது உழைப்பின் உருமாற்றம். பணத்தை பெருமைக்காக செலவு செய்வதும், உழைப்பை வீண் செய்வதும் ஒன்றுதான்”

வயது முதிர்ந்த காலத்தில் இத்தகைய பிரச்சனைகளால் எற்படும் தாக்கம் மிகவும் ஆழமானது!

எங்கள் நிறுவனத்திற்கு 60 வயது முதிர்ந்த அம்மா ஒருவர் வந்தார். அவர், “சார், நான் இப்போது தனியாக வீட்டில் இருக்கிறேன். என் மகள் கனடாவில் பணியாற்றுகிறாள். என் கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஓடி விட்டன. எனக்கு உடல் நிலை சரியில்லை. ஆகவே நான் இறக்கும் போது எனது உடலை மருத்துவமனைக்கு ஒப்படைக்க வேண்டும். நான் எங்கு இது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்?” எனக் கேட்டார்.

“ஏன் இப்படி முடிவெடுத்தீர்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அந்த அம்மா சொன்ன பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

எனக்கு ஒரே மகள்… அவளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு உயர் தர பள்ளியில் விடுதி வசதியுடன் படிக்க வைத்தேன். அவள் நன்றாகப் படித்தாள். ஆனால் விடுப்பு நாட்களில் கூட வீட்டில் அவளை தங்க வைக்காமல், உறவினர் வீட்டிற்கு கூட அனுப்பாமல், மீண்டும் மீண்டும் படிக்க வைத்து விட்டோம். படித்து முடித்து விட்டு இப்போது நன்றாக சம்பாதிக்கிறாள். எனக்கு மகளைப் பார்க்க ஆசை.

ஆனால் அவள் வர விரும்பவில்லை. நான் அவளிடம் “இறப்பதற்குள் உன்னை பார்க்க வேண்டும்” என்று கூறினேன். ஆனால் அவள், “மன்னிக்கவும். நான் வர முடியாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் ஒரு சமூக அமைப்பிடம் உங்களை இறந்தவுடன் எரிப்பதற்கு பணம் கட்டி விட்டுள்ளேன்” என்றுகூறினாள்.

rs=w:1440,h:1440

இதனால் தான் என் உடலை மருத்துவமனைக்கு கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறினார். “நான் ஆரம்ப காலங்களில் எனது குழந்தையை வீட்டை விட்டு வெளியே தங்க வைத்து படிக்க வைத்தால் நன்றாக படித்து பின்பு எங்களை காப்பாற்றுவாள் என்ற எனது நம்பிக்கை போலியானது என எனக்கு இப்போது தான் புரிந்தது” என்றும் கூறினார்.

M S K THEORY

ஒரு மனிதனுடைய வாழ்வில் அத்தனை வகையான சுவைகளும் வரவேண்டும்! இனிப்பை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உணவு திகட்டி விடும். அதேப்போல கோபம், வெறுப்பு, அன்பு பாசம் போன்ற அத்தனை உணர்சிகளையும் ஒரு குழந்தை சமாளித்திருந்தால் மட்டுமே அந்த குழந்தை உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் எதிர்கொண்டு அவற்றை சமாளிக்கும் திறமையோடு வளரும்!”

அறிவு, நம்பிக்கை மற்றும் உண்மை என்பவை வெவ்வேறானவை என்பது அதிகமான மனிதர்களுக்குப் புரிவதில்லை. பெரும்பாலானவர்கள் காலத்திற்கேற்ப தன்னம்பிக்கை, அறிவு, உண்மை இவற்றை திருத்தி அமைக்க விரும்பாமலும் அந்த சுய நம்பிக்கை, சுய அறிவு இவற்றில் உள்ள உண்மையை அறிய விரும்பாமலும், மாற்ற விரும்பாமலும் அதை உறுதிப்படுத்தி அதனைப் பிறர் மீது சுமத்துகின்றனர்.

அதிகமான மாணவர்கள் தங்கள் கல்வி, தொழில் இவற்றில் முன்னேற்றம் இல்லாமல் போவதற்கு காரணம், பெற்றோர்கள் தாங்களாகவே சில உண்மையற்ற நம்பிக்கை சார்ந்த அனுமானங்களை அறிவாக நினைத்துக் கொண்டு அதனை மேலாண்மை செய்து தங்கள் குழந்தைகள் மீதும் திணிப்பதுவும்,  சில சமயம் கட்டாயப்படுத்துவதுமே ஆகும்.

அறிவு என்பது இப்போதைய சூழ்நிலைக்கு இந்தக் காலகட்டத்தில் எது பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து, புரிந்து செயல்படத் தூண்டும் மனத்திட்டமாகும்.

அறிவில் சரியான செயல்பாடு வெளிப்படவில்லையெனில், அத்துறை சார்ந்த நிபுணர்களிடம் அறிவு ஆலோசனை பெற்று மேன்மையடைவது தான் ‘கார்ப்பரேட் நாலேஜ்’ எனப்படும் உயர் நிறுவன அறிவாகும். நம்பிக்கை வேறு, உண்மை வேறு என்பது அனுபவப்பட்டு அடிப்பட்ட பின் புரிந்து என்ன பயன்? நம்பிக்கை வீண் நம்பிக்கையாகவும், மூட நம்பிக்கையாகவும் மாறாமல் இருக்க நம் அறிவு, உண்மைக்கு உடன்பட்டு இருக்க வேண்டும்!

rs=w:1440,h:1440

குழந்தைகளை பெரும்பாலும் ஏசி ரூமிலேயே வைத்து, அவர்களை புகழ்ந்து பேசியே எல்.கே.ஜி முதல் +2 வரை படிக்க வைத்து வெளியே அனுப்பி விடுகிறார்கள்! இப்படி வளரும் குழந்தைகள் யதார்த்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல், எதிர்பார்ப்பதையே வாழ்க்கையின் வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள்!

உயர் கல்வி முடித்து வேலைக்குச் சென்றாலும், வசதியான சூழ்நிலைகளை எதிர்பார்த்துக்கொண்டு சரியாக வேலையை செய்யாமல், தங்களைத் தாங்களே நோயாளியாக மாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், தங்களால் எதையும் வாழ்வில் சாதிக்க முடியவில்லை என்ற தவறான முடிவுக்கும் வந்து விடுவார்கள்!

எல்லா தேவைகளையும் எப்போதுமே பூர்த்தி செய்து பெற்றோரையே குழந்தைகள் சார்ந்திருக்கும் படி செய்த பிறகு, அந்த சார்ந்திருத்தலில் குறைபாடு ஏற்படும் போதும், பெற்றோர் அவர்களை நெறிப்படுத்த முயற்சி செய்யும் போதும், அந்த குழந்தைகள் அவர்களுக்கு எதிராளியாக மாறிவிடும்!

ஒவ்வொரு மாணவனும் தங்களது தரத்தை உயர்த்துவதற்குத் தான் கல்வியே தவிர, பெற்றோர் தங்கள் குழந்தைகளை ‘இந்த மாதிரியான பள்ளியில் இணைத்து விட்டார்கள்’ என்று பெருமை பேசுவதற்காக அல்ல கல்வி!! இதை முதலில் பெற்றோரும் பின்பு மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்!

உங்கள் குழந்தைகளை உங்களுடைய விருப்பத்திற்கும், ஆசைக்குமாக வளர்க்காதீர்கள்… இந்த உலகின் இயல்பிற்குத் தகுந்தாற்போல பழக்குங்கள்!

ஒரு குழந்தை செய்வதை பெற்றோர் ‘சரி’, ‘சரி’ என்று சொல்லும் போது அந்த குழந்தை இந்த உலகத்தில் ‘அது தான் சரி’ என்று எடுத்துக் கொள்ளும்! அதனுடைய விளைவு மிகப்பெரிய தவறாகப் போய்விடும்!!

பெற்றோர் ‘புகழ்ச்சி’ அடிப்படையில் ஒரு குழந்தையை புகழப் புகழ, மற்றவர்களும் தம்மை அதேப்போல புகழ வேண்டும் என அந்த குழந்தை எதிர் பார்க்கத் துவங்கி விடும்! மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட செய்திகள் வந்தால் அந்த குழந்தையால் தாங்கிக்கொள்ளவே முடியாமல் போய்விடும்!

பெற்றோர் தங்கள் குழந்தைகள் கேட்பதை எல்லாம் அதன் மதிப்பு அவர்களுக்கு தெரியாத வகையில் உடனுக்குடன் வாங்கிக்கொடுக்கும் போது அந்த குழந்தைகள் பிற்காலத்தில் ஊதாரித்தனமாக செலவளிக்கத் துவங்கிவிடும். இத்தகைய குழந்தைகள், பின் நாளில் பெற்றோருக்கு கஷ்டம் ஏற்பட்டால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் செலவை மட்டும் அதிகரித்துக் கொண்டிருப்பார்கள்.

rs=w:1440,h:1440

ஒரு மனிதனுடைய வாழ்வில் அத்தனை வகையான சுவைகளும் வரவேண்டும்! இனிப்பை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உணவு திகட்டி விடும். அதேப்போல கோபம், வெறுப்பு, அன்பு பாசம் போன்ற அத்தனை உணர்சிகளையும் ஒரு குழந்தை சமாளித்திருந்தால் மட்டுமே அந்த குழந்தை உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் எதிர்கொண்டு அவற்றை சமாளிக்கும் திறமையோடு வளரும்!

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்காகவே ஒவ்வொன்றையும் செய்யக்கூடாது! அவ்வாறு செய்தால் உங்கள் குழந்தை, ‘தனது வேலை குறைவு’ என்றும் ‘மற்றவர்களே அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள்’ என்ற மனப்பான்மையோடும் வளர்ந்து விடும்!

நல்ல மதிப்பெண்கள் இருந்தும் நன்கு படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத காரணங்கள்

இன்று…வாலிபப் பருவத்தில் வேலை என்பதையே வெறுத்து விட்டு, வேலையில்லாமல் பல மாணவர்கள் இருக்கின்றனர். என்னவென்று பெற்றோர் கேட்டால்… “எனக்கு நம்பிக்கை இருக்கிறது… நான் நிச்சயமாக ஒரு நாள் வாழ்ந்து காட்டுவேன்” என்று சபதம் போட்டுவிட்டு, வீட்டில் சும்மா இருப்பதையும், வீட்டிலுள்ள பொருட்களை அனுபவிப்பதிலும், வீட்டில் உள்ளவர்களிடத்தில் அதிகமாக demand செய்து, உயர்ந்த costlyயான cell phone, உயர்ந்த பைக் போன்றவற்றை வாங்கி அதில் வலம் வருவதை கனவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் “நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் உனக்கு விலை உயர்ந்த மொபைல் போன் வாங்கித்தருகிறேன்” என்று கூறும் பெற்றோராக இருந்தால் நீங்கள் பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று பொருள்! மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளிடத்தில் வீடியோ கேம் போன்றவற்றின் மூலமாக ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் ஆபத்தானது. இதைப்பற்றிய தகவல்களை நீங்கள் குழந்தைகளின் video game பழக்கம் எப்படிப்பட்டது? என்னும் இந்த video courseஇல் காணலாம்.

Video Course 5: குழந்தைகளின் video game பழக்கம் எப்படிப்பட்டது? (PW: 1411)

கற்றலில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கு கற்றல் நடத்தைகளை ஒழுங்குபடுத்தவும், கற்றலில் உள்ள குறைபாடுகளை கண்டறிவதோடு கற்றலை மேலாண்மை செய்யவும், லேர்னிங் லெப் (Learning lab) என்ற உளவியல் ஆய்வகம் மற்றும் லெனின் ஜிம் (Learning gym) என்ற கற்றல் மன இயக்க மையத்தை உருவாக்கியுள்ளோம்.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து உடல்நலத்தை உருவாக்க வேண்டும். அதேபோல குழந்தைகளின் கற்றல், நடத்தை, சமூக பண்பாடு இவற்றை முறைப்படுத்த மன உளவியல் நிபுணர்களின் ஆலோசனை மேற்பார்வை அவசியம் என்பதுதான் இன்றைய உலகில் தேவை.

இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசாங்க வேலைக்கு இத்தனை ஆயிரம் பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் பிரச்சனை கல்வியில் உள்ளதா? கல்வி கற்றவர்களிடம் உள்ளதா?

நமது குழந்தைகளிடம் உள்ளது ‘learning ability’யா? அல்லது ‘learning disabilityயா? learning ability இருந்தால் மட்டுமே வேலையைத் தேடி, பெற்று வேலையில் சேர முடியும்! இது கற்றல் சார்ந்த குறைபாடே ஆகும்!

படிப்பது என்பதை ஒரு ‘திறமையாக’ப் பாருங்கள்! அதை வளர்ப்பதற்காக, அதனை ஒரு செயல்பாடாகப் பார்க்க வேண்டாம்!!

M S K THEORY

 “கல்வியைப் பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாகப் படிக்கவேண்டும் என்று பெற்றோர் அவர்களை டார்ச்சர் செய்வதை விட அதற்கான சூழ்நிலையினை உருவாக்கிக்கொடுத்து, அதற்கு உதவி செய்தாலே போதுமானது. அதாவது, குழந்தைகளுக்கு படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுப்பதோடு, அவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்த்துவதே முக்கியம்.”

முன்னணி நிறுவனங்கள் மாணவர்களை திறன் மதிப்பீட்டு சோதனை செய்து பார்த்ததில், அந்த மாணவர்களில் 90% மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சுய பதில் சொல்லவில்லை. எனவே அந்நிறுவனங்கள், ‘நாங்கள் உங்களை விட நல்ல ஒரு நபரைத் தேடுகிறோம்’ என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனை அறிந்த பெற்றோர்கள் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு வேதனைப் படுகின்றனர். மேலும் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

ஒரு முறை எங்கள் பவுண்டேஷனுக்கு வயது முதிர்ந்த பெற்றோர் வந்தனர். கண்ணீர் மல்க காட்சியளித்த அவர்கள், “என் மகள் வேலை வாய்ப்பு தேர்வுக்குச் சென்னைக்குச் சென்றாள். அவள் 95% மதிப்பெண் பெற்றிருந்தும் அவளை அந்நிறுவனம் வேலைக்கு தேர்வு செய்யவில்லை. இதனால் மனமுடைந்த அவள் தவறான முடிவோடு உள்ளாள். எனவே நீங்கள் தான் அவளை அமைதிப்படுத்த வேண்டும்” என்றனர்.

பின்பு பல மணி நேர ஆலோசனைக்குப் பிறகு அவளை வரவழைத்து தைரியம் கூறி, சிறு தொழில் செய்து வாழலாம் என்று ஆலோசனை கூறினேன். இப்போது அந்த மாணவி தேங்காய் வியாபாரம் செய்து வருகிறாள். சென்ற ஆண்டு ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 180 மாணவர்கள் நிறுவனத்திலிருந்து தாங்களாகவே வெளியேறிவிட்டனர். அதற்கான காரணத்தைக் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. “இங்கு எங்களிடம் வேலை செய்யச் சொல்கிறார்கள்.

ஆனால் குளிர் சாதன வசதி இல்லை. எங்களிடம் இலக்கு பற்றி பேசுகின்றனர். அவர்களுடைய வேகத்திற்கு நாங்கள் வேலை செய்ய முடியாது. நாங்கள் இதை வீட்டில் சொன்னால் வேலைக்குப் போக வேண்டாம். இங்கே வந்து விடுங்கள் என்று கூறுகின்றனர். ஆகவே நாங்கள் வெளியே செல்கிறோம்.” என்பது தான் அந்த பதில்!

rs=w:1440,h:1440

இதற்கெல்லாம் என்ன காரணம்? தற்போது மாணவர்களிடம் உள்ள கல்வி “கட்டாயப்படுத்தப்பட்ட நினைவாற்றலை” அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளரின் கீழ் தொழிலாளி வேலை செய்வது போன்றது. மேற்பார்வையும் கட்டாயமும் தான் குழந்தைகளை படிப்பில் முன்னேற்றம் அடையச் செய்கிறது. அதோடு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அனைத்து வசதியும் ஏற்படுத்தி, அவர்களின் தேவைகளை, அவர்கள் கேட்பதற்கு முன் செய்து, அவர்களின் உழைக்கும் திறனை குறைத்து விடுகிறார்கள். அங்கனம் கண்ணாடியறையில் (Incubator) வளரும் குழந்தை போல் இந்த குழந்தைகளும் வளர்க்கப்படுகின்றனர்.

M S K THEORY

 “குழந்தைகளை பெரும்பாலும் ஏசி ரூமிலேயே வைத்து, அவர்களை புகழ்ந்து பேசியே எல்.கே.ஜி முதல் +2 வரை படிக்க வைத்து வெளியே அனுப்பி விடுகிறார்கள்! இப்படி வளரும் குழந்தைகள் யதார்த்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல், எதிர்பார்ப்பதையே வாழ்க்கையின் வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள்!

உயர் கல்வி முடித்து வேலைக்குச் சென்றாலும், வசதியான சூழ்நிலைகளை எதிர்பார்த்துக்கொண்டு சரியாக வேலையை செய்யாமல், தங்களைத் தாங்களே நோயாளியாக மாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், தங்களால் எதையும் வாழ்வில் சாதிக்க முடியவில்லை என்ற தவறான முடிவுக்கும் வந்து விடுவார்கள்!”

பிள்ளைகள் தங்களுக்குரிய படிப்புப் பிரிவில் அனுமதி பெற்று, கல்வியில் சிறந்து, தனக்குரிய வேலையை தேட வேண்டுமானால் “செயல்படும் நினைவாற்றல்” அவர்களிடம் இயங்கும் படியான முறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். மூளையின் முற்பகுதியில் செயல்படும் ‘விரிபிரண்டல்கார்டெக்ஸ்’ என்னும் பகுதி தான் ஒருவரைத் தனக்குத் தேவையான வேலைக்குத் தகுந்த தகவல்களை தேடி செயல்படுகிறது. இது இயங்கும் விதத்தை ‘செயல்படும் நினைவாற்றல்’ என்கின்றனர்.

‘தங்களுக்குக் கிடைக்காத அனைத்தும் தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்’ என்ற தவறான எண்ணத்தாலும், கட்டாயப்படுத்தப்பட்ட நினைவாற்றலை செயல்படுத்துவதிலும், ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளின் செயல்படும் நினைவாற்றலை முடக்கி விடுகின்றனர். அதனால் பாதிக்கப்படுவது தங்கள் குழந்தைகள் தான் என்பதை புரிந்து கொள்ள அவர்களால் முடிவதில்லை.

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கான உளவியல் காரணம்

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதை பெருமையாக நான் கூலி வேலைக்கு உங்களை அனுப்புகிறேன், கூலி வேலைக்கான வேலை செய்திகளுக்கான பயிற்சிகள் தருகிறேன் என்று சொல்கிறவர்களும்… ஒரு நிறுவனத்தின் கூலிக்காரர்கள் என்பதை கூலி வேலைக்குப் போகக் கூடியவர்கள் தெரியாமல் இருப்பதுதான்.. அவர்களுடைய இன்றைய மனப்பாட தேர்வின் அறிவு நிலை!

பெற்றோர் கூட தன்னுடைய குழந்தைகள் பெரிய பண்ணையில் வேலை செய்கின்றன… நல்ல கூலி கொடுக்கிறார்கள்… அவ்வப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கூலி வேலைக்கான பயிற்சி கொடுக்கிறார்கள்… என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்!

ஆனால் அனைவருமே அந்த கூலிவேலை நிறுவனத்தை உருவாக்கியவர் எப்படிப்பட்ட அறிவு பெற்றவர் என்று யோசிக்கும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். அதைப்பற்றி பேசினால் உடனடியாக உலகத்திலுள்ள அனைவரும் முதலாளியாக ஆக முடியுமா… முதலாளி முதலாளி தான்…. கூலிக்காரன் கூலிக்காரன் தான்… என்று சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்.

rs=w:1440,h:1440

தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல… கல்வி நிறுவனங்களிலும் இப்படித்தான் பழக்கப் படுத்தப் படுகின்றனர். உதாரணமாக ஒரு கல்வி நிறுவனம் ஒரு முதன்மை கூலியை வேலைக்கு வைத்துள்ளது என்று சொன்னால் அந்த கூலிக்காரன் தனக்கு கீழ் உள்ள கூலி காரரை கீழ் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கடுமையான வேலை கொடுக்கிறார். கூலியை குறைத்து கொடுக்கிறார்.

நான் ஒரு கூலி என்பதை மறந்து, தன்னுடைய முதலாளியிடத்தில் இவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்தால்தான் நம்மிடத்தில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்று முதலாளி இடத்தில் சொல்லும்பொழுது முதலாளி அதை புரிந்து கொள்கிறார். அதனால் தான் முதன்மை கூலியாக உள்ள உன்னை குறைந்த கூலிக்கு நான் வைத்துள்ளேன் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொள்கிறார்!

இன்னும் விளக்கமாக சொன்னால் இந்த முதன்மை கூலி என்பவர் குளிரூட்டப்பட்ட அறையில் கண்காணிக்கிறார். கடைநிலை கூலி என்பவர், அந்த நிறுவனத்தின் எல்லை பகுதியில் நுழைவாயிலில் நின்றுகொண்டு அவரும் முதலாளி இட்ட கட்டளையை தெளிவாக செய்கிறார். ஆகவே இந்த உலகத்தில் படித்தவர்கள் கூலியாக இருப்பதற்கும், படிக்காதவர்கள் கூலி கொடுக்கும் நிலையில் இருப்பதற்கும், ஒரு மெல்லிய வித்தியாசம் உள்ளது. அதுதான் மனப்பாட தேர்வுமுறை வெற்றிக்கும் செயல்பட்ட தேர்வில் தெளிந்த அறிவு நிலைக்கும் உள்ள வேறுபாடு!!

வாகனத்தை இயக்கத் தெரியாவிட்டால் பெட்ரோல் இருந்தும் பயன் இல்லை. அதேப்போல பணத்தை வைத்து துவங்கி விட்டால் வியாபாரம் தாமாக நடக்காது. டிரைவிங் தெரிந்தால் வாகனத்தை ஓட்டலாம். ஆனால் நல்ல ஒரு டிரைவர் ஆக வேண்டுமென்றால் அதையும் தாண்டி சாலையில் வாகனங்களை இயக்குவதற்கான பலவிதமான நுணுக்கங்களையும் தெரிந்தாக வேண்டும். அதேவகையில் பிசினஸ்க்கும் பலவித நுணுக்கங்கள் உள்ளன!

சிலபேர் வியாபாரம் செய்வதற்கு அனுபவமே அடிப்படை என்கிறார்கள்.
வியாபாரத்திற்கு தேவை அனுபவம் என்றால் வியாபாரம் செய்து வயதானவர்கள் எல்லாம் ஏன் பணக்காரர்கள் ஆகவில்லை?

பணம் இருந்தால் தொழில் செய்து விடலாம் என்கிறார்கள் சில பேர். அப்படியென்றால் பேங்க் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏன் தொழிலை செய்யாமல் பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

காலமும் தேவைகளும் மாறிக்கொண்டே இருப்பதற்கு ஏற்ப தொழிலின் செயல்பாடுகளை புதுப்பித்துக் கொண்டிருக்காமல், கடனை ஊற்றி இலாபத்தை இறைக்க முயன்று கொண்டிருப்பதற்குப் பெயர் வியாபாரம் என்றால்… மாறி வரும் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு தங்களின் நிறுவனத்தையும் வளர்ப்பதற்காக ஒவ்வொரு செயல் அசைவிலும் நுண்ணறிவு உடையவர்களை பயன்படுத்தி இலாபத்தை பெருக்கிக் கொள்ளும் செயல்முறைக்கு பெயர் என்ன?

ஒரு தொழில் நன்றாக நடக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையானது என்ன என்பதை தெளிவாக உணராமல் நமக்குத் தெரிந்ததை வைத்து தொழில் செய்வதால் இலாபம் வர வாய்ப்பில்லை! அந்தத் தேவை என்ன என்பதை உணர்ந்தவர்களே கார்பொரேட் முதலாளிகளாக மாறுகிறார்கள். அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவதற்காகவே ‘கார்பொரேட் கண்களுக்கு மட்டுமே தெரிந்த தொடர் வெற்றிக்கான தொழில் இரகசியம்‘ என்ற புத்தகத்தினை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

இந்த புத்தகத்தைப் பற்றிய மேலும் தகவல்களை நீங்கள் இந்த இணைப்பினை கிளிக் (Click) செய்து பெறலாம். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்து பார்க்கலாம்.

rs=w:1440,h:1440

இந்தபுத்தகத்தில் கீழ்க்கண்ட விசயங்கள் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் விளக்கப் பட்டுள்ளன!

 • பணத்தை வைத்து தொழில் செய்வது என்பது தொழில் செய்வதன் இரண்டாம் கட்ட நிலை! அப்படியென்றால் முதல்நிலை……?
 • வியாபார அனுபவம் வியாபார வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும்?
 • கடன் வாங்கி வியாபாரம் செய்யலாமா?
 • நீங்கள் ஒரு தொழில் செய்யத் துவங்கி விட்டால் என்னென்ன செயல்பாடுகளை செய்ய வேண்டும்?
 • ‘கார்பொரேட்’ என்றால் என்ன? அவர்களின் வெற்றியின் இரகசியம் என்ன?
 • நமது வியாபாரத்திற்கு போட்டியாளர்களாக வருபவர்களை எவ்வாறு கையாளுவது?
 • வியாபாரம் தோல்விப் பாதையில் செல்வதாகத் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
 • நமது தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை யார் யாரிடம் கேட்கலாம்? யார் யாரிடம் கேட்கக் கூடாது?
 • பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை வதைக்கும் மாறுபட்ட மனநிலைகளை சமாளிப்பது எப்படி?

இன்னும் தொழில் செய்பவர்களுக்கு விடை தெரியாத பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன! இது மட்டுமல்லாமல் ஐந்து வீடியோக்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில் பல அரிய தகவல்கள் உங்களுக்கு எளிதில் புரியும் படி விளக்கப்பட்டுள்ளது!

இது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் ‘Business Secrets of Corporate People‘ என்னும் புத்தகத்தினையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதனை நீங்கள் இந்த இணைப்பை click செய்து காணலாம். இது மட்டுமல்லாமல் இந்த புத்தகத்தை படித்தபிறகு உங்களுக்கு இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் வந்தால் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் முகவரி இந்த புத்தகத்தின் இறுதிப்பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளது!

ஒவ்வொருவரையும் கூலி கொடுக்கும் முதலாளி ஆக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய செயல் நோக்கமாக இருக்கிறது. அதற்காக மனப்பாடம் இல்லாத சிந்திக்கக்கூடிய செயல்படுத்தக்கூடிய கற்றலை உருவாக்க, சர்வதேச கற்றல் திறன் மற்றும் மேலாண்மையை உருவாக்கி வருகிறோம்.

M S K THEORY

பெற்றோர் தங்கள் குழந்தைகள் கேட்பதை எல்லாம் அதன் மதிப்பு அவர்களுக்கு தெரியாத வகையில் உடனுக்குடன் வாங்கிக்கொடுக்கும் போது அந்த குழந்தைகள் பிற்காலத்தில் ஊதாரித்தனமாக செலவளிக்கத் துவங்கிவிடும். இத்தகைய குழந்தைகள், பின் நாளில் பெற்றோருக்கு கஷ்டம் ஏற்பட்டால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் செலவை மட்டும் அதிகரித்துக் கொண்டிருப்பார்கள்”

காலச் சூழலால் ஓர் குடும்பமானது தாயையோ அல்லது தந்தையையோ இழந்து விட்டால், அந்த குடும்பமானது Single parenting என்னும் அமைப்பு முறைக்கு தள்ளப்படுகின்றது. குழந்தை வளர்ப்பில் single patentsக்கு எற்படும் சவால்கள் இன்னும் அதிகமானவை! இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய உளவியல் ஆலோசனை மட்டுமே மிகச் சிறந்த தீர்வாக இருக்க முடியும். இதைப்பற்றிய விவரங்களை இந்த Video Courseஇல் காணலாம்.

Video Course 6: Single parentsக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் (PW: 1411)

குழந்தைகளினால் அழிந்து வரும் நிறுவனங்கள்

சுமார் 70 வயது உடையவர் ஒருவர் நிறுவன மேம்பாட்டிற்கான ஆலோசனை பெற வந்தார். வந்தவர் தன்னைப் பற்றி முழுவதும் கூறினார். அவர் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்கியவர் எனத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது அதன் வளர்ச்சி குறைந்து விட்டது. தனது 40 வயது மகன் நிர்வாகம் செய்கிறார்.

எதுவும் என்னிடம் கேட்டதில்லை. நான் ஏதேனும் கேட்டாலும் கோபம் கொள்கிறான். வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு செலவுகளை செய்கிறார். இவை மட்டுமின்றி அடிக்கடி வெளியூர் செல்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை எனக்கூறி அழுதார்.

அவரிடம் நீங்கள் உங்கள் மகனை மட்டும் என்னை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினேன். உடனே அவர் நான் எது சொன்னாலும் அவர் கேட்க மாட்டார். நீங்களே ஏதேனும் ஒரு வழியில் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று அவரின் அலைபேசி எண்ணைக் கொடுத்தார். பொதுவாக திறன் குறைந்தவர்கள் மற்றவர்களிடம் ஆலோசனை பெறுவதை தவிர்ப்பார்கள். காரணம், அவர்கள் ‘தங்களுக்கு எல்லாம் தெரியும்’ என்ற மமதையில் கனவு வாழ்க்கை வாழ்பவர்கள். இதுவரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவ்வுணர்ச்சிகளினால் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதி திருப்பூர் மற்றும் ஈரோடு என்றே கூறலாம்.

rs=w:1440,h:1440

ஆனால் இப்போது கோவையிலும் இது அதிகமாகி வருகிறது. அப்படி திறன் குறைந்தவர்களினால் தங்களின் பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்து அழிந்து வருகிறது. திறன் குறைந்தவர்களின் இயல்பு என்னவென்றால், தன்னைவிட குறைந்த திறன் உள்ளவர்களையும், ஜால்ரா போடும் நபர்களையும் மட்டும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். இப்படித்தான் அவரும் இருந்தார்.

பின்பு பல யுக்திகளைப் பயன்படுத்தி அவரை அழைத்து மூன்று மாத மனோதத்துவ ஆலோசனைக்குப் பின் அவருடைய தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.

70 வயது வாழ்க்கையில் எனது மகனோடு முதன் முதலாக 30 நிமிடம் பேசினேன். அதற்குக் காரணம் உங்களின் ஆலோசனை தான் என்று கூறி, அழுது கொண்டே நன்றியும் தெரிவித்தார்.

இது ஒரு உதாரணம் தான்! 1000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனர்களுக்கு ஆலோசனை செய்ததில் கண்ட உண்மை என்னவென்றால், அவர்கள் வயது ஆக ஆக தம்முடைய அறிவுதான் தனது வெற்றிக்கு காரணம் என நினைத்துக் கொண்டு, தங்களை புதுமைப்படுத்தி நவீன வழிகாட்டலுக்கு உட்படுத்துவதில்லை.

இதனால் இவர்களின் நிறுவனம், தங்களின் அறிவைக் கொண்டே அவர்களின் கண் முன்னே அவர்களது குழந்தைகளினால் அளிக்கின்றது! எனவே மனதை மாற்றிக் கொண்டால் வெற்றி பெறலாம்.

M S K THEORY

 “வெற்றி என்பது பணத்தை உருவாக்கும் செயல்களின் மூலம் சமூக சேவையில் தேவையை நிவர்த்தி செய்வதால் கிடைக்கும் உழைப்பின் பின்னூட்டம்”

உங்கள் குழந்தை வளர்ப்பில் எற்படும் சிக்கல்களை நீங்கள் கவனிக்காமல் சாதாரணமாக எண்ணி விட்டுவிட வேண்டாம். அதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் காரணமாக உடல் சார்ந்த நோய்கள் பலவும் எற்படும் அபாயம் உள்ளது..

குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் மன அழுத்தம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறிகள்

அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருப்பது, தலை வலி, கண் வலி, திடீரென எற்படும் காய்ச்சல், அடிக்கடி எற்படும் வயிற்றுப் போக்கு, அதிக நேரத்தூக்கம் அல்லது தூக்கமின்மை, எதைச் சொன்னாலும் அழுவது, காலையில் எழுந்தவுடன் பதட்டப்படுவது, கழிப்பறையில் அதிக நேரம் இருப்பது, முடி கொட்டுவது, எரிச்சலுடன் பேசுவது அல்லது மிகவும் அமைதியாக இருப்பது, எனக்குப் பயமாக உள்ளது,

நீங்கள் என்னுடன் இருங்கள் என்று கூறுவது… இவை போன்ற  நடத்தைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு மனதளவில் அழுத்தம் அதிகமாகி விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டாம். மன அழுத்தம் நீக்கும் உளவியல் ஆலோசனைக்குக் கொண்டு செல்வது மட்டுமே அவர்களின் வெற்றிக்கு வழி வகுக்கும்.

rs=w:1440,h:1440

இதைப்பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வதற்காக ஒரு சில அனுபவங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு பெண் குழந்தையை பெற்றோர் அழைத்து வந்தனர். “இவள் எங்கள் ஒரே மகள்; +2 படிக்கிறாள்; மிகவும் நன்றாக படிக்கிறாள்; ஆனால் மதிப்பெண்கள் தான் வரவில்லை; அவள் மிகவும் புத்திசாலி; எதையும் சாதிப்பவள்” என்று ஒரு மணி நேரம் புகழ் பாடினார்கள் இருவரும்!

உங்கள் குழந்தையின் பிரச்சனையைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டேன். அவள் மிகவும் நல்லவள். அப்படி ஒன்றும் ஒரு மாதிரியானவள் அல்ல” என்று மீண்டும் புகழ்ந்தனர். நீங்கள் என்னிடம் உங்கள் மகளின் புகழ்ச்சியை சொல்வதற்காக வந்தீர்களா? என கேட்டேன்.

உடனே அவர்கள் “சார், நீங்கள் எதுவும் தப்பாக நினைக்கக் கூடாதென்று தான் இவ்வாறு சொல்கிறோம்” என்று கூறினர். உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள் என்று கேட்டேன். “சார் நாங்கள் இங்கு வந்தது யாருக்கும் தெரியாது. தெரியாமல் பார்க்கலாம் என்று தான் வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தால் நிறைய பேர் வரிசையில் அமர்ந்துள்ளனர். இதை பார்த்த போது எனக்கு மிகவும் நம்பிக்கை வந்துள்ளது. என் மகள் குணமாகி விடுவாள் என்று தோன்றுகிறது” என கூறினார்கள்.

அன்பர்களே, இந்த உரையாடலை படித்த பின் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தையைப் பார்த்து பரிதாபப்படுவீர்களா? அல்லது பெற்றோர்களைப் பார்த்து ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கோபப்படுவீர்களா?

rs=w:1440,h:1440

ஆனால் எனக்கு தெரியும்… இது “அதீத தற்புகழ்ச்சி கொண்ட மன நிலை” என்பது! இவர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிக அறிவுரை கூறி அந்த குழந்தைக்கு எல்லாம் தனக்கு தெரியும் என்ற மனநிலையை தான் அறியாமலேயே வளர்த்து விடுவார்கள்.  அக்குழந்தை யார் என்ன சொன்னாலும், “தெரியும்” என்றும் “போர் அடிக்காதே” என்றும் சொல்வார்கள்.

பிறகு, அந்தக் குழந்தையிடம் உள ஆய்வு செய்த பொழுது, அப்பெண் “சார், நன்றாக படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம், நல்ல மதிப்பெண் பெற்றால் நல்ல காலேஜ் கிடைக்கும், நல்ல காலேஜ் கிடைத்தால் நல்லவேலை கிடைக்கும், நல்ல வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் வாங்கலாம், நல்ல சம்பளம் வாங்கினால் நல்ல வாழ்க்கை வருமே?” என எனக்கு திருப்பி அறிவுரை கூறியது.

சரியம்மா… உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். இல்ல சார்… என் அம்மா, “சும்மா ஒரு இடத்துக்கு போலாம் வா” என கூட்டி வந்தார். நான் மிகவும் நன்றாக உள்ளேன்.

மிகவும் நல்லதம்மா… நீ எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறாய்? என்றுகேட்டேன். அதற்கு அந்த பெண், “சார்… மதிப்பெண் தான் வாழ்க்கையா? உழைப்பு இருந்தால் படிப்பு என்பது ஒரு பாதி அவ்வளவு தான்.

நான் மட்டும் படித்தேன் என்றால் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவேன். எனக்கு யாருடைய அட்வைஸ் ஆலோசனைகள் எதுவும் தேவையில்லை. நான் நன்றாக வாழ்க்கையில் வருவேன். எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று தன்னைத்தானே புகழ்ந்தது.

rs=w:1440,h:1440

சரியம்மா… உனது மதிப்பெண் என்ன என்று கேட்டேன். உடனே, “சார், ஆறு பாடத்தில் நான் பெயில் ஆகி விட்டேன் என்பதற்காக நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது…. நீங்கள் ஒன்று செய்யுங்கள். என் அப்பா, அம்மாவிடம் நான் சொன்ன படியே சொல்லுங்கள்.

நான் நம்பிக்கை உள்ளவள் என்றால் ஜெயிக்க முடியும். படிப்பு வாழ்க்கையில்லை… வாழ்க்கை என்பது அனுபவத்திற்கு தான் தவிர கட்டப்படுவதற்கு அல்ல. பெற்றோர்கள் தங்களின் மகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். எனக்கு எது கேட்டாலும் உடனே வாங்கி தர நீங்கள் சொல்லுங்கள்.

வெளியே செல்ல வேண்டுமானால் உடனே அனுப்பச் சொல்லுங்கள். நண்பர்களிடம் செல்போன் பேச விடச் சொல்லுங்கள். தற்போது நான் வெளியில் சுற்றுலா செல்ல நீங்கள் அனுமதி வாங்கித் தந்தால் உங்களை நான் மறக்க மாட்டேன். பிளீஸ் சார்” என்றாள்.

உடனே அப்பா அம்மாவை அழைத்து, “நான் மிகவும் நல்லவள். சாருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. எனவே, நீங்கள் சார் சொன்ன மாதிரி என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்” என பெற்றோரிடம் என் முன்னாலேயே அவள் கூறினாள்.

நண்பர்களே, இது போன்று ஒன்று இரண்டல்ல பல பெற்றோர்களின், பல குழந்தைகள் உள்ளனர். உங்கள் குழந்தை தான் உங்களின் வெளிப்பாடு. அதை சரி செய்ய ஒரு சிலர் மட்டுமே உளவியல் ஆலோசனைக்கு வருகின்றனர். பலர் இப்படித்தான்… எனக்கு எல்லாம் தெரியும்… எனக் கூறி குழந்தையையும் கெடுத்து வைத்துள்ளனர். இது போன்று நீங்கள் நடந்தாலும், அல்லது உங்களின் குழந்தை நடந்து கொண்டாலும், இதற்கு தீவிர ஆலோசனையும், நடத்தை மாற்று பயிற்சியும் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே நாங்கள் கூறியுள்ள எங்களது உளவியல் சார்ந்த அனுபவங்கள் அனைத்துமே ‘பாசமலர்’ என்னும் பத்திரிகையில் வாரம்தோறும் வெளிவந்தன. இவற்றை தொகுத்து ‘சொல்வதும் சொல்லாததும்’ என்ற பெயரில் நாங்கள் புத்தகமாக வெளியிட்டுள்ளோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

rs=w:1440,h:1440

மற்றுமோர் அனுபவத்தையும் இங்கே காணலாம். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் அந்த மாணவியின் பிரச்சனை குறைந்திருக்கவில்லை. “இறுதியாக ஒரு மருத்துவர் உங்களிடம் அனுப்பினார். நீங்கள் தான் என் குழந்தையை குணமாக்க வேண்டும். அவள் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை” என்று அழுதனர்.

அவளைப் பற்றி என்னவென்று பெற்றோர்களை கேட்ட போது, அம்மாணவிக்கு “குடல் சுழற்சி” என்ற நோய் உள்ளதாக கூறினர். அதனால் அவள் அடிக்கடி மலங்கழிக்க வேண்டி வரும். ஒரு நாளைக்கு பல முறை இவ்வாறு ஏற்படுகிறது. மிகவும் சிரமப்படுகிறாள் என்று கூறினர்.

கடந்த இரண்டு வருடங்களாக அவளது பெற்றோர்களும் இதனால் சிரமப்பட்டுக்கொண்டு தான் இருந்திருக்கிறார்கள்.

பிறகு அம்மாணவியை அழைத்து தனிமையில் உள ஆய்வு செய்த போது அவளிடத்தில் மனச் சிக்கல் ஏதும் இல்லாதது போல் தெரிந்தது. பிறகு கல்வி ரீதியாக மன ஆய்வு செய்த போது அவளது மதிப்பெண்ணும் நல்ல நிலையில் உள்ளது. இரண்டு வார ஆலோசனைக்குப் பின் தான் அவளிடம் உள்ளது. ஈகோ சார்ந்த மன பிரச்சனை என்பது தெரிய வந்தது.

அவள் மதிப்பெண் எடுப்பது எல்லாம் மனப்பாடம் செய்து தான். கணக்குப் பாடத்தையும் மனப்பாடம் செய்து தான் எழுதுவாள்.  ஆனால் எதைக் கேட்டாலும் நன்றாக புரிந்தது போல் அருமையாக சொல்லிக் கொடுப்பாள். பிறர் கண்டறிய முடியாத படி அந்த அளவுக்கு நன்றாக சொல்லிக் கொடுப்பாள்.

rs=w:1440,h:1440

இப்பழக்கம் நாளடைவில் அவளுடைய மனதில் புதிதாக ஏதேனும் கேட்டால் தேர்வு மதிப்பெண் குறைந்து விடும் என்ற பயத்தினை ஏற்படுத்தி, ‘குடல் சுழற்சி’ நோயை உருவாக்கி விட்டது.

தொடர்ந்து மூன்று மாதம் உள நடத்தை மேம்பாடு சிகிச்சை அளித்த பின், தற்போது அந்த குடல் சுழற்சி நோய் குணமாகி, மிகவும் நல்ல நிலையில் படித்து வருகிறாள்.

ஆகவே பெற்றோர்களே, இந்த நிகழ்வினை வைத்து உங்கள் குழந்தையும் இப்படித்தான் இருக்கும் என முடிவு செய்து விட வேண்டாம். ஒவ்வொரு மாணவரும் எவ்வாறு மன பாதிப்புக்கு உள்ளாகி இருப்பர் என்பதை தனிப்பட்ட முறையில் உள ஆய்வு செய்த பிறகு தான் கண்டறிய முடியும்.

மனித வாழ்க்கை முன்னேறுவது என்பது அவரில் உள்ள ‘மனப்பதிவு சார் அறிவை’ பொறுத்தது தான். அந்த மனப்பதிவு அவருக்கு சரியானதாகத் தான் தோன்றும். ஆனால் வெற்றிக்காக மனப்பதிவை திருத்தி அமைப்பது வெற்றிக்கு அவசியம்.

பெருகி வரும் பள்ளிக்காதல்

எங்களது ஆலோசனைக்காக பலமுறை முன்பதிவு செய்தும், தனது மகள் உடன் வர மறுத்த காரணத்தினால் எங்களைக் காண வராமல் பலமுறை சந்திப்பை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தனர் ஒரு பெற்றோர்!

இவ்வாறே “சாரிசார்அடுத்தவாரம்வருகிறோம்” என்று தொடர்ந்து தகவல் மட்டும் சொல்லிக்கொண்டு இருந்த அந்த பெற்றோர், திடீரென தன் மகள் ஆலோசனை பெற வருவதற்கு சம்மதித்து விட்டதாகக்  கூறிவிட்டு எங்களுடைய பவுண்டேஷனுக்கு தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு ஆலோசனை பெறுவதற்காக வந்தனர்.

அப்பெற்றோர், தங்களது மகளின் நடத்தைகளைப் பற்றிக்கூறி மிகவும் வருந்தினர். அவள் எதற்கெடுத்தாலும் கோபம், மிகவும் சிந்தனையுடன் அமைதியாக இருத்தல், படிக்கச் சொன்னால் எரிந்து விழுதல், எந்த நேரமும் அலைபேசியில் பேசிக் கொண்டே இருத்தல், ஏன் இவ்வாறு அலைபேசியில் பேசுகிறாய் எனக் கேட்டால் எனது தோழியிடம் சந்தேகம் கேட்கின்றேன் என கடிந்து சொல்லுதல், அவளை பேச விடவில்லை என்றால் நான் என் வழியை பார்த்துக் கொள்கிறேன் என சொல்லுதல், ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட பொழுது கோபப்பட்டு நான் அப்படித்தான் இருப்பேன்; இப்போது என்ன சொல்கிறீர்கள் என மிரட்டுவது, என நடந்து கொள்கிறாள் என்று கூறினார்கள்.

“நேற்று ஒரு மெழுகுவர்த்தியை பிராஜெக்ட் செய்ய வேண்டும் என்று வாங்கி வந்து தனது உடல் முழுவதும் தனக்குத்தானே சூடு போட்டுக் கொண்டாள். நேற்று இரவு கையில் சுமார் ரூபாய் 15000 வைத்திருந்தாள். இவ்வளவு பணம் ஏது? எனக் கேட்ட பொழுது இது என் தோழியின் பணம், அவளது அப்பா குடிக்கிறார், ஆகவே அவள் என்னிடம் கொடுத்து வைத்துள்ளாள் எனக் கூறினாள்.

மறுநாள் அந்தத் தோழியிடம் விசாரித்த போது ‘அப்படி ஒன்றும் நான் கொடுக்கவில்லை’ என்று அத்தோழி சொன்னதால் மகளை அடித்துக் கேட்ட போது தான் தெரிந்தது… அவள் அப்பணத்தை எனது பெட்டியிலிருந்து தான் எடுத்துள்ளாள் என்பது” என்றும் கூறினார்கள்.

இதற்கிடையில் வெகு நாட்களாக அவள் அப்பாவிடம் பேசுவதில்லை என்றும் அப்பாவின் முகத்தை பார்க்கப் பிடிக்கவில்லை அதனால் அப்பாவை பார்க்கும் பொழுது தனது முகத்தை மறைத்துக் கொள்கிறாள் என்றும் கூறி அழுதார்கள்.

rs=w:1440,h:1440

பின்பு அக்குழந்தையிடம் மனோதத்துவ முறையில் உளஆய்வு செய்த பின் தான் தெரிந்தது அப்பெண் தனது காதலனுடன் பேசுவதற்காக அலைபேசியை வாங்க வீட்டிலிருந்து ரூபாய் 15,000 திருடியதாகவும், தனது காதலன் மிகவும் நல்லவன், அவன் என்னை எப்படியும் காப்பாற்றுவான் என்றும் அழுதுகொண்டேகூறினாள்.

அக்காதலனை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறினால். அவளிடம் அக்காதலன் பற்றி விசாரித்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 9 ஆம் வகுப்பில் படிக்கும் அவளது காதலன் 10 ஆம் வகுப்பில் படிப்பதாகக்கூறினாள். பின்பு அம்மாணவிக்கு தொடர் மனோதத்துவ ஆலோசனை வழங்கிய பின், தன் காதலை மறந்து படிக்கத் தொடங்கினாள். உண்மையில் இவை போன்ற காதல் பிரச்சனைகளுக்கு முதல் காரணம் பெற்றோர்களே! அவர்களுக்கு, தன் குழந்தை எதற்காகவும் கஷ்டப்படக் கூடாது… அவளின் விருப்பங்களை உடனுக்குடன் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொடுத்தாக வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணமாக உள்ளது!

rs=w:1440,h:1440

மிக உயர்ந்த பள்ளி என்று விளம்பரப்படுத்தக் கூடிய பள்ளியில் சேர்ப்பதும், அவை போன்ற பள்ளியில் படிக்கும் மிக வசதியான குழந்தைகள் போல் தன் குழந்தையும் உழைக்காமல் வாழ வேண்டும் என பெற்றோர்கள் தவறாக புரிந்து கொள்வதுமே இதற்கு மூல காரணமாக உள்ளது.

“தான் மட்டும் உழைத்து சம்பாதித்து, தன் குழந்தைக்கு உழைப்பைக் கற்றுக் கொடுக்க விரும்பாத பெற்றோர்களின் குழந்தைகள் தான் இவ்வாறான மாற்றுப் பாதையில் தங்களின் வாழ்க்கையை வீணடிக்கின்றனர்”

இவ்வாறான குழந்தைகளை மாற்றியமைக்க வாழ்வியல் மேம்பாட்டு ஆலோசனை அவசியம் தேவை.

பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை தவறாகிப் போகும் போது குழந்தைகள் தாங்களாகவே சில அபாயகரமான ஆறுதல் தரும் வழிமுறைகளை தேடிக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. அதில் ஓன்று தான் பெருகி வரும் இந்த பள்ளிக்காதல். இதைப்பற்றிய தகவல்களை இந்த Video Courseஇல் காணலாம்.

Video Course 7: பெருகி வரும் பள்ளிக்காதல் (PW: 1411)

குழந்தைகளின் தேர்வு காலத்தில் கவனிக்கப்பட வேண்டியவை

தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை!  

“எனக்கு தேர்வு பயமாக உள்ளது, கணக்கு மறந்து விட்டது” என்று பிள்ளைகள் கூறினால் உடனே பெற்றோர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். இதனால் மன அழுத்தமானது அதிகரிக்கத்தான் செய்யும் என்று பலருக்கு புரிவதில்லை.

குழந்தைகளின் தேர்வு கால மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் நடத்தை முறைகளை இப்போது பார்க்கலாம்.

 • உங்கள் குழந்தை அடிக்கடி ‘பயமாக உள்ளது’ என்று சொல்கின்றதா?
 • எந்த வேலை சொன்னாலும் அதைச் செய்யாமல் ‘மதிப்பெண் குறைந்தால் என்னைக் கேட்கக் கூடாது’ என்று கூறுகின்றதா?
 • அதிக நேரம் படிக்கிறார்களா?
 • நீங்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீர்கள். நான் தான் சரியாகப் படிக்கவில்லை என்று புலம்புகின்றதா? 
 • பதட்டத்துடன் இருக்கின்றார்களா?
 • அடிக்கடி கோபப்படுகின்றதா?  
 • தேர்வு எழுதிய வினாத்தாளை மறைத்து வைக்கின்றதா?

இது ஒருவகை நடத்தையாகும்.

rs=w:1440,h:1440

வாழ்க்கையில் படிப்பு என்பது அவசியமில்லை… படிக்காதவர்கள் கூட பல சாதனைகள் செய்துள்ளனர்… நீ அடிக்கடி படிக்கச் சொல்லாதே… எல்லாம் எனக்குத் தெரியும். நான் என்ன சின்னக் குழந்தையா? இப்பொழுது எதுவும் பேசாதே…. மதிப்பெண் குறைந்தால் மட்டும் பேசு… சும்மா என்னைக் குறை சொல்லாதே… உங்களால் தான் மதிப்பெண் குறைகின்றது…

இப்படியெல்லாம் பேசுவது மற்றொருவகையான நடத்தையாகும்.

M S K THEORY

காரில் பயணம் போகும் போது டிரைவரிடம் ‘இப்படி ஓட்டு… அப்படி ஓட்டு…’ என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி சொல்லிக்கொண்டிருந்தால் அவரால் காரை இயல்பாக ஓட்ட முடியாது! அதேப்போல மாணவர்களுக்கும்  Compulsive Education ஐ விட   Impulsive Education  தான் சிறந்து!

ஒரு செய்தியைக் காதில் கேட்பது, ஒரு செய்தியை மனதால் உணர்ந்து, உணர்ச்சி நிலையில் இருப்பது… இவை இரண்டும் வெவ்வேறான செயல்பாடுகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். காதில் செய்தியை செலுத்தினால், காதிற்குள் செல்லும். ஆனால் மனதிற்குள் போகாது. இந்தக் கருத்து தேர்வு காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் மனச் சிக்கலுக்கும் பொருத்தமுடையுதாகும்.

தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டாம். உண்மையில் அவர்களுக்கு மன அழுத்தத்திற்கான உளச் சிகிச்சை தான் தேவை. அறிவுரைகள் ஒரு காதில் பட்டு, மறு காது வழியாக வெளியே சென்று விடும்.

ஒரு சில கருத்துகள் உளச்சிகிச்சை மூலமாக அவர்கள் மனதால் உணர்ந்து அவர்களின் உணர்ச்சி நிலைக்குச் செல்ல வேண்டும். சிக்கல்களை தவிர்க்க அதுவே அவசியம்.

rs=w:1440,h:1440

ஒருவருக்கு இதயத்தில் அழுத்தம் ஏற்படுகிறது என்றால் உடனே இதயத்துறை சார்ந்த நிபுணருடன் ஆலோசனை செய்த பிறகு தேவைப்பட்டால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் மாணவ மாணவிகள் பெற்றோரிடம் கணக்கு பற்றிய பயம் உள்ளது, அடிக்கடி மறந்து விடுகிறது என்று கூறினால் அதைப் பற்றி யாரும் புரிந்து கொள்வதில்லை.

அதனால் அதற்குப் போதுமான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இல்லை. காரணம் அவர்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் சந்தித்த அனுபவங்களைப் போல் இந்த கால மாணவர்களின் சிக்கல்களையும் பார்க்கின்றனர். தற்போதைய மாறுபட்ட சூழ்நிலைகளையும், மாணவர்கள் அனுபவிக்கும் புதுப்புது சிக்கல்களையும் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சிலர், பிள்ளைகளிடம், “உன்னால் முடியும், நீ செய்” என்று கூறுகின்றனர். இந்த அறிவுரை ஒரு பரிகாரமல்ல. அது மட்டுமன்றி, இத்தகைய அறிவுரையை கேட்கும் அந்த குழந்தை, சுய பாதுகாப்பு உணர்வின்றி தவிக்கும் நிலையினையும் இதனால் அடைகிறது. ஒருவருக்கு உடல் வலி ஏற்பட்டால் யாராவது, “உன்னால் முடியும். நீ தாங்கிக் கொள்” என அறிவுரை தருவார்களா? அது போலத்தான் இதுவும்!

தொடந்து தவறுதலாக கையாளப்படும் குழந்தைகளது DNA தவறுதலான செயல்களுக்கு ஏற்றார்போல மாற்றமடைகிறது! மன அழுத்தம் நமது டிஎன்ஏவை பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன, இது புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற பெரிய உடல்நலப் பிரச்சினைகளைத் தூண்டும். இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தினை எங்களது ‘DNA MODIFICATION WITH PSYCHOLOGICAL MSK THERAPY‘ என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் விவரித்துள்ளோம். இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை இந்த இணைப்பினை click செய்து நீங்கள் காணலாம்.

இதுவரை ஏறத்தாழ 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கணக்கு பதட்டத்தினால் எங்களின் உளவியல் ஆலோசனை பெற வந்திருந்தனர். ஒரு முறை, அதுவரை 90% க்குமேல் மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவன், திடீரென பள்ளிக்கு போக விருப்பமில்லை என்று கூறி, படிப்பைத் தவிர்த்து விட்டு வெளியில் சுற்ற ஆரம்பித்து விட்டான். பெற்றோர் அவனை பலவாறு திட்டியும், அடித்தும் பயனில்லாமல் எங்களிடம் அழைத்து வந்தனர்.

அந்த பெற்றோர்களை வெளியே காத்திருக்க வைத்து விட்டு, அம்மாணவனிடம் உள ஆய்வு செய்தோம். அப்போது தான் தெரிந்தது… அம்மாணவனிடம் கணக்கு பாடம் பற்றிய பயம் உள்ளது என்பது. கணக்கு ஆசிரியர் அவனுடைய பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் முன்னால் அவனை இடித்துரைத்து பேசியுள்ளார்.

பெற்றோர்களும் அவனுடைய மன பாரத்தை அறிந்து கொள்ளாமல், “நீ செய், உன்னால் முடியும்” என்று அறிவுரையும் வழங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதனால் அவன் விரக்தி அடைந்து விட்டான். அவனுடைய நடத்தையும் மாற்றமடைந்தது.

rs=w:1440,h:1440

அம்மாணவனுக்கு “கணக்கு பதிவிற்கு” உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மிகவும் இயல்பாக உள்ளான். சர்வதேச உளவியல் நிபுணர்கள் இதனை, “கணக்கு சார்ந்த மன ஒருங்கிணைப்புக் குறை” (M. D. Mathematical Disorder) என்று அழைக்கின்றார்கள். எனவே குழந்தைகளின் படிப்பு சார்ந்த சிக்கல்களுக்கு அறிவுரை வழங்காமல் உளவியல் ஆலோசனை பெறுங்கள்.

M S K THEORY

“நமது உறவினர்கள் மத்தியில் நமது குழந்தைகளைப் பற்றி அதுவும் அவர்கள் முன்னிலையிலேயே உயர்வாகவே பெசிக்கொண்டிருக்கும் போது, குழந்தைகள் ஏதோ ஒரு காலகட்டத்தில், எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து, பின்பு அது முடியாமல் போனால் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களின் முகத்தில் இனிமேல் முழிப்பதே இயலாது என்று எண்ணி விடுவார்கள்!!”

உங்கள் குழந்தைகள் பரீட்சைக்குத் தயாராகும் போது நீங்கள் இந்த சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை அணுகும் போது முதலில் குழந்தைகளுக்கு படிப்பதில் வெறுப்பு ஏற்படத் துவங்கும். தொடர்ந்து நீங்கள் அவர்களை படிக்கச் சொல்லி வற்புறுத்தும் போது அவர்கள் உங்களில் முன்னால் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு படிப்பதைப் போல நடிப்பார்களே தவிர படிக்க மாட்டார்கள். நீங்கள் அதை ‘நடிப்பு’ என்று தெரியாமல் இரசிக்கும் போது, அவர்களும் தங்களது நடிப்புத் திறமையை அதிகரிப்பார்கள்.

இதனால் அவர்களின் படிப்புத் திறமை குறைந்து விடுவதோடு படிப்பதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும்! ஆனால் இது உங்களுக்கு பரீட்சை முடித்து மதிப்பெண் பட்டியல் வரும் போது தான் புரியும்! இதே நிலை தொடர்ந்தால், உங்கள் குழந்தைகளுக்கும், உங்களுக்குமான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தைகள் கேட்காமல் அடம் பிடிக்க ஆரம்பிப்பார்கள்.

ஆக, இத்தகைய தொல்லைகள் ஏற்படாமல், நமது குழந்தைகள் படிப்பிலும், வேலையிலும், வாழ்விலும், மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றிகரமாக வாழ்வதற்கு நாம் இப்போது அவர்களை எவ்வாறு பழக்குகிறோம் என்பதே அடிப்படை.

rs=w:1440,h:1440

குறிப்பாக பரீட்சை நேரங்களில் நீங்கள் இதனை கவனிக்க வேண்டியது அவசியம்.

நமது குழந்தைகளிடம் உள்ளது ‘learning ability’யா? அல்லது ‘learning disabilityயா? learning ability இருந்தால் மட்டுமே வேலையைத் தேடி, பெற்று வேலையில் சேர முடியும்!

நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், குழந்தைகளை

தொடர்ந்து படிக்க விடாமல் தடுக்கக்கூடிய சூழ்நிலைகள் பல உண்டு. ஆனால் சாதாரணமாக அவை பெற்றோர்களின் கண்களுக்கு அவை தெரிவதில்லை!

குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்பட்டால் அதற்கான சரியான காரணங்களை கண்டறியாமல் அவர்களை கடிந்து கொள்வது முறையல்ல!!  சரியான சூழ்நிலைகளை உருவாக்கித் தருவதன் மூலமாக அவர்களை கண்டிப்பாக நிறைய மதிப்பெண் வாங்க வைக்க முடியும்!

குழந்தைகளை வளர்ப்பதும் சிறந்த மனிதராக உருவாக்குவதும் ஒன்றும் கடினமான செயல்பாடு அல்ல… அவர்களது வளர்ச்சி ஏற்றார்போல நீங்கள் சரியான வகையில் நடந்துகொள்ளும் போது நிச்சயமாக அவர்கள் சிறந்து விளங்குவார்கள். நமது குழந்தைகளிடம் உள்ளது ‘learning ability’யா? அல்லது ‘learning disabilityயா? learning ability இருந்தால் மட்டுமே வேலையைத் தேடி, பெற்று வேலையில் சேர முடியும்! குறிப்பாக பரீட்சை நேரங்களில் நீங்கள் இதனை கவனிக்க வேண்டியது அவசியம்.

M S K THEORY

 “எல்லா தேவைகளையும் எப்போதுமே பூர்த்தி செய்து பெற்றோரையே குழந்தைகள் சார்ந்திருக்கும் படி செய்த பிறகு, அந்த சார்ந்திருத்தலில் குறைபாடு ஏற்படும் போதும், பெற்றோர் அவர்களை நெறிப்படுத்த முயற்சி செய்யும் போதும், அந்த குழந்தைகள் அவர்களுக்கு எதிராளியாக மாறிவிடும்!”

குழந்தை வளர்ப்பு சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும் உங்களது குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்றுவதற்கும் உளவியல் ஆலோசனை மிகவும் முக்கியமானது என்பதை நாம் பார்த்தோம். ஆனாலும் பலருக்கு பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகள், குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசனைகள், குடும்பவியல் ஆலோசனைகள், திருமண ஆலோசனைகள் போன்றவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் புரிவதில்லை. எந்த வகையான உளவியல் ஆலோசனைகள் உங்களுக்குத் தேவை என்பதை உளவியல் நிபுணரின் வாயிலாக கண்டறிந்து, அந்த வகையிலான ஆலோசனைகளை சரியான நேரத்தில் சரியான உளவியல் நிபுணரின் மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக குடும்பவியல் ஆலோசனைகளுக்கும், திருமண ஆலோசனைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இந்த Video Courseஇல் காணலாம்.

Video Course 8: குடும்பவியல் ஆலோசனைகளுக்கும், திருமண ஆலோசனைகளுக்கும் உள்ள வேறுபாடு  (PW: 1411)

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்கியதில் நாங்கள் கண்டறிந்த உண்மைகள் மற்றும் அனுபவங்களில் ஒரு சிலவற்றை இங்கே கூறியுள்ளோம்.

மேலும் எங்களது உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்கும் இந்த சேவையில் நாங்கள் சந்தித்த பலதரப்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களுடனான அனுபவங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உளவியல் ரீதியிலான தீர்வுகளையும் பற்றிய விவரங்களை தொகுத்து ‘பாசமலர்’ என்னும் வாரப்பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தோம்.

அதன் தொகுப்பினை நீங்கள் எங்களது ‘சொல்வதும் சொல்லாததும்’’ என்னும் புத்தகத்தில் காண முடியும் என்று கூறியிருந்தோம் அல்லவா? இந்த புத்தகத்தைப் பற்றிய விவரங்களை கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்வதன் மூலமாக பெற முடியும்.

rs=w:1440,h:1440

ஒரு காரை எப்படி வேண்டுமானாலும் தாறுமாறாக ஓட்டலாம் என்றால் , சரியான இடத்திற்கு பொய் சேர முடியாது. அதேப்போல குழந்தைகள் ஆசைப்படுவதை எல்லாம் பெற்றோர் அப்படியே செய்து கொடுத்துக் கொண்டிருந்தால் பிற்காலத்தில் அது  ஆசைப்படுவதை எல்லாம் அடையவேண்டும் என்று அனைவரிடமும் அடம் பிடிக்க ஆரம்பித்து விடும்! ஆகவே குழந்தைகளை நம் விருப்பப்படி மீன்தொட்டியிலுள்ள மீனைப்போல வளர்க்காமல், தற்கால சமுதாயச் சூழலுக்கு பொருந்தும்வகையில்  அவர்களை வாழப் பழக்குவது மிகவும் அவசியம். சரி, குழந்தைகளை எவ்வாறு பழக்குவது?

குழந்தைகளை பழக்குவது இரண்டு வகைகளில் உள்ளது.

1.             Physical Parenting / Biological Parenting – உடலியல் சார்ந்தது

2.             Psychological Parenting- உளவியல் சார்ந்தது

இதைப்பற்றிய மேலும் பல விவரங்களை எங்களது ‘குழந்தைகளை வளர்கிரீர்களா? பழக்குகிறீர்களா?’ என்னும் புத்தகத்தில் தந்துள்ளோம்.

rs=w:1440,h:1440

வளரும் குழந்தைகளிடம் ஏற்படும் நடத்தை மாறுபாடுகள்

1. ஓரிடத்தில் தொடர்ந்து ஐந்து நிமிடம் கூட அமர முடியாமல் இங்கும் அங்கும் ஓடுதல்.

2. வகுப்பறையில் மற்ற குழந்தைகளிடம் சண்டை உருவாக்குவதல், அடித்தல், தள்ளிவிடுதல்.

3. பார்த்தது எல்லாம் வேண்டும் என்று கீழே படுத்து அழுதல்.

4. மற்றவர்களின் பொருளை சேதப்படுத்துதல்.

5. இரவில் அதிக நேரம் விழித்திருத்தல், காலையில் மிகவும் நேரம் கழிந்து அல்லது மிக விரைவில் எழுந்திருத்தல்.

6. எது சொன்னாலும் எதிர்த்து பேசுதல்.

7. மாற்றி மாற்றிப் பொய் கூறுதல்.

8. எழுதச் சொன்னால் ‘கை வலிக்கின்றது’ என அழுதல். மீண்டும் எழுதச் சொன்னால் நோட் புத்தகத்தைக் கிழித்துப் போடுதல்.

9. பள்ளி பிடிக்கவில்லை, ஆசிரியர் பிடிக்கவில்லை, நண்பர் பிடிக்கவில்லை எனக்கூறி, அடிக்கடி புத்தகம், பேனாவை தூக்கி எறிந்துவிட்டு மற்றவர்கள் எடுத்ததாகக் கூறுதல்.

10. வீட்டில் உள்ள பணம், காசு இவற்றை திருடுத்தல்.

11. டி.வி., அலைபேசி மற்றும் வீடியோ விளையாட்டில் அதிக நேரம் செலவிடுவதல். தான் செய்வது தான் சரி என வாதிடுதல்.

இதைப்பற்றிய விரிவான விவரங்களையும் எங்களது ‘குழந்தைகளை வளர்கிரீர்களா? பழக்குகிறீர்களா?’ என்னும் புத்தகத்தில் நீங்கள் காண முடியும்.

ஒரு குழந்தைக்கு எந்தெந்த விசயங்களில் கவனம் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

 1. Health – உடல் ஆரோக்கியம்
 2. Education – கல்வி
 3. Subsistence – வாழ்க்கைக்குத் தேவையான, அவசியமான விசயங்கள்
 4. Guidance –வழிகாட்டி
 5. Security – பாதுகாப்பு (அரவணைப்பு சார்ந்த பாதுகாத்தல்)
 6. Protection – (ஆபத்திலிருந்து பாதுகாத்தல்)

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது Subsistence அதாவது பிழைப்பு ஆதாரத்திற்கு உண்டான வழிகளை உண்டு பண்ணுவது.

உதாரணமாக ஏதோ ஒரு காரணத்தினால் குழந்தைகள் ஹாஸ்டல் அல்லது பெற்றோர் இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டி வந்தால் அதை தாங்க முடியாதவர்களாக குழந்தைகள் மாறி விடுகிறார்கள்….

எனவே Physical comfort & Discomfortஐ manage பண்ணுவது எப்படி என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

கப்பல் என்பது கடலில் பயணிப்பதற்குத் தானே தவிர கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு அல்ல!

rs=w:1440,h:1440

ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு வரக்கூடிய பிரச்சனைகள்

 1. Hand writing Problem – கையெழுத்து சரியாக வராமல் இருப்பது
 2. படிப்பதற்கு பிடிக்காமல் போவது
 3. அதிக நேரம் தூங்குவது
 4. நகம் கடிப்பது
 5. படுக்கையில் சிறுநீர் கழிப்பது
 6. பள்ளிக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டது என்று தெரிந்தாலும் கூட மிகவும் தாமதமாக செயல்படுவது
 7. பாத் ரூம் அல்லது டாய்லெட் போனால் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்வது
 8. ஹோம் ஒர்க் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதை பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பது அல்லது வகுப்பறையில் ஆசிரியர் எழுதும் போது மிக மிக மெதுவாக நோட்ஸ் எடுப்பது. சில நேரங்களில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை மாற்றிச் சொல்வது
 9. அடுத்தவர்களின் பொருட்களை எடுத்துக்கொள்ளுவது அல்லது தங்களது பொருட்களை மற்றவர்களிடம் காட்டுவதற்கான முயற்சி செய்து வெளியே கொண்டு விட்டு வருவது
rs=w:1440,h:1440

இதைத்தவிர வளர் இளம் பருவ பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. இவற்றைப்பற்றிய அனைத்து விவரங்களையும் எங்களது ‘குழந்தைகளை வளர்கிறீர்களா? பழக்குகிறீர்களா?’ என்னும் புத்தகத்தில் காணலாம்.

இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள்..

 • படிக்கும் குழந்தைகள் கையாள வேண்டிய உணவுப் பழக்கங்கள்…
 • படிப்பை வெறுத்து தூக்கத்தை உண்டாக்கக் கூடிய காரணிகள்…
 • படிக்கும் குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல்நிலை குன்றாமல் இருக்க பெற்றோர் செய்ய வேண்டியவை…
 • காலையில் எழும்போது முதலில் குழந்தைகளின் காதில் கேட்கக்கூடாத சப்தங்கள்…
 • குழந்தைகளுக்கு படிப்பதற்கான ஆர்வம் தானாக வருவது எப்படி?
 • படிப்பை வெறுக்கச் செய்யும் பெற்றோரது வார்த்தைகள்…
 • compulsive education க்கும் impulsive education க்கும் உள்ள வேறுபாடுகள்….
 • குழந்தைகள் படிப்பதிலிருந்து படிப்பதைப் போல நடிப்பதற்கு மாறுவதற்கான காரணங்கள்…

இது மட்டுமல்லாமல்,

 • உடலியல் மற்றும் உளவியல் சார்த்த முறைகளில் குழந்தைகளைப் பழக்குவது எப்படி…
 • குழந்தைகளுக்கு எந்தெந்த விசயங்களில் கவனம் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்…
 • ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு வரக்கூடிய பிரச்சனைகள்…
 • மன அழுத்தம் உள்ள பெற்றோர்களின் நடத்தை அறிகுறிகள்
 • பெற்றோரின் சோம்பேறி மன நோய் அறிகுறிகள்…
 • Positive Parenting இல் வரும் பிரச்சனைகள்
 • வளர் இளம் பருவ பிரச்சனைகள்

மற்றும் பல தகவல்கள் இந்த புத்தகத்தில் அடங்கி உள்ளன!!! இந்த புத்தகத்தைப் பற்றிய மேலும் விவரங்களை நீங்கள் கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்து பெற முடியும்.

rs=w:1440,h:1440

MSK Law of Skill’ எனும் இந்த புத்தகத்தில் உள்ள தகவல்களை நீங்கள் பெற்ற பின்னும் அதை பற்றிய உங்களது சந்தேகங்களை  எந்த நேரம் வேண்டுமானாலும் எங்களது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முடியும்.

பெற்றோர்களே, உங்கள் விதியை Mind Set ஆல் வெல்ல முடியும்!

குழந்தைகளை திறம்படக் கையாளுவது அல்லது மாற்றியமைப்பது எப்படி என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதே இல்லை! அவர்கள் தங்களது சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் (அவர்களின் அனுபவத்தின் மூலமாக) கூறும் ஆலோசனைகளின் பேரிலேயே இவற்றைக் கையாளுகிறார்கள். உண்மையில் குழந்தை வளர்ப்பைப் பொருத்தவரையில் அனுபவமும், நிதர்சனமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை !

குழந்தைகளை திறம் படக் கையாளுவதை அனுபவமும் திறமையும் வாய்ந்த உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் மூலமாக மட்டுமே சரிவரச் செய்ய முடியும்! நமக்குத் தெரிந்த வகைகளின் கையாண்டால் அதன் விளைவாக நமது குழந்தைகள் முன்னேற்றத்திற்குப் பதிலாக பின்னடையவும் வாய்ப்புகள் உண்டு! இதற்கான தீர்வை நீங்கள் எங்களிடம் பெற முடியும்!!

இதைப்பற்றிய விளக்கத்தை இந்த Video Course ல் நீங்கள் காணலாம்.

Video Course 9: பெற்றோர்களே, உங்கள் விதியை Mind Set ஆல் வெல்ல முடியும் (PW: 1411)

உங்கள் குழந்தைகளிடம் தவறான இயல்பு நடத்தைகள் இருந்தால் அவை உங்கள் உடல் நிலையினையும் பாதிக்கும்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை தேடுகிறார்கள். எப்பொழுதும் சிகிச்சையைத் தேடுவது நோயின் மூலகாரணத்திற்கு அல்ல… மாறாக, நோயின் அறிகுறிகளுக்கே! மூல காரணத்தைத் தேடிக் கண்டறிய விருப்பமோ முயற்சியோ இல்லாமல் அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை பெற்று பலர் மனநிறைவு அடைகிறார்கள். பல நோய்களுக்கும் அடிப்படைக் காரணங்களைத் தேடிப் பார்த்தால் அவை உடலுக்கு வெளியில் வாழ்க்கை பிரச்சனையிலிருந்தே ஆரம்பமானவை என்று புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில சிக்கல்களையும் அவற்றிற்கு வெளிப்பாடான நோய்களையும் இப்போது காண்போம்.

 1. குழந்தைகள் தனது பேச்சைக் கேட்பதில்லை, யாரும் மதிப்பதில்லை என்ற பாதிப்பு. இதனால் மூட்டுப் பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
 2. என் குழந்தைகளின் நடத்தை சரியில்லை. அவர்கள் பெரும் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர் என்ற கவலை இருப்பின் மூட்டு, கை, கால்களில் வாதம் ஏற்படும்.
 3. குடும்பத்தில் சமநிலையற்ற பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் அல்லது தொழில் பிரச்சனை ஏற்பட்டாலும் சர்க்கரை வியாதி ஏற்படும்.
 4. பெருமைக்காக கடன் வாங்கி, அதை திருப்பித் தர முடியாமல் போனால் உடலில் அசதி ஏற்படும். பின்பு படபடப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும்.
 5. பிறரிடம் தனது மதிப்பை உயர்த்த முயற்சி செய்து, அது நடக்குமா அல்லது தோற்று விடுமா என்ற தொடர் எண்ணம் மற்றும் அது நடந்தே தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் நீடித்தால் மன அழுத்தம் மற்றும் மன வேதனைஏற்படும்.
 6. குடும்பத்தினர் புறக்கணித்து விட்டால் தனக்கு யாருமே இல்லை என்ற எண்ணம், அல்லது என்னை புரிந்து கொள்ள யாருமே இல்லை என்ற பாதிப்பு இருந்தால் தலைவலி ஏற்படும்.
 7. கணவன், மனைவி இருவரிடத்தில் ஒற்றுமை இல்லை என்றால் மனைவிக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளும், கணவர்களில் சிலருக்கு ஆண்மை பிரச்சனையும், சிலருக்கு வக்கிர செயல்பாடும் உருவாகும்.
 8. தன்னை விரும்பியவர்கள் இறந்து விட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அல்லது பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தாலோ அல்லது வேறு வழி இல்லாமல் வலுக்கட்டாயமாக வேலை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டாலோ புற்று நோய் ஏற்படும்.
rs=w:1440,h:1440

9. வாழ்க்கையில் விரக்தி, பயம், தோல்வி ஏற்பட்டால் சிறுநீரக பிரச்சனை உருவாகும்.

10. நினைத்தவை எல்லாம் நடக்கவில்லை என்ற எண்ணம் மற்றும் மற்றவர்கள் தன்னைப் பற்றி தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணம் இருந்தால் ஆஸ்துமா ஏற்படும்.

11. ஏமாற்றம் மற்றும் தோல்வி ஏற்படுவதாலும், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற எண்ணமும், என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலையும் ஏற்படுவதாலும் உடலில் தோல் சார்ந்த வியாதிகளும் வரும்.

இங்ஙனம் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும், உடல் நோய்களும் பல விதங்களில்  தொடர்புடையவை என்பது அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இப்படி உளவியலால் மட்டுமே தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடுவதனால் உடலில் எற்படும் பிரச்சனைகளைப் பற்றி எங்களது ‘AMAZING LIFE SYMPTOMS FOR UNDER MIND DISASTERS‘ என்னும் ஆங்கில புத்தகத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளோம். இந்த புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் இந்த இணைப்பினை click செய்து பார்க்கவும்.

நம் மனதில் ஏற்படும் குழப்பங்களை யார் யாரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும்?

குழந்தைகளை வளர்ப்பதும் சிறந்த மனிதராக உருவாக்குவதும் ஒன்றும் கடினமான செயல்பாடு அல்ல… அவர்களது வளர்ச்சி ஏற்றார்போல நீங்கள் சரியான வகையில் நடந்துகொள்ளும் போது நிச்சயமாக அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

குழந்தைகளின் வளர்ச்சிக்காக பெற்றோர் தகுந்த ஆலோசனைகளை பெற்றுச் செயல்படுவது அவசியமே! ஆனால் அந்த ஆலோசனைகள் எங்கிருந்து யார் மூலமாக பெறப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டும். குழந்தைகளை திறம்படக் கையாளுவது அல்லது மாற்றியமைப்பது எப்படி என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதே இல்லை!

rs=w:1440,h:1440

அவர்கள் தங்களது சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் (அவர்களின் அனுபவத்தின் மூலமாக) கூறும் ஆலோசனைகளின் பேரிலேயே இவற்றைக் கையாளுகிறார்கள். உண்மையில் குழந்தை வளர்ப்பைப் பொருத்தவரையில் அனுபவமும், நிதர்சனமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை !

இதை அனுபவமும் திறமையும் வாய்ந்த உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் மூலமாக மட்டுமே சரியாகக் கையாள முடியும்! நமக்குத் தெரிந்த வகைகளின் கையாண்டால் அதன் விளைவாக நமது குழந்தைகள் முன்னேற்றத்திற்குப் பதிலாக பின்னடையவும் வாய்ப்புகள் உண்டு!!!

இதைப்பற்றிய விளக்கத்தினை இந்த Video Courseஇல் காணலாம்.

Video Course 10: நம் மனதில் ஏற்படும் குழப்பங்களை யார் யாரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும்? (PW: 1411)

மெய் நிலை பெற்றோர்கள் (MSK True Parenting Forum)

நமது MSK Life Clinicஇன் ஒரு அங்கமாக துவக்கப்பட்ட True Parenting Forum கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமான முறையில் பல பெற்றோர் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியதோடு Personal consulting வழங்குவதிலும் முன்னணியில் உள்ளது!

 • நீங்கள் எத்தகைய சிக்கலில் இருந்தாலும் அதற்குச் சரியான, மிகத் துல்லியமான, தெளிவான ஆலோசனைகளை MSK Life Clinic இல் பெற முடியும்!
 • இங்கு Mind Partnerஆக  இணைந்தவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தீர்வுகளை வினவ முடியும்!
 • நீங்கள் வெற்றியை எட்டும் வரை எங்கள் consultants உங்களுடன் இணைந்திருப்பார்கள்!!
rs=w:1440,h:1440

உங்களின் குழந்தைகளை வெற்றியாளராக மாற்ற நீங்கள் இணைந்திருக்க வேண்டிய களம் இது

உங்களுடைய குழந்தை வளர்ப்பு முறையில் நீங்கள் கீழ்க்கண்ட வகைகளில் எந்த வகையான வளர்ப்பு முறையை சார்ந்த பெற்றோர்கள்?

 • Smart parenting
 • positive parenting
 • True parenting
 • Therapeutic parenting
 • Corporate parenting

இதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

rs=w:1440,h:1440

குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் என்பது அவர்களுடைய, அதாவது குழந்தைகளுடைய குண இயல்புகளையும், செயல் தன்மைகளையும், கற்றல் முறைகளையும், சமூக பங்களிப்பு, சமூகத்தில் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் உணர்வோடு செயல்படுதல், பெற்றோர்களுடைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல், கல்வி ரீதியான செயல்முறைக்கு ஒத்து வருதல், உணர்ச்சிகளின் மேலாண்மை, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை, சமவயது நண்பர்கள் உடன் உறவாடும் செயல் தன்மை,

குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர்களை எதிர் கொள்ளும் தன்மை, பணத்தை கையாளும் அறிவு, மதிப்பீடு, குழந்தைகளின் வயதுக்கேற்ப வளர்ப்பு நடத்தை மற்றும் குழந்தைகளுடைய இயல்புக்கு பொருத்தமில்லாத விஷயங்களிலிருந்து தவிர்த்துக் கொள்ளுதல், போன்றவற்றை முறையாக உளவியல் ரீதியாக கற்றுக் கொள்ள புரிந்து கொள்ள உதவுவது தான் எங்களுடைய MSK Life clinic Foundation உருவாக்கியுள்ள MSK True Parenting Forum அதாவது மெய்நிலை பெற்றோர்களுடைய அமைப்பு ஆகும்.

இதன் மூலம்  Smart parenting, positive parenting, true parenting, therapeutic parenting, corporate parenting, digital parenting, போன்ற குழந்தை வளர்ப்பு உளவியல் ஆலோசனைகள், குழந்தைகளை செயல்படுத்த உளவியல் திறன் மேம்பாட்டு ஆலோசனை போன்றவற்றை முறையாக வழங்கி வருகிறோம்.

மேற்கூறப்பட்டுள்ள உளவியல் ஆலோசனைத் தொழில் நுட்பங்கள் பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப் பெற்று நல்ல பலனையும் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை.

இத்தகைய சிறந்த சேவையை சமுதாயத்திற்கு, குறிப்பாக மாணவர்களுக்கு செய்ய வேண்டும்; யாவரும் பயனடைந்து சிறப்புற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது மகிழ்சிகரமான ஒரு கலை. அதை சிரமமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்.  குழந்தைகளை வளர்ப்பதும் சிறந்த மனிதராக உருவாக்குவதும் ஒன்றும் கடினமான செயல்பாடு அல்ல… அவர்களது வளர்ச்சி ஏற்றார்போல நீங்கள் சரியான வகையில் நடந்துகொள்ளும் போது நிச்சயமாக அவர்கள் சிறந்து விளங்குவார்கள். இதற்கான தீர்வை நீங்கள் எங்களிடம் பெற்று பயனடையுங்கள்!

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை click செய்யுங்கள்!

True%20Parenting%20Forum

ஏன் உளவியல் ஆலோசனை கட்டாயம்?

நம் குழந்தைகளுக்கு எற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் சரியான வழிகளை காட்டுவதற்கு பொரும்பாலும் யாரும் கிடைப்பதில்லை. ஆனால் தவறுதலான பாதைகள் பல நம்முன் உள்ளன. பெரும்பாலான ஏழைகள் தன்னுடைய பிரச்சனைக்கு ஏதாவது வேண்டுதலோ அல்லது சிறப்பு வழிபாடோ செய்தால் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று சொல்லக் கூடியவர்களை நம்புகின்றனர். அதற்காக பெரும் முதலீடு செய்கின்றனர்.

ஆனால் தொழிலதிபர்கள் தன்னுடைய பிரச்சினைக்கான தீர்வை செயல்முறைகளை நிபுணர் மூலமாக செய்கின்றனர். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் என்ன பிரச்சனை வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து மாற்றுவதற்கான சிறப்பு உளவியல் நிபுணர்களை தன்னோடு இணைத்து வைத்துள்ளனர். என்பது தான் அவர்களின் வெற்றிக்கான திறவுகோல்! இதைப்பற்றிய போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவே ‘வாழ்க்கை – ஓர் உளவியல் பார்வை‘ என்னும் புத்தகத்தினை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

இந்த புத்தகத்தினைப் பற்றிய மேலும் தகவல்களை நீங்கள் இந்த இணைப்பினை click செய்து பெற முடியும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்து பெற முடியும்.

rs=w:1440,h:1440

உங்கள் டிஎன்ஏவை மாற்ற சில கேள்விகள்

பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், ‘இது இயற்கையின் விருப்பம்’ எனக் கூறிக்கொண்டு கவலைகள் மற்றும் குறைபாடுகளை சாதகமாக மாற்றிக் கொள்ளும் மனக்கோளாறு இப்போது மக்களிடையே அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதை புரிந்துகொள்ள நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் தேடுவது அவசியம்.

உங்கள் டிஎன்ஏவை மாற்ற சில கேள்விகள் இங்கே உள்ளன.

 • மிக நல்லவர் என்று சொல்கிறவர்கள் மற்றும் எனக்கு கெட்ட பழக்கம் ஏதும் இல்லை என்று சொல்கிறவர்களுக்கெல்லாம் ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது? பல நேரங்களில் மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை உருவாக்கி, இதய அழுத்தத்தையும் ஏற்படுத்தி மரணம் வரையில் கொண்டு சென்று விடுகிறது. ஏன்..?
 • இதய அடைப்பு அதாவது ‘ஹார்ட் அட்டாக்’ இவைகள் உள்ளனவா? அப்படி உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை இல்லையா..?
 • பிரச்சினைகளினால் மனஅழுத்தம் மற்றும் இதய அழுத்தம் உருவாகிறது என்றால் ஏன் பிரச்சினையை கண்டறிந்து அறிவு சார்ந்த, சமூகம் சார்ந்த, தொழில் சார்ந்த, உழவு சார்ந்த பிரச்சினையை தீர்க்க மக்களுக்கு தெரியவில்லை… அல்லது மனிதர்களை பயன்படுத்தி வாழ ஏன் புரிவதில்லை..?
 • யாரையும் கஷ்டப்படுத்த கூடாது மனவேதனை படுத்தக் கூடாது என்று கூறுபவர்கள், தங்களுக்குள்ளேயே ஏன் மனவேதனை அடைந்து கொண்டே இருக்கிறார்கள்…?
 • நட்பும், உறவும் அதிகமாக வேண்டும் என்று நினைத்து உறவாடுவார்கள் ஏன் அந்த உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்..? இவர்களுக்கு ஏன் உறவு சார்ந்த உளவியல் ஆலோசனை தேவை என்பது புரிவதில்லை…?
 • இளகிய மனதோடு உள்ளவர்கள் ஏன் கடினமான‌ மனதோடு வாழ்பவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது வஞ்சிக்கப்படுகிறார்கள்…?
 • செலவுகளை கணக்கிட்டு செய்வதாக வாழ்பவர்கள் ஏன் கடன் வாங்கி கடன் பிரச்சினையினால் பாதிக்கப்படுகிறார்கள்…?
 • அகம்பாவம், திமிர், ஆணவம் இத்தகைய குணங்களோடு பிறரை அடக்கியாளும் நபர்கள் எப்படி வளமாக வாழ்கின்றனர்? இதன் உளவியல் உண்மை என்ன…?
rs=w:1440,h:1440
 • பணம், பலம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள், பிறரிடத்தில் உதவியை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதில்லை ஏன்….?
 • எட்டு மணி நேரம் பள்ளியில் அல்லது கல்லூரியில் சொல்லிக் கொடுப்பதை படிக்க இயலாத மாணவன், ஒரு மணி நேரம் டியூசன் அல்லது ஸ்பெஷல் கிளாஸ் போனால் அதிக மதிப்பெண் பெற்று விடுகிறான் என்றால், அதாவது எட்டு மணி நேரம் வீண் தான்… ஒரு மணி நேரம் தான் பலனளிக்கிறது என்றால்… ஏன் எட்டு மணி நேரத்தை வீணாக செலவு செய்ய வேண்டும்..? இதன் உளவியல் தன்மை இன்றளவும் புரியாமல் இருப்பதற்கு அறிவு சார்ந்த கோளாறுகள் என்ன….? நல்ல பள்ளி நல்ல கல்லூரி என்று சொல்வதில் என்னென்ன அளவுகோல்கள் உள்ளன…?
 • பெற்றோர்கள் என்பது குழந்தைகளுக்கு வசதி உருவாக்கக்கூடிய  ஏஜெண்டா… அல்லது எந்த சூழ்நிலையிலும் வாழ தகுதியை பழக்கிக் கொடுக்கும் பயிற்சியாளரா…? அல்லது வசதிகளில் மட்டும் வாழ பழகிக் கொள்ளும் குழந்தைகளை உருவாக்கும் பெற்றோரா…?

இதுபோன்ற பல கேள்விகளுக்கும் தெளிவான உளவியல் ஆலோசனை பெற உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பெரும்பாலானோர் குருட்டுத்தனமாக அவர்களுக்குள் விதைக்கப் பட்டுள்ள தவறுதலான இறை நம்பிக்கையின் மூலமாக செயல்பாடுகளை செய்யாமல் அனைத்துமே கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

உண்மையான இறை நம்பிக்கை சார்ந்த ‘துளிம உணர்வு உளவியல்’ பற்றி விளக்குவதற்காகவே ‘இறையானந்தம்‘ எனும் புத்தகத்தினை வெளியிட்டுள்ளோம். இந்த புத்தகத்தினைப் பற்றிய தகவல்களை நீங்கள் இந்த இணைப்பினை click செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை click செய்து பார்க்கலாம்.

rs=w:1440,h:1440

உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் வலை விரித்துக் காத்திருக்கும் ஆபத்துக்கள்

குழந்தை பெற்றோர்களின் வெளிப்பாடு தான். ஆனால் இன்றைய தினம் பெரும்பாலான சேனல்களில் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் அதை பெற்றோர்கள் ரசித்துக் கொள்கின்றனர். அந்த பேச்சில் அந்த குழந்தைகளுடைய பிரச்சனைகளுக்கு இவர், பழைய கற்பனை கதைகளை சொல்லி அவர்களை அதாவது பெற்றோர்களை திருப்திபடுத்தி விடுகின்றனர்! இது எப்படி குழந்தையை மாற்றக் கூடியதாகும்?

குழந்தைகளின் நடத்தையை மாற்றும்..

இது போன்ற பெற்றோர்களின் நடத்தைக்கு உளவியல் காரணம் என்னவென்றால் திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்பட நடிகர்கள் நடிப்பதையோ அல்லது சொல்லுவதையோ உண்மையாக நம்புவது போலவே …..
இந்த உளவியல் மாற்றம் ஏற்பட்டு உள்ளது… இது இன்னமும் தொடர்ந்து வருகிறது… அதாவது பெற்றோர்களை பெற்றோர்களுக்கான நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தப்படும் – சொல்லப்படும் கருத்துக்களை பெற்றோர்கள் ரசித்துக் கொள்கின்றனரே தவிர, அது அந்த குழந்தைகளுக்கு எப்படி சிகிச்சையாக மாறும்…? இந்த விளக்கம் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.

rs=w:1440,h:1440

இதன் விளைவு…இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை..
படிப்பு தொழிலாளிகள் போல் நடத்துகின்றனர் அல்லது அவ்வாறுதான் நடத்தப்பட வேண்டும் என்பதாக சுய கருத்தை ஏற்படுத்திக்கொண்டு சிலர் குழந்தைகளை படிப்பு தொழிலாளிகள் போல நடத்துகின்றனர்..

இன்னும் ஒரு சிலர் தங்களுடைய குழந்தைகள் முன்னேற வேண்டுமென்றால் படிப்பு தொழிலாளி போலத்தான் நடத்த வேண்டும். இப்படித்தான் மற்றவர்களும் நடத்துகின்றனர் என்று நடத்தை பிரதி எடுத்தல் முறையில் குழந்தைகளை வளர்க்கின்றனர்.

 “ஒரு குழந்தை உருவாவதிலிருந்து மடிவது வரை வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் பல நுழைந்து, வாழ்க்கையையே பல நேரங்களில் கேள்விக்குரியதாக்கி வேதனைகளைத் தருகின்றன…

பெர்ட்ரன்ட் ரஸ்ஸல்…

கடவுள் எனும் மாயை …தருமி எழுதிய புத்தகத்தில் (பக்கம் 70)

உங்கள் வீட்டில் ஒரு செடி வளர்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு நீங்கள் சாதாரண தண்ணீர் ஊற்றுவீர்களா? அல்லது மினரல் வாட்டர் ஊற்றுவீர்களா?

மினரல் வாட்டர் ஊற்றி ஏ.சி அறைக்குள் வைத்து வளர்க்கப்படும் செடியை விட வெயில், மழை, பனி இவை அனைத்தையும் தாங்கி வாழக்கூடிய செடி தான் நன்கு வளரும்! அதேப்போல பலவிதமான உணர்ச்சி நிலைகளையும் தாங்கி வாழக்கூடிய குழந்தை தான் நன்கு வாழ்ந்து காட்டும்!

இதற்கு நாம் True Parent ஆக மாற வேண்டியது அவசியம்.

‘பாசிடிவ் பேரண்டிங்’ எனப்படுவது ஒரு குழந்தை ஆசைப்படுவதை அப்படியே செய்து கொடுப்பது! அதாவது ஒரு குழந்தைக்கு தேவையானவற்றை சப்ளை செய்யக்கூடிய ஏஜென்ட் ஆக செயல்படுவது…

உதாரணமாக உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது தவறல்ல. ஆனால் படிக்க வைக்கும் விதத்தில் பண்பில்லாத மனிதராக மாற்றி வைப்பது தான் தவறு!

rs=w:1440,h:1440

இது பல பெற்றோருக்கு, அவர்கள் கடன் வாங்கி கஷ்டப்பட்டு பிரபலமான கல்வி நிறுவனத்தில் மட்டுமே படிக்க வைக்கும் போதோ அல்லது அந்த குழந்தை கஷ்டம் தெரியாமல் ஊதாரித்தனமாக செலவழிக்கும் போதோ புரிவதில்லை!

ஆனால் பின்னாளில் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போதோ அல்லது வேறு ஏதாவது கஷ்டமான சூழ்நிலைகள் வரும் போதோ அதைக்கூட புரிந்து கொள்ளாமல் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் போது தான் பெற்றோருக்கு வேதனை தெரிகிறது. ஆனால் அந்த கஷ்டத்தினை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை!

குழந்தைகள் அழக்கூடாது, எந்த சமயத்திலும் சோர்வடைந்து உட்காரக்கூடாது என்பதற்காக எல்லாப்பொருட்களையும் லஞ்சமாக வாங்கிக்கொடுத்து, பின்னர் பெற்றோருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது, அதை அந்தக் குழந்தை உணர்வதில்லை! பாசமும் பரிதாபமும் இல்லாமல் வளரும் குழந்தைகள் உங்கள் வயதான காலத்தில் உங்களை தூக்கி எறிந்து விடும்!

ஆகவே பெற்றோர்களே… உங்கள் குழந்தைகளுக்கு ‘உழைப்பு’ என்றால் என்ன என்று சொல்லிக்கொடுப்பதை விட உழைப்பு என்றால் என்ன என்பதை காண்பியுங்கள். கனவை உழைப்பாக மாற்றுவது எது என்பதை உணர்த்துங்கள்.

உழைப்பு தான் உங்களை வாழ வைக்கும். கனவு அல்ல. கனவை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். அது நினைப்பினுடைய ஆரம்ப நிலை. ஆனால் அந்த ஆரம்ப நினைப்பே வாழ்நாள் முழுவதும் இருந்து விட்டால் அதுவே மன நோயாக மாறிவிடும். பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகளைப் பெற எங்களது Just Call அமைப்பினை நீங்கள் தொலைபேசி வாயிலாக எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.

rs=w:1440,h:1440

எங்களைப்பற்றி

அடிப்படையில் Mind Set Knowledge எனப்படுவது 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழந்தமிழர்களால் போற்றி வழங்கப்படும் சித்தர் வழி வந்த ஆசீவகம் மரபிலான உளவியல் முறையின் மறு பரிணாமமே ஆகும். ஆசீவகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைப்பினை click செய்து பார்க்கவும்.

நமது MSK Life Clinic Foundationஇல் Mind Lab அதாவது மன ஆய்வகம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக நான்கு parametersஇல் எங்களை நாடி வரும் மக்களை measure பண்ணுகிறோம். அதாவது (1) கல்வி, (2) பொருளாதாரம், (3) உளவியல் ஆரோக்கியம், (4) சமூக நலம். இதில் ஒரு மனிதனுக்கு எது குறைவாக இருக்கிறதோ அது அவரிடமிருந்து மற்ற மூன்று விசயங்களையும்அழித்து விடும்!

rs=w:1440,h:1440

நமது எம் எஸ் கே செயல் நுட்பக் கோட்பாட்டின் படி குழந்தைகள், பெரியவர்கள், திருமண தம்பதிகள், வியாபார நிபுணர்கள், தொழிலதிபர்கள், திரைப்படத் துறை சார்ந்தவர்கள், அரசியல் துறை சார்ந்தவர்கள், இவர்களுக்கு செயல் திறனை அதிகரிப்பது செயல் நுட்பத்தை அதிகரிப்பது செயல் நடத்தைகளை திருத்தமாக மாற்றியமைப்பது போன்ற வெற்றி சார்ந்த உளவியல் சிறப்பு நடத்தைகளை ஆய்வு செய்து மாற்றி வெற்றியாளராக மாற்றுவதே இலக்காகும்.

எங்களுடைய மனப்பதிவு சார் அறிவு உளவியல் கோட்பாட்டின்படி மனம் என்பது அறிவுடைய தொகுப்புதான். ஒவ்வொரு மனிதனும் நிலைபெற்றிருக்க வேண்டும்! இப்போது தமிழ் மொழியின் அழகியல் உளவியல் தன்மையை வெளிப்படுத்த சர்வதேச அளவில் உளவியல் தமிழ் ஆய்வு மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைப்பை கிளிக் (click) செய்யவும்.

 • குழந்தை வளர்ப்பது எப்படி?
 • குழந்தையை பழக்குவது எப்படி?
 • ஆடு வளர்ப்பது எப்படி?
 • ஆட்டை பழக்குவது எப்படி?
 • மாடு வளர்ப்பது எப்படி?
 • மாட்டை பழக்குவது எப்படி?
 • பிசினசை வளர்ப்பது எப்படி?
 • பொருட்களை வாங்குவதற்கு மக்களை பழகுவது எப்படி?
 • மக்களை தங்களுடைய கஸ்டமர் ஆக மாற்றுவது எப்படி?
 • மக்களை நீண்ட கால கஸ்டமர் ஆக மாற்ற அவர்களை எப்படி பழகுவது? எப்படி வளர்ப்பது?
 • படிப்பது எப்படி?
 • படிப்பை வளர்ப்பது எப்படி?
 • படிப்புக்கேற்ற நடத்தையை உருவாக்குவது எப்படி?
 • கல்வியில் முன்னேறுவது எப்படி?
 • கல்வியில் முதல் தரமாக வளர்வது எப்படி?
 • உடல் நலத்தை கண்காணிப்பது எப்படி?
 • உடல் நலத்தை மேம்படுத்துவது எப்படி?
 • உடல் நோயை குறைப்பது எப்படி?

இது போன்ற அனைத்து விதமான தனி மனித வாழ்வியல், நிறுவன மேம்பாட்டு இயல் போன்றவற்றை உளவியல் ரீதியாக மேம்படுத்த முடியும். எங்களைப்பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள google.com இல் MSK Life Clinic Foundation என் டைப் செய்து பார்க்கவும் அல்லது இந்த இணைப்பை click செய்யவும்.

rs=w:1440,h:1440

True Parentingஐப் பற்றி நாம் இங்கே கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் MSK Theoryயின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவை! MSK Life Clinic பற்றிய மேலும் விவரங்களை www.msklifeclinic.in என்னும் இணையதளத்திலும்  MSK Life TV  என்னும்  youtube channelஇலும் நீங்கள் காண முடியும்! எங்களது சேவைகளை அவ்வப்போது தெரிந்துகொள்ள facebook.com/gsexperts  என்னும் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டாம்… பழக்குங்கள்!

Be a True Parent… Not a Positive Parent!

rs=w:1440,h:1440
Spread the love