உங்கள் தொழிலின் தொடர் வெற்றிக்கான இரகசியங்கள்

வாகனத்தை இயக்கத் தெரியாவிட்டால் பெட்ரோல் இருந்தும் பயன் இல்லை. அதேப்போல பணத்தை வைத்து துவங்கி விட்டால் வியாபாரம் தாமாக நடக்காது. டிரைவிங் தெரிந்தால் வாகனத்தை ஓட்டலாம். ஆனால் நல்ல ஒரு டிரைவர் ஆக வேண்டுமென்றால் அதையும் தாண்டி சாலையில் வாகனங்களை இயக்குவதற்கான பலவிதமான நுணுக்கங்களையும் தெரிந்தாக வேண்டும். அதேவகையில் பிசினஸ்க்கும் பலவித நுணுக்கங்கள் உள்ளன!

rs=w:1440,h:1440

இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

சிலபேர் வியாபாரம் செய்வதற்கு அனுபவமே அடிப்படை என்கிறார்கள்.

வியாபாரத்திற்கு தேவை அனுபவம் என்றால் வியாபாரம் செய்து வயதானவர்கள் எல்லாம் ஏன் பணக்காரர்கள் ஆகவில்லை?

பணம் இருந்தால் தொழில் செய்து விடலாம் என்கிறார்கள் சில பேர். அப்படியென்றால் பேங்க் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏன் தொழிலை செய்யாமல் பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

காலமும் தேவைகளும் மாறிக்கொண்டே இருப்பதற்கு ஏற்ப தொழிலின் செயல்பாடுகளை புதுப்பித்துக் கொண்டிருக்காமல், கடனை ஊற்றி இலாபத்தை இறைக்க முயன்று கொண்டிருப்பதற்குப் பெயர் வியாபாரம் என்றால்… மாறி வரும் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு தங்களின் நிறுவனத்தையும் வளர்ப்பதற்காக ஒவ்வொரு செயல் அசைவிலும் நுண்ணறிவு உடையவர்களை பயன்படுத்தி இலாபத்தை பெருக்கிக் கொள்ளும் செயல்முறைக்கு பெயர் என்ன?

ஒரு தொழில் நன்றாக நடக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையானது  என்ன என்பதை தெளிவாக உணராமல் நமக்குத் தெரிந்ததை வைத்து தொழில் செய்வதால் இலாபம் வர வாய்ப்பில்லை! அந்தத் தேவைகள் என்னென்ன என்பதை உணர்ந்தவர்களே கார்பொரேட் முதலாளிகளாக மாறுகிறார்கள். அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கமாகும்!

rs=w:1440,h:1440

குழந்தை பருவம் முதலே நமக்குள் புகுத்தப்படும் தவறான கருத்துக்கள்

ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு விதத்தில் மற்றவர்களிடமிருந்து அறிவிலும் திறமையிலும் அனுபவத்திலும் மாறுபட்டுக் கொண்டிருக்கிறான். தொழிலில் கூட அனைவரும் வேறுபடுகின்றனர்! ஆனால் தொழிலுக்கான திறமைகளை வளர்ப்பதற்கான அறிவுசார் கருத்துக்கள் மட்டும் எங்கேயும் விதைக்கப்படுவதில்லை. மாறாக, குழந்தை பருவம் முதலே நமக்குள் தவறான கருத்துக்களே புகுத்தப்படுகின்றன!

உதாரணமாக, ‘கடின உழைப்பு மட்டுமே நம்மை முன்னேற்றும்’ என்று கூறுபவர்கள் கடின உழைப்பு உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் உழைத்தும் ஏன் முன்னேறவில்லை என கூறமுடியுமா? உழைப்பு என்றால் என்ன என்பதையும், எந்த வகையில் உழைக்க வேண்டும் என்பதையும் அறியாமல் திரும்பத் திரும்ப ஒரு வேலையைச் செய்தால் அதன் பெயர் உழைப்பா? அல்லது கடின உழைப்பா? உண்மையில் பிசினெஸ் பண்ண, பணம் மட்டுமே வேண்டும் என நம்ப வைப்பது பைனான்சியல் பிசினெஸ் உடைய ஒருவகையான  மார்க்கெட்டிங் செயல்முறை. இது முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே புரியும்.

லோன் வாங்க பேங்க் போக அறிவு வேலை செய்கிறது. ஆனால் பிசினஸ் பண்ண அறிவு ஏன் வேலை செய்வதில்லை? பள்ளி செல்லும் காலம் முதற்கொண்டே நம் சமுகத்தின் மூலமாக அவரவர் உணர்ந்ததை ‘அறிவு’ என்ற பெயரில் நமக்குள் விதைத்திருப்பதை புரிந்து கொண்டு அதில் சரியான முறையில் நிபுணர்கள் மூலமாக சீரமைப்பு செய்யாமல் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருப்பது தான் இதற்கான காரணம்.

rs=w:1440,h:1440

பிசினஸ் லாஸ் ஆவதற்கும், பாஸ் ஆவதற்கும் என்ன காரணம்?

ஸ்கூல் போனால் போதாது, டியூசன் போக வேண்டும். டியூசன் போனாலும் பத்தாது, கோச்சிங் போக வேண்டும். இதே வகையில் பிசினெஸ் பண்ண லோன் வாங்க வேண்டும், பின்பு அந்த லோனை கட்ட புது லோன் வாங்க வேண்டும். பின்பு லோனை கட்ட சம்பாதித்ததை விற்று லோனை கட்டி மீண்டும் பழைய நிலையில் இருந்து நேரத்தையும் காலத்தையும் பிசினெஸ்சையும் குடும்பத்தினரையும் குறை சொல்லி தன்னை அறிவாளி என விளம்பரப்படுத்துவதோடு நிற்காமல் சமுதாயம் சரியில்லை என கூட்டறிக்கை விட்டுக்கொண்டிருக்க வேண்டும். நமக்கு எந்த மாதிரியான அறிவு போதிக்கப்படுகிறது?

நாட்டை ஆள பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் டியூஷன் தேவையில்லை!

மனித உளவியல் தான் தேவை! ஸ்கூலில் பாடம் படிக்காதவன் டியூசன் சென்றால் பாடம் படிப்பான் என்று நம்புவதும், உழைப்பு இல்லாமல் கடன் வாங்கியவன் பிசினெஸ் பண்ணி வெற்றி பெறுவான் என்று நம்புவதும் ஓன்று தான்.

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பெருமையாக நான் கூலி வேலைக்கு உங்களை அனுப்புகிறேன், கூலி வேலைக்கான வேலை செய்திகளுக்கான பயிற்சிகள் தருகிறேன் என்று சொல்கிறவர்களும், ஒரு நிறுவனத்தின் கூலிக்காரர்கள் என்பதை கூலி வேலைக்குப் போகக் கூடியவர்களே தெரியாமல் இருப்பதும் தான் அவர்களுடைய இன்றைய மனப்பாட தேர்வின் அறிவு நிலை!

MSK Theory

வலிக்காமல் பணம் சம்பாதிக்க வழி இல்லை என்பது பள்ளி, கல்லூரி படித்தவர்களுக்கு மட்டும் ஏனோ புரிவதில்லை.

குறைந்த வேலைக்கு அதிக கூலி! இப்படிப்பட்ட வேலைகளை தேர்ந்தெடுத்து செய்வதே திறமை என்றால் மற்றவர்கள் செய்வதெல்லாம் துரோகமா?

வியாபாரத்தைப் பொறுத்தவரையில் வயதாகும் போது வியாபார அனுபவம் அதிகமாகலாம். ஆனால் வியாபாரத்திற்கான அணுகுமுறைகள் அதிகமாவதில்லை. வியாபார அனுபவம் வியாபாரத்திற்குத் தேவையான அணுகுமுறைகளை மாற்றுவதில்லை. சரியான தொழில் வல்லுனர்கள் (Professional Business Consultants) மூலம் பெறப்படக்கூடிய அறிவுசார் அணுகுமுறைகளே வியாபாரத்தின் வளர்ச்சியினை நிர்ணயிக்கக்கூடியவை!

உதாரணமாக ஒரு திரைப்படம் அல்லது டி.வி சீரியலை எடுத்துக்கொள்வோம். படத்தில் நடிப்பது வேறு, கதையை உருவாக்குவது வேறு, அந்தக்கதையை producerயிடம் சொல்லி approval வங்கி அந்தப் படத்தை உருவாக்குவதற்கு உண்டான teccnicianகளை select பண்ணி அதை run பண்ணி படத்தை முடிப்பது வேறு! இந்த ஒவ்வொரு வகையான செயல்பாடுகளுக்கும் பின்னால் எத்தனை நூறு Professional Business consultants இருக்கிறார்கள் தெரியுமா? அவ்வளவு ஏன்? ஒரு படத்திற்கான போஸ்டரை design செய்பவர்களுக்கு தரப்படும் சம்பளம் மட்டுமே இந்த துறையில் உள்ள முக்கியத்துவத்தை உங்களுக்கு புரிய வைக்கும்!

MSK Theory

அறிவு சார்ந்து உழைக்கும் நடிகர்கள், அறிவு சார் நிபுணர்களின் தொடர் ஆலோசனை மூலம் உழைக்கும் அரசியல்வாதிகள் இவர்களின் வழியாக பாடம் படித்தாலே போதும். ஆனால் இன்று பலர் அவர்களின் படத்தை மட்டுமே பார்த்துவிட்டு அவர்கள் கற்ற பாடத்தை மறக்கின்றனர்!

பெற்றோர் கூட தன்னுடைய குழந்தைகள் பெரிய பண்ணையில் வேலை செய்கின்றன, நல்ல கூலி கொடுக்கிறார்கள், அவ்வப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கூலி வேலைக்கான பயிற்சி கொடுக்கிறார்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்! ஆனால் அனைவருமே அந்த கூலிவேலை நிறுவனத்தை உருவாக்கியவர் எப்படிப்பட்ட அறிவு பெற்றவர் என்று யோசிக்கும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். 

அதைப்பற்றி பேசினால் உடனடியாக உலகத்திலுள்ள அனைவரும் முதலாளியாக ஆக முடியுமா… முதலாளி முதலாளி தான், கூலிக்காரன் கூலிக்காரன் தான் என்று சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். ஆகவே இந்த உலகத்தில் படித்தவர்கள் கூலியாக இருப்பதற்கும், படிக்காதவர்கள் கூலி கொடுக்கும் நிலையில் இருப்பதற்கும், ஒரு மெல்லிய வித்தியாசம் உள்ளது. அதுதான் மனப்பாட தேர்வுமுறை வெற்றிக்கும் செயல்பட்ட தேர்வில் தெளிந்த அறிவு நிலைக்கும் உள்ள வேறுபாடு.

இது பள்ளிக்கல்வி பெறும் நிலையிலிருந்தே புகட்டப்பட வேண்டும். அறிவுசார் பயன்பாடு மட்டுமே உழைப்பு என நாங்கள் கண்டறிந்தோம். இது டியூசன் மாணவர்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். இதை நாங்கள் உளவியல் ரீதியாக மனப்பதிவு சார் அறிவு என்று வகைப்படுத்தி ஒவ்வொருவரையும் கூலி கொடுக்கும் முதலாளி ஆக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய செயல் நோக்கமாக இருக்கிறது. 

rs=w:1440,h:1440
Tution to intuition

எம் எஸ் கே என்கின்ற மன பதிவு சார் அறிவு உளவியல் கோட்பாட்டின் படி ஐம்புலன்கள் வாயிலாக செலுத்தப்படுவது அறிவு அல்ல. ஐம்புலன்களினால் உணரப்பட்டு தகவல் அறிவு செயல் அறிவாக மாற்றப்பட்டு பயன்படுத்துபவர் – பயனாளிகள் இருவருக்கும் பலன் கொடுக்கும் கற்றல் முறை சார்ந்த கல்வியே நடத்தை சார் அறிவுத்திறன் மேம்பாட்டு கல்வியாகும்! இதனைத்தான் எங்கள் எம்எஸ்கே உளவியல் கோட்பாடு கற்றல் என்ற கல்விமுறையை intuiting என மக்களுக்கு விழிப்புணர்வு செய்கிறோம்…

உணரப்படாமல் தகவலை மனப்பாடம் செய்து கேட்கப்படும் பொழுது வெளிப்படுத்தப்படும் தகவல் வெளிப்பாட்டை எம் எஸ் கே உளவியல் கற்றல் என்ற கல்வியில் வகைப்படுத்துவது இல்லை… மனப்பாட தகவலை எம்எஸ்கே உளவியல் தகவல் சேகரிப்பு மற்றும் அத்தகவலை வெளிப்படுத்தும் நினைவகம் என்கின்ற கோட்பாட்டிலேயே பிரித்து வைக்கிறது.. இந்தக் கல்வியை தான் டுடோரியல் என்று சொல்லக்கூடிய திரும்பத் திரும்ப உச்சரித்து நிறைவேற்றப்படும் தகவல் சேகரிப்பு கருதுகிறது…
இதனால்தான் பெரும்பாலான கல்வி பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் கூட பணியாளராக தொழிலாளர் மட்டுமே இருக்க இடம் தேடுகின்றனர்.

‌ ஆனால் கல்வி என்கின்ற பொது சொல்லிக் கொடுத்து தகவலைப் பெறாதவர்கள்.. இப்படி டுடோரியல் கல்வி பிடித்தவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு முன்னேறும் அளவிற்கு நடைமுறை சமூக தேவை திறன்களை பெற்றவர்களாக மாறி தொழிலாளர்களை பணியாளர்களை வைத்து தன் சமூகப் பணியை நிறைவேற்றும் தொழிலதிபராக மாறுகின்றனர்… இன்று கல்லூரியில் படித்தவர்கள் கூட இறுதி ஆண்டில் வேலைக்காகவே பயிற்சி அளிக்கப்பட்டு வேலை செய்வது எப்படி, வேலை தேடுவது எப்படி என்ற நிலைக்கு மனதளவில் உருவாக்கப்படுகின்றர்… இதையும் சற்று கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் பெரும்பாலான பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட வேலை தேட தெரியாமல் வேலைதேடும் பணியும் கூட கல்வி என்ற தகவலை சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்கள் செய்கின்றன என்பதுதான் இன்றைய நிகழ்நிலை….

குறிப்பாக இதில் பெற்றோரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இதைப்பற்றிய விழிப்புணர்வினை பெற்றோருக்கு வழங்குவதற்காகவே ‘உங்கள் குழந்தைகளை உண்மையில் வளர்கிறீர்களா? அல்லது கெடுக்கிறீர்களா?’ என்ற ஓர் பதிவினை நாங்கள் வெளியிட்டுள்ளோம். (Details: Click Here விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்) உண்மையினை உணர்ந்து தெளியுங்கள். உங்கள் குழந்தைகளை சமுதாயத்திற்கு பொருத்தமான நடந்தை இயல்பினை உடைய வெற்றியாளர்களாக மாற்றுங்கள்.

Don’t Be a Positive Parent!

கர்மா, மதம் சார்ந்த கோட்பாடுகள்

யாரும் எதையும் தன்னைத்தானே சிருஷ்டித்துக் கொள்வதில்லை! இயற்கை அனைத்து உயிர் இனத்திற்கும் ஒவ்வொரு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது! இதை புரிந்துகொண்டு இயற்கை முறையில் உதவி செய்பவர்கள் தான் தொழில் துறை, உற்பத்தி, வளர்ச்சி மற்றும் வியாபாரத்தில் இலாபம் பெற முடியும்!

பணம் என்பது மனித ஆற்றல் மூலம் வருவது! இதற்கு ‘உழைப்பு’ என்னும் இயந்திரத்தை இயக்கும் மனதின் திறன் தான் தேவை, மந்திரம் தேவை இல்லை! ஆனால் இன்று வியாபார நுணுக்கங்களை புரிந்து கொள்ளாமல் வியாபாரம் செய்து தொடர் தோல்விகளை சந்தித்தவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றி சிலர் புதுவகையிலான குழப்பம் மிகுந்த கருத்துக்களை மக்களிடையே விதைத்து தங்களது இலாபத்தினை பெருக்கிக் கொள்கின்றனர்.

உண்மையான இறையனந்தத்தை உணர்ந்தவர்கள் இத்தகைய செயல்பாடுகளை ஆதரிப்பதில்லை. ஆனால் இயற்கை என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன என்பது போன்ற எதற்கும் விடை தெரியாத இவர்கள் “பரிகாரம் செய்தால் சுபகாரியம்” என்று கூறி தங்களது மத நிறுவனங்களின் மூலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றனர். இது ‘கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இறைவனையும், இறை நியதியையும் ஏமாற்றும் வேலை என்பதையும் உழைப்பில் தான் உயர்வு உள்ளது, இதுவே இறை நியதி என்பதையும் உணர்ந்தவர்கள் இத்தகைய நிறுவனங்களையும் நாடுவதில்லை.

rs=w:1440,h:1440

கட்சி, சினிமா, கடவுள் இவர்களுக்கு பலர் ரெப்ரசெண்டேடிவ் போலவும் ஏஜென்ட் போலவும் செயல்பட வைக்கும் உந்து சக்தி எது என இன்று வரை ஆராய்ச்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு பதில் என்னவென்றால், இவர்கள் செய்யும் ஏஜென்ட் வேலையையும் ரெப்ரசெண்டேடிவ் வேலையையும் தங்களுக்காகவும் தங்களுடைய குடும்ப மற்றும் சமூக ஒற்றுமைக்காகவும் செய்திருந்தால் மிகப் பெரிய முன்னோடியாக ஆகியிருக்கலாம் என்பது தான்!

வழிபடுதல் வேறு, விஞ்ஞானம் வேறு என்பதை பிரிக்காமல் இருப்பதற்காக, வழிபாடுதான் விஞ்ஞானம் என டிஎன்ஏ அளவில் பழக்கப் படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் அதை சொல்பவர்கள் சிறு விஷயமாக இருந்தாலும் கூட விஞ்ஞான மருத்துவ தீர்வுகளை தங்களுக்குள் மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். மற்றவர்களை வழிபாடு விஞ்ஞானம் என்பது தான் உண்மை – என்கின்ற கொள்கை ரீதியாக திரும்பத்திரும்ப பலப்படுத்தப் படுகின்றனர். 

Ritual to reality msk theory

பெரும்பாலானவர்கள் எதை செய்தால் எது நடக்கும்.. என்பதைத் தாண்டி தனக்குத் இலகுவாக உள்ளதை செய்தால் கடினமானது நடக்காதா என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டு, தன் இயலாமைக்கு மாபெரும் சக்தி உள்ள கடவுளை துணைக்கு எடுத்துக் கொண்டு நான் இதை செய்கிறேன், நீ அதை செய் என்று இயற்கை – பிரபஞ்சத்தில் இடத்தில் முறையிடுவது தான் ‘சடங்கு சார் செயல்முறை’ என்று பரவலாக மக்கள் கூறுகின்றனர்..

ஆனால் உளவியல் ரீதியாக ஒன்று நடப்பதற்கு தூண்டல் செய்யும் காரியம் தான் ‘பரிகாரம்’ என்று சொல்லப்படுகிறது! ஆனால் மக்களோ அதை சடங்கு காரியமாக மாற்றிவிட்டு கடவுளை குறை கூறுகின்றனர் அல்லது சமூகத்தை குறை கூறுகின்றனர் அல்லது தன் மீது குறை கூறுகின்றனர் அல்லது பிரபஞ்ச இயக்கத்தின் மீது பொய்யை இட்டுக் கட்டி விடுகின்றனர்..

ஒரு விவசாயி தன் செயலை மாற்றுவதன் மூலமாக இயற்கையை வழிபடுகின்றனர்.. எம் எஸ் கே இயற்கை உளவியல் பிரபஞ்ச நுண்ணறிவு கோட்பாட்டின்படி வழிபடுதல் மட்டுமே உண்மையான வழிபாடாகும்.. வழிபடுதல் என்பது இயற்கையின் உடைய செயல் இயக்க நியதி செயல் நுட்ப நியதி அடிப்படையில் செயல்படுவதாகவும் செயலில் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லையெனில் செயல் மாற்றத்தை உருவாக்கி எந்த காரியம் நடக்க வேண்டுமோ அந்த காரியத்திற்கு உப காரியமாக செயலாக உள்ளதை முறைப்படுத்த வேண்டும் என்று எங்களை கோட்பாடு வரையறுக்கிறது அதாவது வளர்ச்சிக்கான வழிபடுதல் நீதியை வரையறுக்கிறது…

பெயர் மாற்றமும் இடமாற்றமும் தேவையில்லை! செயல் மாற்றம் செயல் திருத்த மாற்றம் செயல் நுட்ப மாற்றம் இது தான் இயற்கை என்கின்ற பிரபஞ்ச நீதிக்கு வழிபடல் ஆகும்

கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்தது. ஆனால் விஞ்ஞானம் என்பது செயல்பாடு சார்ந்தது. அதனால்தான் செயல்படுவதை விட நம்புவது எளிதாக உள்ளதால் அதிகப்படியான மக்கள் நம்புவதை முழு நேரம் தொழிலாக ஏற்படுத்தி கொள்கின்றனர். நீங்கள் மத நிறுவனங்களின் வாடிக்கையாளராக இருப்பதைவிட இறையனந்தத்தினை உணர்வதே சிறந்த வழியாக இருக்க முடியும். இதை மக்களுக்கு விழிப்புணர்வாக உணர்த்துவதற்காகவே ‘இறையானந்தம்’ என்ற புத்தகத்தினை நாங்கள் வெளியிட்டுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை பெற இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

பிசினஸ் வெற்றியடைய மந்திரம், சூத்திரம், ஈர்ப்பு போன்றவற்றில் கவனத்தை திசை திருப்புவதால் உழைப்பு என்ற கருவி மறக்கடிக்கப் படுகிறது. இது கார்பொரேட்டுகளுக்கு மட்டுமே புரிந்த இரகசியம்!

“ஆசையே துன்பத்திற்கு காரணம்”

புத்தர் சொன்னது பலருக்கும் தாமதமாகத்தான் புரிகிறது!

உழைக்காமல் ஆசைப்படுவதே துன்பத்திற்கு காரணம் என்று!

அடுத்து ‘கர்மா’ என்ற கோட்பாட்டினைப் பற்றி பார்ப்போம். எவ்வளவு முயன்றாலும் ‘கர்மா’ உங்களது தொழில் வளர்ச்சியினை பாதிக்கிறதா? காத்திருப்பதை விட்டுவிட்டு உங்களுக்கு சாதகமான ‘Business Mind Set Knowledge’ ன் உண்மை நிலையினை அறியுங்கள். ‘KARMA’ என்பது மதம் சார்ந்த கோட்பாடு அல்ல. MSK Theoryயின் படி, ‘KARMA’ எனப்படுவது Knowledge Analysis Reorganizing & Mind Acceleration அதாவது அறிவு பகுப்பாய்வு – மறுசீரமைத்தல் மற்றும் மன விரைவுபடுத்தல். அறிவியல் ரீதியாக அணுகினால் கர்மாவிலிருந்து விடுபட முடியும்! இதைப் பற்றி விளக்குவதற்காகவே ‘கர்மாவை கையில் எடுங்கள்’ என்னும் புத்தகத்தினை நாங்கள் வெளியிட்டுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை பெற இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

இந்த புத்தகத்தினை படித்த பிறகும் உங்களுக்கு ‘கர்மா’ பற்றிய சந்தேகங்கள் எழுந்தால் அவற்றை எங்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். கர்ம யோகம் பற்றி உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். எங்களது சேவை அனைத்து பிரிவினருக்கும் பொதுவானது.

ஏழ்மை வாழ்க்கையும் பணக்கார மனநிலையும்

ஏழை என்பதும் தொழிலாளி என்பதும் ஒற்றை செயலில் நிலைபெற்று விடுகிறது. பணக்காரன், தொழிலதிபர் என்பவர்கள் செயலில் பன்முகத் தன்மை உடையவர்கள்! ஏழைக்கும் பணக்காரனுக்கும், தொழிலாளிக்கும் தொழில் அதிபருக்கும் இடையே பல்வேறு உளவியல் வேறுபாடுகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், ஏழைக்கு வேலை சுமை; பணக்காரனுக்கு வேலை விருப்பம் – கடமை.

வேலையை ஒரு செயலாக பார்க்கிறவர்கள் ஏழையாகவே இருக்கின்றனர். வேலையை விருப்பத்துடன் பார்க்கக் கூடியவர்கள் பணக்காரனாக உரு மாறுகின்றனர். சொன்ன வேலையை மட்டும் செய்தால் ஏழை. சொன்ன வேலைக்கு அப்பால் சொல்லாத வேலையும் சேர்த்து திறம்பட செய்து முடிப்பவர் தான் ஏழைக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபராக உரு மாறுகிறார்.

ஏழை வேலை முடிந்தவுடன் ஓய்வெடுக்க, தூங்க அல்லது  கேளிக்கைகளில் ஈடுபட ஆர்வத்துடன் சென்று விடுகிறான். ஆனால் பணக்காரன் வேலை முடிந்தவுடன் ஆர்வத்துடன் அடுத்த வேலைக்கான தயாரிப்புகளை தூக்கத்தை விடுத்து, ஓய்வை தூக்கி எறிந்து, ஆர்வத்துடன் தன்னை வளர்க்க, உழைக்க ஆரம்பித்து விடுகிறான். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய தொழில் திறன் மேம்பாட்டுக்கான சரியான நிபுணர்களிடம் ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்கிறான்.

rs=w:1440,h:1440

வேலைக்காரன் தூங்கி விடுவான். உழைப்பவனும் உழைப்பை உருவாக்குபவனும் தூங்க மாட்டான், ஓய்வு எடுக்க மாட்டான், கேளிக்கை விரும்ப மாட்டான். அவன் விரும்புவதெல்லாம் உழைப்பின் பெறுமதி,  உழைப்பின் வெகுமதி, உழைப்பின் அங்கீகாரம், உழைப்பின் முன்னேற்றம்!

முதலாளிக்கு வேலை செய்பவரின் மீது உள்ள அக்கறையை விட வேலை மீது மட்டுமே அக்கறை, ஆனால் தொழிலாளிக்கு வேலையை விட முதலாளி மீது மட்டும் தான் அக்கறை. இது தொழிலாளிக்கு 40 வயதுக்கு மேல் தான் புரிகிறது, சிலருக்கு ஆயுள் வரை புரிவதில்லை!

MSK Theory

ஏழையை மாற்ற முடியாது, ஆனால் ஏமாற்றலாம். பணக்காரனை ஏமாற்ற முடியாது, ஆனால் மாற்றலாம்.

ஏழை பழமை வாதத்தில் பழக்கப்பட்டு பிறரை நம்ப வைப்பதில் ஆனந்தப் பட்டுக் கொண்டே இருப்பான். அவனுக்குத் தேவை ஆறுதல். ஆறுதலில் இன்பம் அடைந்து கற்பனையில் காலம் நகர்த்திக்கொண்டிருப்பான். ஆனால் பணக்காரன் ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருப்பான். உலகத்தை கையாளும் திறனை பெற்றுக்கொள்ள அத்துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பயன்படுத்தி  வெற்றி பெற்று சமூகத்தில் தன்னை வளர்ச்சிப் படுத்திக் கொண்டே இருப்பான்.

ஒன்றை மட்டும் பார்த்து செயல்படுபவன் தொழிலாளி. ஒன்றைச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் பார்த்து, கவனித்து தொழில்நுட்ப பண்புகளை பயன்படுத்தி நிபுணரின் ஆலோசனைகளை பெற்று வெற்றி பெறுபவர் தான் முதலாளி. ஏழைகள் எல்லாம் தொழிலாளி, பணக்காரன் எல்லாம் வியாபாரி. ஏனெனில் பணக்காரன் தனக்குத் தேவை அறிவு செயல் திருத்த வழிகாட்டல் செயல் ஆலோசனை என்பதை புரிந்து வைத்திருப்பான்.

ஒவ்வொரு கூலி பெறும் நபர்களும் கூலி பெறும் நேரத்தில் கூட மனதை சரியான முறையில் பயன்படுத்தாமல் கனவுகண்டு வாழ்வார்கள். ஆனால் கூலி கொடுக்கும் தொழிலதிபரோ வேலை செய்யும் நேரத்திலும் வேலையை முடித்த நேரத்தில் தன்னுடைய தொழில் சார்ந்த திறனை அதிகப்படுத்த செயல் நுட்ப நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.

rs=w:1440,h:1440

ஆனால் ஏழையும் சரி கூலித்தொழிலாளியும் சரி, நான் ஏன் பிறரிடத்தில் ஆலோசனை பெற வேண்டும்? எனக்கு எல்லாம் தெரியும்… என சொல்லிக்கொண்டு தனது உயிர் மூலமாகிய டிஎன் எவையும் தனது சந்ததியின் டிஎன் எவையும் அறிவற்ற முறையில் செயலற்ற முறையில் தூக்கி வைத்துக் கொண்டேன் பெருமையில் கனவில் யாரோ கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் காலத்தை கடத்திக் கொண்டே பிறரையும் நம்ப வைத்துக் கொண்டு வாழ்வான்.

தனக்கு கிடைக்கவில்லை என்றால் இதற்கு காரணம் கடவுள் கிரகம் பெயர் ராசி மனை ராசி மனைவி ராசி எண்கணித ராசி என அனைத்து ராசிகளையும் பற்றி பேசிக்கொண்டு வெற்றிக்கு காரணம் நான் இல்லை இவர்கள்தான் அவர்கள்தான் என நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்ப வைத்துக் கொண்டு கற்பனையில் காலத்தை கம்பீரமாக கழித்துக்கொண்டு பயனற்ற சந்ததியை வளர்த்துக் கொண்டிருப்பான். உற்பத்திப் பொருளை ரசிப்பவன் ஏழை கூலி தொழிலாளி.. பொருளை உற்பத்தி செய்வது எப்படி என சிந்திப்பவன் செயல்படுபவன் அறிவு ஆலோசனை பெறுபவன் பணக்காரன் என்ற தொழிலதிபர். இதுதான் தொழிலாளி தொழிலதிபர் உளவியல் செயல் இயக்க வேறுபாடு.

MSK Theory

திரைப்படத்தை பார்ப்பவன் தொழிலாளி.. நடிகரை ரசிப்பவன், நடிகையை பார்த்து கனவு காண்கிறவன் தொழிலாளி.. நடிகரையும் நடிகர்களை பார்க்கும் மனிதர்களையும் ஒருங்கிணைத்து தொழிலாக உருமாற்றம் செய்பவன் தான் திரைப்பட தயாரிப்பு தொழிலதிபர்.

ஒவ்வொருவரும் தன் வளர்ச்சி தன்னறிவு இவற்றைப் பற்றி சிந்திக்காமல் அரசியல்வாதிகளை பற்றியோ ஆன்மீகவாதிகளின் பற்றி அல்லது நடிகர்களை பற்றி அல்லது விளையாட்டு வீரர்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் உளவியல் இயக்கத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்தவர்கள் மட்டுமே பணக்காரனாக பெரு நிறுவன அதிபராக மாற முடியும் என்பதுதான் உளவியல் சமூகவியல் நிலைத்தன்மை!

உற்பத்திப் பொருளிலிருந்து உழைப்பாளன் அந்நியப்படுவதை ‘ஃபெட்டிஷிசம்’ (சரக்கு வழிபாடு) என்பர். இந்த கருத்துக்களை பார்க்கும் பொழுது பல பேருக்கு பல சிந்தனைகள் ஏற்படலாம். ஆனால் குழப்பமான சிந்தனைகள் மட்டுமே ஏற்படும். உண்மையை உற்று நோக்கினால், ஒவ்வொரு பணக்காரரும் அவர் வியாபாரியாக இருக்கலாம், தொழிலதிபராக இருக்கலாம். 

இவர்களுடைய பார்வை அறிவு, ஒற்றை பார்வை அல்லது ஒற்றை அறிவு அல்ல.. அவர்களுக்கு அறிவுசார்ந்த தெளிவின்மை ஏற்பட்டால், உடனடியாக அதற்கான தெளிவை – நுணுக்கத்தை பெற்றுக் கொள்ள, பணம் செலவழித்து அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை ஆலோசகராக வைத்துக்கொண்டு, வெற்றியை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

rs=w:1440,h:1440

ஆனால் ஏழைகளாக இருக்கக்கூடியவர்கள், சொந்த அறிவு பெரியது என்ற எண்ணத்திலும், அதற்கடுத்தது எல்லாம் அவன் செயல் என்ற நம்பிக்கையிலும் அதையும் மீறி குழப்பம் ஏற்பட்டாலும் பயம் ஏற்பட்டாலும் அவர்களைப் போல உள்ளத்தில் அறிவுரையை பெற்றுக்கொண்டு அவர்களும் தனது இலவசமான அறிவுரையை ஏராளமாக வழங்கிவிட்டு அறிவுரை பெறுபவர்களை அப்படியே செய்யச் சொல்லி விடுகின்றனர்.. 

விளைவு தோல்வியை காணும்பொழுது முற்றிலுமாக அனைத்தும் இழந்த நிலையில் இருக்கின்றனர்.. இவர்கள் மூன்றாம் சக்தி அதாவது இவர்களை கடவுள் என்கின்ற ஒருவர் இவர்களின் தேவைகளை கணக்கெடுத்து இன்ஸ்டால்மென்ட் அல்லது மொத்தமாக வழங்கி விடுவார் என்ற இருட்டு – குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

பணக்காரன் சிரமம் ஏற்பட்டால், புத்தியை நிபுணர்களிடம் பெற்றுக்கொண்டு, செயல்பாட்டில் ஈடுபடுகிறான். மற்றவர்கள் கேட்டால் இது கடவுள் செயல் என சொல்லிவிட்டு இவன் தன் வேலையை தானே பார்க்கிறான். ஒவ்வொரு வாழ்க்கை சூழல் மாறும் பொழுது, அதற்கான அறிவை நிபுணர்களிடத்தில் பெற்றுக் கொள்கிறார்.

 உதாரணமாக தங்க விற்பனையை அதிகப்படுத்த, சுப முகூர்த்த நாள், தங்கம் வாங்க சிறந்த நாள் போன்ற நாட்களை உருவாக்கி வெற்றி பெறுகிறான். அதேபோல மக்களுக்குத் தேவை என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உற்பத்தியை துவக்குகிறார். மேலும் ஒவ்வொரு நாளையும் சிறப்பு நாளாக மாற்றி, அதை மக்களுக்கு சொல்லி, தன் வியாபாரத்தை பெருக்குகிறான். தன் வியாபாரத்திற்கு கடவுளை நம்புவதில்லை, ஆனால் தன்னுடைய வியாபார வாடிக்கையாளர்களை கடவுள்தான் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கிவிட்டு தன்னுடைய வியாபார உத்தியை கவனமாக வைத்துக் கொள்கிறார். 

rs=w:1440,h:1440

இதே போல தான் தன்னுடைய குழந்தைகளுக்கு டியூஷன் கல்வியை விட சிறந்த சர்வதேச கல்வியை தனிப்பட்ட முறையில் கொடுக்கிறார்கள்.. ஆனால் ஏழைகள் அனைவரும் பின் தொடரக் கூடிய டுட்டோரியல், டுயூஷன், ஸ்பெஷல் கிளாஸ் போன்றவற்றை தன்னுடைய குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

MSK Theory

தொழிலாளி தன் குழந்தைகளை டியூசன் ஸ்பெசல் கிளாஸ், placement ட்ரைனிங் போன்றவைகளை வைத்து தொழிலாளியாக உருவாக்குகிறான்! ஆனால் முதலாளி தன் குழந்தைகளை தகுந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மூலம் முதலாளியாக உருவாக்குகின்றான்.

இதுபோன்ற பல செய்திகளையும் நிகழ்வுகளையும் நடத்தைகளின் பார்த்துவிட்டு தான் இவர்களுடைய… அதாவது ஏழை, பணக்காரர் இவர்களுடைய உளவியல் நம்பிக்கை செயல்பாடுகளை நாங்கள் உணர்ந்து கொண்டு, ஏழை எப்படி பணக்காரனாக மாறலாம் என்ற விழிப்புணர்வை எங்களுடைய எம்எஸ்கே பவுண்டேஷன் மூலமாக வெளிப்படுத்தி வருகிறோம். 

பணக்காரன் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று ஏழைகள் கேட்கும்பொழுது அதற்கு அவன் சொல்கின்ற பதில் இதற்கெல்லாம் காரணம் இறைவன் அவன்தான் கொடுத்தான், எனக்கு எந்தத் திறமையும் இல்லை என்று தன்னுடைய திறமையை செயலாற்றலை கணக்கீடும் நுட்பத்தை மறைத்து இவ்வாறு மக்களுக்கு உரையாற்றி விடுகிறான்.

இதைப் பார்த்து இதிலிருந்து பிறவி எடுத்து.. ஏழையும் இவ்வாறு பேசுகிறான் ஏன் உன்னால் பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை எனக்கேட்டால் அதற்கு பணக்காரன் கூறிய பதிலை பதிலாக சொல்லிவிடுகிறான். எப்படியெனில் எனக்கு கடவுள் கொடுக்கவில்லை என்று கடவுளை கைகாட்டி தன் கையை கட்டிக் கொள்கிறான். உண்மையில் ஏழை தன்னுடைய திறமையை செயலாற்றலை திட்டமிடுதலை கணித்து பணியாற்றுவதை வளர்ச்சிக்கு தேவையான உளவியல் தொழில்நுட்ப ஆலோசனை பெறுவதை தவிர்த்து விடுகிறான்.

அல்லது யாரேனும் சொன்னாலும் அதை செய்வதற்கு சோம்பேறித்தனப்பட்டு எல்லாம் கடவுள் தான் கொடுக்கிறார் என்று தானும் நம்பி தன் குடும்பத்தையும் நம்ப வைத்து ஏழ்மை நிலைக்கு தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்.. உண்மையில் பணம் பெறுவதற்கு சமூக அறிவு உளவியல் அறிவு தொழில் அறிவு தொழில்நுட்ப துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை கணக்கீடும் தன்மை தணிக்கும் தன்மை நிற்கும் தன்மை பொருள்களை தரமாக வாங்கும் தங்கள் அவர்களை மேம்படுத்தும் தன்மை இவற்றின் மூலமாக தான் பணக்காரன் பணத்தை ஆளும் பண அதிபராக தன்னை உருவாக்கிக் கொள்கிறான்.

பிறர் கேட்கும் பொழுது தொழில்நுட்பத்தை மறைத்து இது கடவுள் கொடுத்தது என பிறரை நம்ப வைத்து தனக்கு போட்டியாக இல்லாத சமூகத்தை உருவாக்குகிறான்.. பணக்காரன் இந்த உலகத்தில் வெற்றியடைய இந்த உலகத்தில் உள்ள துறை நிபுணர்களின் ஆலோசனையை கட்டணம் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்.. ஏழை இந்த உலகத்தில் உள்ள பொருள்களை அடைவதற்கும் வெற்றியடைவதற்கு வானத்திலுள்ள கடவுளை வேலைக்கு அழைக்கிறான்.. இறுதி வெற்றி பணக்காரனுக்கு… 

rs=w:1440,h:1440

இறுதிவரை வெற்றியே கிடைக்காதது ஏழைக்குத்தான்.. உழைத்தால் வெற்றி, விதைத்தால் வெற்றி என்பதைப் புரிந்து கொண்டவன் பணக்காரன்… வேண்டினால் வெற்றி, விரதம் இருந்தால் வெற்றி என்று இயற்கைக்கு மாறாக தான் இருப்பதற்காக இறைவனை வேலைக்காரனாக மாற்றி, தன்னை தோல்வியடைய வைத்துக் கொள்கிறான் ஏழை…

இந்த பிரபஞ்சம் மனித உழைப்பு என்ற சங்கிலித்தொடர் பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. யார் சமூக முன்னேற்றம் வளர்ச்சி இவற்றுக்காக உழைக்கிறார்களோ அவர்களுக்கு பிரபஞ்சம் அனைத்தையும் கொடுக்கும். உழைக்காமல் வேண்டுபவர்களுக்கு உலகத்திலுள்ள பொருட்கள் கிடைக்கிறது என்றால் உழைப்பவர்களின் உழைப்புக்கு என்ன பிரபஞ்சம் கொடுக்கப் போகிறது?  உழைப்பில் தான் வெற்றி உள்ளது. தொழில் திறன் இல்லாமல் கற்பனை அளவில் வியாபாரத்தை கணக்கிட்டு பணத்தை பிறரிடம் வாங்கி அதை முதலீடு செய்தால் பணம் அதிகம் கிடைக்கும் என்ற கற்பனை கணக்கீட்டில் செயல்படுபவர்கள் தான் கடன்காரனாக கடனாளியாக உருவெடுக்கின்றனர். 

அந்தக் கடனை அடைப்பதற்கு இன்னொரு இடத்தில் கடன் வாங்கி கடன் வாங்கி கடைசியில் உலகம் மோசம் கடவுள் மோசம் மனிதர் மோசம் ராசி இல்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டு புகார்களை வைத்துக்கொண்டு தன்னை நல்லவனாக திறமை உள்ளவனாக வெளிப்படுத்துகின்ற உளவியல் நோய் நீண்டகாலமாக பரவி இப்பொழுது அது புற்று நோய் போல மக்களிடத்தில் குடி புகுந்து வந்துள்ளது.. கடன் இல்லா வியாபாரம்.. கடமைகளில்தான் வியாபாரம்.. வியாபாரம் சார்ந்த உளவியலை பெற்றுக் கொள்ளவும்.

rs=w:1440,h:1440

ஏழைகளுடைய செயல்பாடு.. தொழிலாளிகளுடைய செயல்பாடு… இவை இரண்டும் பணத்தை நோக்கியதாக மட்டுமே உள்ளது.. இவர்கள் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்ப – வியாபார நுட்ப- ஆலோசனை எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை…. மேலும் தனக்கு தெரிந்த அறிவின் அளவை மட்டுமே உறுதியாக இருக்கும் என இவர்கள் நம்புகின்றனர்.. பணத்தை கடன் வாங்க விரும்புகின்றனர்.. ஆனால் அறிவை கடன் வாங்க விரும்புவதில்லை.. இதனுடைய விளைவு இவர்கள் தொழிலாளி என்ற கட்டுக்குள் மட்டுமே வாழ்கின்றனர். இவர்களுடைய வாழ்க்கை ‘ஏழை’ என்ற முத்திரையில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

வேலை, ஏழை… ஏழை, வேலை… தொழில் அறிவை நிகழ்காலத்துக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளாமல் தன்னுடைய சிறுவயது அறிவை பயன்படுத்தி தோல்வி அடைந்தவர்கள் தான் ஏழை மனநிலையில் வாழ்கின்றனர்.. ஏழை, தொழிலாளி இவர்கள் தொழில்நுட்ப உளவியல் திறன் மேம்பாட்டு ஆலோசனையை எடுத்துக் கொள்வதை மிகவும் சிரமமாக கருதிக் கொள்கின்றனர்.  இதனுடைய விளைவு வாழ்க்கைத் தரத்தில், தொழில் தரத்தில் வியாபாரத்தில், தொடர் தோல்வியை தொடர்ந்து அடைகின்றனர்.. பணக்காரன் தன்னுடைய அறிவை முதன்மைப்படுத்தி தன் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதில் முதன்மை தன்மையோடு செயல்படுகின்றனர்… ஆகவே அறிவை ஈடுசெய்ய அறிவிப்பு புதுப்பித்துக்கொள்ள உளவியல் திறன் மேம்பாட்டு அறிவு ஆலோசனை செயல் ஆலோசனை மிக மிக அவசியம்.

rs=w:1440,h:1440

இதை புரிந்தவர்கள் பெருநிறுவன உளவியல் என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் சைக்கலாஜிக்கல் நடைமுறையை நிபுணர்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றனர். ஏழைகளின் எதிர்பார்ப்பு.. தன்னுடைய பிரச்சனையை தீர்க்க எங்கிருந்தோ ஒருவர் வரவேண்டும்.. அந்த பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர் ஓடி மறைந்து விட வேண்டும்.. பின்பு அவர் இவருடைய கண்களில் பட்டாலும் அதற்குண்டான மரியாதையை செலுத்த விரும்புவதில்லை.. ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக அந்தப் பிரச்சனையை தீர்க்க கூடிய வரை சந்தித்து பிரச்சினையை தீர்த்துக் கொள்கின்றனர். 

பின்பு அதாவது பிரச்சனை தீர்ந்த பின் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பவர் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப இருந்து விடுகின்றனர்.. பிரச்சனைக்காக மட்டுமே அணுகக் கூடிய உளவியல் கோளாறு உள்ள இவர்களின் மனநிலை இவர்களுக்கே புரியாது. ஏழை மனநிலையில் பணத்தை நோக்கிய ஓட்டம்… பணக்கார மனநிலையில்..

பணம் பணக்காரரை நோக்கி ஓடி வந்தடைகிறது.. பணக்கார மனநிலை ஏழை மனநிலை.. இவற்றுக்கான அடிப்படை….. உளவியல் கூறு நடத்தை மற்றும் செயல்பாடு.. பணம் என்பது ஆற்றல் இந்த ஆற்றலை வாடகைக்கு விட முடியாது. ஆனால் வடிவ மாற்றம் செய்ய முடியும். ஒரு ஆற்றலை மாற்று ஆற்றலாக உருவாக்கும் உளவியல் உடலியல் சமூகவியல் செயல்பாடுதான். பணம் வந்து அடைவதற்கான வழிமுறை.

MSK Theory

வேலை என்பது சமூகத்திற்கான தனி மனிதனுடைய பங்கீடு.. வேலையை சிரமமாக பார்க்கக்கூடியவர்கள் தனது சமூக பங்கீட்டில் இருந்து ஒதுக்குகின்றனர்.. இதன் விளைவு இவர்களுக்காக மற்றவர்கள் பங்கீடு செய்வது இயற்கையாவே துண்டிக்கப்படும்.

வேலை என்பது பணத்துக்கான செயல் என்பதை விட சமூகத்துக்கான பங்கீடு என்ற எண்ணத்தில் செயல்படும்போது பணம் தானாக சேர்ந்துவிடும். கூலிக்காரர்கள் வேலைக்காரர்கள் இவற்றை சிந்திப்பதை தவிர்க்கின்றனர்.. சிந்திக்கத் தெரிவதில்லை..

ஆனால் சிந்திப்பதை …. விட சொன்ன வேலையை .. வேலையாக மட்டுமே பார்க்கின்றனர்.. வேலையை முடித்து விட வேண்டும்… என்பதில் மட்டும் குறியாக உள்ளனர்.. இவர்களுக்கு உடல் வேலை செய்யும் அளவு மனம் அதை பற்றி சிந்தித்து சிறப்பாக செயல்படும் ஆற்றல் குறை உடையவர்களாகவே உள்ளனர்.. 

இவளுடைய குறையை யாரேனும் எடுத்துக் கூறினால் அதை ஏற்றுக் கொள்வதை விட அதற்கான புதிய காரணங்களை சொல்லி தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதில் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்தக் கூலி சார்ந்த வேலை மனப்பான்மையானது, பாரம்பரியங்களை வேலைக்கார அடிமைகளாகவே மாற்றிவிடும்.. கொடுக்கப்பட்ட வேலையை சிந்தித்து வேலை கொடுக்கப்பட்டவருக்கு சாதகமாக செயல்படும் நுண்ணறி உள்ளவர்களே பிற்காலத்தில் தொழில் நிறுவனங்களையும் வியாபார நிறுவனங்களையும் உருவாக்கும் நுண்ணறிவு பெற்றவர்களாக உருமாற்றம் அடைகின்றனர்.

மக்களுக்கு எனது பங்கீடு என்ன என்பதை உணர்ந்து செயல்பட கூடியவர்கள் அவர்களுடைய டிஎன்ஏ அளவிலேயே தொழிலதிபர்களாக உரு மாற்றம் செய்யப் படுகின்றனர்… இந்த மக்களிடமிருந்து நான் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து தனது நலத்தை உட்படுத்தி முற்படுத்தி செயல்படு கிறவர்கள் அவருடைய டி என் ஏ அளவிலேயே தொழிலாளியாக உருமாற்றம் செய்யப்படுகின்றனர்.. தொழிலாளி தனக்கு வேண்டியதை சிந்திக்கிறான்… முதலாளி மக்களுக்கு வேண்டியதை சிந்தித்து அவர்களை தேவையை நிவர்த்தி செய்வதற்காக தொழிலை உருவாக்கி அதை விரிவாக்கி தான் ஒரு தொழிலதிபராக உருவாக்கிக் கொள்கிறான்.

MSK Theory

ஏழைகளுக்கு எலும்புத்துண்டு வாழ்க்கை, பணக்காரனுக்கு கறி விருந்து வாழ்க்கை! முன்னது எதிர்பார்த்திருப்பது, பின்னது எதிர்பார்ப்பதை திட்டமிட்டு செயல்படுத்துவது. இது தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் பொதுவான நியதி.

ஏழை உழைத்து பணக்காரனாக ஆவதும், பணக்காரனின் குழந்தைகள் உழைக்காமல் ஏழையாவதும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது! இது ஒருவகை உளவியல் சுழற்சி. நீங்கள் எவ்வாறு வாழப்போகிறீர்கள் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள்.

வரும் மனப் பிரச்சனை, வருமானப் பிரச்சனை இரண்டையும் வெற்றி கொள்ள உறுதி எடுங்கள்..

கடனை ஊற்றி இலாபத்தை இறைக்க முடியுமா?

கடன் வாங்கி கல்லூரியில் சேர்த்தல், கடன் வாங்கி கல்யாணம், கடன் வாங்கி பிசினெஸ், கடன் வாங்கி மருத்துவச் செலவு…. போதும் இந்த கடன் வாழ்க்கை! கடன் வாழ்க்கையினை மாற்றி சேமிப்பு வாழ்க்கையாக மாற்ற வேண்டாமா?

உண்மையில் பணத்தை வாடகைக்கு விட முடியாது! ஏனெனில் பணம் என்பது ஆற்றல்! இந்த ஆற்றலை வாடகைக்கு விட முடியாது, ஆனால் வடிவ மாற்றம் செய்ய முடியும். ஒரு ஆற்றலை மாற்று ஆற்றலாக உருவாக்கும் உளவியல் – உடலியல், உளவியல் – சமூகவியல் செயல்பாடுதான் பணம் வந்து அடைவதற்கான வழிமுறை.

கடன் வாங்குவதற்கு நம்மை வழிகாட்டுவதற்காக பல நிறுவனங்கள் வந்துவிட்டன! இதற்காக போட்டி போட்டுக்கொண்டு அறிவுரைகளையும் வழங்குகின்றன. இன்று இலவசமாக கிடைப்பது அறிவுரைகள் தான்… இந்த அறிவுரையானது பல நேரங்களில் யோசனையாக மாறுகிறது. இந்த யோசனையிலேயே பலர் வாழ்ந்து சோர்ந்து விடுகின்றனர்.

MSK Theory

அறிவுரைகள் இலவசம்… செயலுக்குத்தான் கட்டணம்!

நீங்கள் கடன் வாங்கும் வங்கி அல்லது கடன் வழங்கும் கம்பெனிகளில், உங்களுக்குக் கடன் கொடுப்பதற்காக எத்தனை விதமான ஆவணங்கள், எத்தனை நிலைகளில் சரிபார்க்கப் படுகிறது என்பதை கவனித்திருக்கிறீர்களா? கடன் கொடுக்கும் போதும், கடன் வசூலிக்கும் போதும் எத்தனை விதமான நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? இந்த செயல்பாடுகளுக்குப் பின்னால் எத்தனை வகையான  professional consulting people இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

டவுன்லோடு செய்யுங்கள், தொகையினை தேர்ந்தெடுங்கள், டிரான்ஸ்பர் செய்யுங்கள்… லோன் பணத்தை பெறுவது இவ்வளவு சுலபமாக இதுவரை இருந்ததில்லை! இப்போது மட்டும் யாருடைய உழைப்பில் இது சாத்தியமானது?

rs=w:1440,h:1440

பல பேர் யோசனை கேட்டு கேட்டு, இது எனக்குத் தெரியும் என்ற எண்ணத்துடன் வாழ்கின்றனர். இந்த பதிவின் நோக்கம் அட்வைஸ், அறிவுரை, யோசனை சொல்வதில்லை. மாறாக வாழ்க்கையில் மனம் எப்படி செயல் புரிகிறது என்பதை எடுத்துக்காட்டுவது தான்.

உடல் உறுப்பு தவறி செயல்பட்டாலோ அல்லது செயல் நிறுத்தம் ஏற்பட்டாலோ, உடனே நோய் தொற்றி உங்களுக்கு அதை வெளிப்படுத்தி விடும். ஆனால் தவறான மனச்செயல்பாட்டின் வீரியம் படு தோல்வியடையும் போது தான் வெளியே தெரியும்.

பலர் அப்பொழுதும் கூட இது தனது மனதின் செயல்பாட்டில் தான் ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ளாமல், இது மற்றவர்களின் செயல்பாட்டினால் தான் ஏற்பட்டது என பிறர் மீது பழி போட்டு, காலத்தை கடத்தி வாழப் பழகி விடுகிறார்கள்.

நண்பர்களே,

நீங்கள் உங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இப்பதிவினை படித்துப் பார்த்து, வாழ்வினில் மேம்பட்டிருக்கத் தேவைப்படின் சரியான நேரத்தில் செயல்பாட்டு ஆலோசனை பெற்று வாழ்க்கையின் போக்கை மாற்றி ஏற்றம் காணுங்கள். எங்களுக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

எங்கள் கிளினிக்குக்கு ஒருவர் மிகுந்த சோகம், வாடிய முகத்தோடு வந்தார். அவரை விசாரித்த போது அவரின் மனைவி, “சார் ஒரு நிமிடம் என் கணவரை வெளியே செல்லச் சொல்லுங்கள். பின்பு நான் கூறுகிறேன்” என்று கூறினார்.

கணவர் சென்றவுடன் அவர், “எனது கணவர் மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. வீட்டிலேயே இருக்கிறார். இப்பொழுது தான் ஒருவரிடம் கட்டிட சூப்பர்வைசர் வேலைக்கு செல்கிறார்” என்று கூறினார். “என்ன காரணம்?” எனக் கேட்டேன். அதற்கு அவர், “நாங்கள் மிகவும் ஏழைகள்; கடினமாக உழைத்தோம்.

சிறிது முன்னேறி ஒரு வழியாக ஜவுளி கடை வைத்தோம். அப்போது நண்பர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் சேர்ந்து 3 கோடி கடன் வாங்கி மிக பெரிய நிலைக்கு வந்தோம். அந்த நபர்  6 கோடி கடன் வாங்கி எங்கள் தலையில் கட்டி விட்டு நீங்கள் தான் இதற்குக் காரணம் எனக் கூறி விட்டு, இப்போது அவர் நன்றாக உள்ளார். நாங்கள் அவமானப்பட்டு வாழ்கிறோம்” என கூறினார்.

rs=w:1440,h:1440

பின்பு கணவரிடம் கேட்ட போது, அவரும் மேற்கூறிய நிகழ்வை ஒப்புக் கொண்டார். “நான் பணம் வரும் போது அது எனது திறமை என்று நினைத்தேன்… ஆனால், எனக்கு விஞ்ஞான பூர்வமான நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. ‘எனக்கும் எல்லாம் தெரியும்’ என்ற மன நிலையில் வாழ்ந்ததே இதற்குக் காரணம்” எனக் கூறினார்.

பின்பு அவருக்கு தொடர் மன மாற்று ஆலோசனை பயிற்சி கொடுத்து அனுப்பினேன். இப்போது கடனை அடைக்கும் முயற்சியில் நன்றாக உழைக்கிறார். அவரின் பழைய மன பாதிப்பு அகன்று தற்சமயம் குடும்பத்தோடு நல்ல நிலையில் உள்ளார்.

இதுபோல நாங்கள் சந்தித்த மக்கள் ஏராளம்! இதுவரை சுமார் 90,000 பேருக்கு தனிப்பட்ட உளவியல் ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். அதில் பலரது வியாபாரத்தில் அவர்கள் அபரிமிதமான வளர்ச்சியினை எட்டுவதற்கு உதவியுள்ளோம். எங்களிடம் வந்த நண்பர்கள் பலரது கதைகளையும் அவர்களது பிரச்சனைகளிலிருந்து அவர்களை உளவியல் ஆலோசனை மூலமாக மீட்டெடுத்த கதைகளும் பல ஆயிரம் உண்டு.

வாழ்க்கையில் எற்படும் பண மற்றும் மன ரீதியிலான பாதிப்புகளுக்கு ஏராளமான  காரணங்கள் இருக்கலாம். அவற்றை சரியான உளவியல் நிபுணரால் மட்டுமே கண்டறிந்து சரி செய்ய இயலும்! இதை அனைவருக்கும் புரிய வைப்பதற்காகவே எங்களது 30 ஆண்டுகால சேவையில் நாங்கள் சந்தித்த சில அனுபவங்களை தொகுத்து ‘சொல்வதும் சொல்லாததும்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

கிணறு வெட்டி தண்ணீர் எடுக்கவேண்டுமா? அல்லது கிணற்றில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் எடுக்க வேண்டுமா? பிசினஸ் என்பது பணம் சம்பாதிப்பதற்கா? அல்லது பணத்தை கடன் வாங்கி பிஸினெஸில் போட்டு கடனாளி ஆவதற்கா?

கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் தங்களின் பழைய அல்லது தங்களின் சொத்து என்ற உழைப்பின் மூலம் கிடைத்த பொருளின் மீது தான் கடனை பெறுகின்றனர். அவை அனைத்தும் வீணாகி, முடிவில் கடன் உழைப்பை எடுத்துக் கொள்கிறது! இதை முதலிலேயே புரிந்து கொண்டு, உழைப்பில் மாற்றம் செய்துகொண்டு உழைத்தால் பணம் பெருகும்.

வங்கி மூலமாக கணக்கு அறிக்கை தாக்கல் செய்து கடன் பெறலாம். ஆனால் உழைப்பை எப்படி கடன் பணத்தோடு இணைத்து வெற்றி பெறுவது என்பதை தெரிந்திருக்க வேண்டாமா?

கடன் வாங்கி வீடு, கடன் வாங்கி கல்யாணம், கடன் வாங்கி பிசினெஸ்… இப்படி கடன் வாங்கியே அனைத்தையும் செய்வதால் உங்கள் வாழ்க்கை உயரும் என்று ஆலோசனை சொல்வதன் மூலம் கடன் வழங்கும் கம்பெனிகளே வளரும். கடன் பெற்றவர்கள் கடனாளி பட்டியலிலேயே இடம் பெறுவார்கள்!

சுய உழைப்பில் பணம் உருவாக்கத் தெரியாதவர்கள், அடுத்தவர் பணத்தை கடனாகப் பெற்று சம்பாதிக்க மாட்டார்கள் என்பது கடன் கொடுக்கும் கம்பெனிகளுக்கு நன்றாகவே தெரியும்!

ஆக அடிமைத்தன்மையை விலை கொடுத்து வாங்கி, தன்னை ஒரு ‘அடிமை’ என சொல்வதில் பெருமைப்படும் யாரும் வியாபாரம், உற்பத்தி வளர்ச்சி, தொழில்துறை இவற்றில் நுழைய மாட்டார்கள்!

MSK Theory

கடன் வழங்கும் கம்பெனிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் கடன் உங்களை தேடுகிறது என்று அர்த்தம். கடன் வாங்கி Boss ஆக முடியாது, Loss தான் ஆக முடியும்!

அப்படியென்றால் கடன் வாங்கவே கூடாதா? அவசர கால பணத்தேவைக்கு என்ன செய்வது? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் பணம் என்பது மனதிலிருந்து உடல் மூலமாக உழைப்பாக வெளிப்படுவது. ஆனால் கடன் என்பது அடுத்தவர் உழைப்பினை பணம் மூலமாக பெற்று, அதனை தனது பணமாகவோ அல்லது உழைப்பாகவோ மாற்ற முயற்சி செய்வது! பணம் முறையாக இரு சாராருக்கும் வெற்றி அளிக்கக்கூடிய உழைப்பினால் இலவசமாகக் கிடைக்கும் உப பொருளாகும்! பணத்தை வாடகைக்கு எடுத்தால் அது வட்டி… பணத்தை மற்றவரிடத்தில் இருந்து பெற்றால் அது கடன்!

கடன் வாங்குவது என்பது எதிர்பாராத விபத்தில் சிக்கியவர் உயிர் வாழ கொடுக்கும் இரத்தம் போலத்தான் இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவருக்கு சர்க்கரை பொங்கல் கொடுப்பது போல இருக்கக்கூடாது! கடன் என்பது மீன் பிடிக்கத் தேவையான இரையின் அளவு தான் இருக்க வேண்டும். மீனின் அளவுக்கு இரையை போட்டால், பின்னர் மீனிடமிருந்தே மீன் பிடிப்பவனை மீட்க வேண்டி வரும்!

நமக்கு பிசினஸ் எப்படிச் செய்வது என்பதை தெரிந்து கொள்ளும் interest இல்லாததால் தான் பேங்குக்கு interest கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பிசினஸ்ஸுல் சரியான interest இருந்தால் நாம் பணத்தை பேங்கில் போட்டு அவர்களிடமிருந்து interestஐ வாங்க முடியும்!”

 கடனை அதிகரிப்பதற்கு கடன் வாங்கி பிசினெஸ்சில் போடலாம் என்ற மனப்பான்மை ஒன்றே போதும். மனம் கடனை ஈர்க்க ஆரம்பித்து விடும். பின்னர் உழைத்து உழைத்து கடன் அடைக்கத்தான் முடியும். சேமிக்க முடியாது. காரணம் கடனை ஈர்க்கும் எண்ணங்களே!

rs=w:1440,h:1440

பணம் என்பது உழைப்பின் உருமாற்றம். பணத்தை பெருமைக்காக செலவு செய்வதும் உழைப்பை வீண்  செய்வதும் ஒன்று தான். கடமை அளவு குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் செலவு செய்தால் பணம் சேமிப்பாக மாறும். பெருமை அளவிற்கு குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் சமூகத்திற்கும் நாம் செலவு செய்தால் கடமை என்பது கடன் சுமையை அதிகரித்துவிடும். பணம் சேமிப்பில் செல்வதும் கடனில் செல்வதும் இப்படித்தான்!

பணம் சிரமப்படாமல் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் சிந்திக்க… இதைப்போலவே மற்றவர்களும் நம்மிடம் எதிர்பார்த்தால் நம் நிலைமை என்ன? நாம் எவ்வாறு நினைக்கிறோமோ அதேபோலத் தானே மற்றவர்களும் நினைப்பார்கள்? நமது குழந்தைகளும் இதேப்போல படிக்காமல் மதிப்பெண் பெற விரும்பினால் என்ன ஆவது?

கடனில் பாதிக்கப்பட்டவன் மீண்டும் கடன் வழங்கும் கம்பெனிகளையே நாடுவது குடிகாரன் குடியை மறக்க குடிப்பது போன்றதாகும்!

rs=w:1440,h:1440

கடனில் பிசினெஸ், கடனில்லா பிசினெஸ் – எது வேண்டும் என சிந்தியுங்கள்.

கடமைகளில் பிசினெஸ்… கடனில்லா பிசினெஸ்…

பணம் எப்படி செயல்படுகிறது?

முக்கியத்துவம் எதற்கு கொடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்ய தரமான பகுத்தறிவு பெற்றவர்களால் மட்டுமே முடியும். வியாபாரம் என்பது பணம் சம்பாதிப்பதற்கு வழி என்று நினைப்பவர்கள், செயல்படுபவர்கள் ஏழையாகி விடுகின்றனர். வியாபாரம் என்பது பிறருடைய தேவையை பூர்த்தி செய்வது என்பதை புரிந்து செய்வது என்பதை புரிந்து செயல்படுபவர்கள் பணக்காரனாக மாறி விடுகிறார்கள்.

பணம் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள் மற்றவர்களது பணத்தை ஏமாற்றுவதற்கான கருவிகளை உருவாக்கி, அதன் மூலம் அவர்களின் பணத்தை சேமிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்றே பொருள்.

பணம் பற்றிய அறிவு பழக்கம் சார்ந்து இருக்கிறது, ஆனால் பணம் சம்பாதிக்க அறிவியல் முறைப்படி உள்ள அறிவு தான் உயர்வையும் வெற்றியையும் கொடுக்கும்!

rs=w:1440,h:1440

பணம் பற்றிய நமது கருத்துக்களை திருத்தியமைத்தால் மட்டுமே நேர்மையான முறையில் மன நிறைவோடு தொழில்துறையில் உற்பத்தி மற்றும் வளர்ச்சி இவற்றில் வெற்றி பெற முடியும்.

பணத்தை நேரடியாகத் தேடும் அவசரமானது, உடல் இச்சையினை தணிப்பதற்கான இடத்தினை நேரடியாகத் தேடுவதைப் போன்றதே. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வியாபார நுட்பம் மூலம் பணத்தை தேடுவதே திருமணம் என்ற சமூக பாதுகாப்பு முறையில் வாழ்வதைப் போன்றது. முன்னது முறையற்றது. ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும். பின்னது முறையானது. வாழ்நாள் முழுவதும் பலன் தரும்!

rs=w:1440,h:1440

தூக்கம் வராத போது தூக்கம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது மட்டுமே தூக்கத்தின் வலிமையை அவசியத்தை ஆற்றலை புரிந்து கொள்ள முடியும்… தூக்கம் என்பது சாதாரண செயலாக தெரியும்… தூக்கம் இல்லாத போது தூங்க முடியாத போது மட்டுமே உணர முடியும் தூங்குகின்ற மனிதன் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என்று. அதேபோல பணம் இல்லாத பொழுது அதைப் பெற எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது? இதை பணம் இல்லாத போது மட்டுமே உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்.

MSK Theory

பணம் என்பது உழைப்பின் உருமாற்றம். பணத்தை பெருமைக்காக செய்வதும் உழைப்பை வீண்  செய்வதும் ஒன்று தான்.

பெரும்பாலான மக்கள் சிந்தனையை மிகவும் கஞ்சத்தனமாக… வரைமுறையற்ற… தொடர் நினைவுச் சிந்தனையாக வைத்துள்ளனர்! ஆனால் செலவுகளைப் பொறுத்தவரை, பெருமைக்காக… மற்றவர்களின் பாராட்டைப் பெற… தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்ள… அளவு கடந்து… அளவில்லாமல் செலவு செய்து …வாழ்க்கையை சிக்கனமாக மாற்றிக் கொள்கின்றனர்!

இப்படிப்பட்டவர்களுக்கு, உயர்ந்த சிந்தனை… உருப்படியான சிந்தனை… செயல்வடிவம் பெற சிந்தனை… சிறப்பு பெற சிந்தனை போன்றவைகள் உளவியல் ரீதியில் நடைபெற்றுள்ளன. ஆனால் சிந்தனை என்றால் என்ன என்பதற்கு சொந்த கருத்தை சுகமாக வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.. சிந்தனை வேறு.. செயல் வேறு.. செயலை முறைப்படுத்த வேண்டும்! சிந்தனையினை வரையறைக்குள் முறைப்படுத்தி சாதிக்க முயற்சிக்க வேண்டும்!! 

 பணம் பெருக்கும் விதிகள்

 பணம் பெருக்கும் விதிகள் (யுக்திகள்) இரு வகைப்படும். முட்டாளை முட்டாளாக மேலாண்மை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும், அதேபோல அறிவாளியை அறிவாளியாக மேலாண்மை செய்தால் பணம் சம்பாதிக்க முடியும். விதிக்கு மாறாக முட்டாளை அறிவாளியாக மாற்ற நினைக்கும் பொழுது அல்லது முயற்சிக்கும் பொழுது அவர்கள் நம்மீது கோபப்பட்டு நிராகரித்து விடுவார்கள்.

இதனால் பண இழப்பு ஏற்படும். முட்டாள், முட்டாள் தனமாக சொல்லும் கருத்து, செயல் இவற்றை நாம் மாற்ற முயற்சிக்கும் பொழுது, அதாவது அவருடைய முட்டாள்தனத்தை அறிவாளி தனமாக மாற்ற முயற்சிக்கும் பொழுது, அவர் கோபப்பட்டு நிராகரித்துவிடுவார்! இதனால் பண பரிமாற்றம் தடைபெறும்…. அறிவாளியை முட்டாளாக மாற்ற முயற்சிக்கும் பொழுது அவர்களும் கடுமையாக கோபப்பட்டு நிராகரித்து விடுவார்கள்.

இதனால் பணப்பரிமாற்றம் தடைபடும்.. ஆனால் அறிவாளியை அறிவாளியாக மாற்ற நினைத்தால் அவர் மகிழ்ச்சி பெற்று பணத்தை வெகுமதியாக அன்பளிப்பாக கொடுப்பார்.. எனவே முட்டாளை முட்டாள் தனத்தை கொண்டு கையாளவேண்டும். 

rs=w:1440,h:1440

அறிவாளியை அறிவாளிதனத்துடன் மேலாண்மை செய்ய வேண்டும்! அப்போதுதான் பணம் பெருகும்… பணம் கிடைக்கும்… பணத்தின் மூலம் ஆற்றல் பரிமாற்றம் ஆகும்.. ஆனால் சிலர் மேற்கூறிய உலக உளவியல் நடைமுறையை மாற்றும் பொழுது அவைகள் தொடர்ந்து பணத் தோல்வியை உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன! சுருக்கமாகச் சொன்னால் அப்படி இருப்பதை அப்படியே வை..

மாற்ற முயற்சித்தால் மோசமான விளைவுகளைத்தான் பெற முடியும்.. எம் எஸ் கே உலகில் உளவியல் கோட்பாட்டின் படி, இயற்கையை மாற்றக்கூடாது… மாற்ற முடியாது.. அதேபோல சில மன சமூக அமைப்புகளை மாற்ற முடியாது.. மாற்றினால் அல்லது மாற்ற முயற்சித்தால், முயற்சித்தவர் பாதிக்கப்படுவார்.. அவரவர்களின் எண்ணத்தை, நம்பிக்கையை ஊக்குவிப்பதன் மூலமாக நாம் மகிழ்ச்சியாக நம் செயலை மற்றவர்களுக்குச் செய்ய முடியும்.. 

பண நம்பிக்கை, உழைப்பு நம்பிக்கை, செயல் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையை நம்பும் அவர்களின் தன்னம்பிக்கை அத்துடன் வாழ்க்கையை பற்றிய கருத்து உலகத்தைப் பற்றிய பார்வை இவற்றை மாற்ற ஆசைப்படுவது முயற்சிப்பது சரியான முறை அல்ல… அப்படியானால் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அறிவாளியாக உள்ள ஒருவரை முட்டாளாக மாற்ற… மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால் என்ன செய்வது.. இதற்கான பதிலை.. யுக்திகளை மேலும் மனித மேலாண்மை திறன் கற்று கொள்ள எம் எஸ் கே கோட்பாட்டை பயன்படுத்தவும்!

rs=w:1440,h:1440
பணம் இருப்பு விதிகள்
 1. பணத்தை விரும்ப வேண்டும் 
 2. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷமாக இருக்க வேண்டும் 
 3. இவ்வளவு தானா கிடைத்தது என்று சொல்லி பணத்தை ஏளனமாக பேசக்கூடாது. 
 4. பணம் வேண்டும் என்று பேராசை பட கூடாது. 
 5. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும் போது சந்தோஷமாக கொடுக்க வேண்டும் 
 6. பெருமைக்காக பணத்தை செலவு செய்தல் கூடாது 
 7. பிராத்தனையின் மூலம் பணம் கிடைக்காது. உழைத்தால் மட்டுமே பணம் கிடைக்கும் 
 8. பணத்தை சேமிக்க வேண்டும் 
 9. சிறு சிறு சேமிப்புகள் தான் பின்னாளில் அசையா சொத்தாக மாறும். 
 10. பணம் இருக்கும் போது தாராளமாக செலவு செய்தல் கூடாது. 
 11. பணத்தை சேமிக்கிறேன் என்ற பெயரில் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது.
 12. தன்னை தானே வருத்திக் கொண்டு பணத்தை சேமிக்க கூடாது. 
 13. பணத்தை நினைத்த இடத்தில் வைக்கக் கூடாது. அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். 
 14. பணம் வருவதற்கு முன்பே பல கணக்குகளை போட கூடாது.
 15. பொழுதுபோக்காக செலவு செய்யும் பணத்தை தேவை அறிந்து செலவு செய்ய வேண்டும். 
 16. பணத்தை கொடுத்தால் பணம் வரும் என்று சொல்லி விரயம் செய்ய கூடாது.
 17. நிறைய பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டு தன்னை தானே வருத்திக் கொள்ளுதல் கூடாது. 
 18. பணம் உங்களை கோபுரத்திற்கும் அழைத்து செல்லும்….. அதே நேரம் அதே கோபுரத்திற்கு வெளியேயும் நிற்க வைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்! 
 19. முறையாக வந்த பணம் செலவுகள் போக மீதம் ஆகும். 
 20. கிடைக்க வேண்டிய பணத்தை கட்டாயப் படுத்தி, கஷ்டப்படுத்தி வாங்க வேண்டாம்.
rs=w:1440,h:1440
பணம் சேகரிப்பு விதி

உங்களிடத்தில் பணம் சேமிப்பாக… மீதமாக சேர வேண்டுமா? அப்படியானால் நீங்கள் எம் எஸ் கே பணம் சேகரிப்பு விதியை கடைபிடியுங்கள். 

விதி எண்-1: உங்களுடைய சேமிப்பில், உங்கள் உழைப்பின் உதவியால் செலவுகள் போக சேமித்த தொகை பத்தாயிரம் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி இல்லையெனில் இன்றிலிருந்து சேமிப்பை துவக்குங்கள்!

விதி எண் –2: சேமிப்பு 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர முயற்சி செய்யுங்கள். 

விதி எண் –3: ஐம்பதாயிரத்தை ஒரு லட்சமாக மாற்ற உழைக்க தூங்குங்கள்… உங்களுடைய உழைப்பு யாருடைய மனதையும் பாதிக்கக்கூடாது. யாருடைய பணத்தையும் பாதிக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தாராளமாக, மகிழ்ச்சியாக விரயம் இல்லாமல் செய்த பின் உள்ள மீதத் தொகையை மட்டுமே சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். 

விதி எண் –4: ஒரு லட்சம்… ஒன்றரை லட்சம்… 2 லட்சம்… இப்படி 10 லட்சம் வரை சேமியுங்கள்… இவற்றை விடுத்து விட்டு… கடன் வாங்கும் யுத்திகளை பெருக்கினாலும் இவற்றை நினைவில் கொள்ளுங்கள். கடன் ஆலோசகர்களை அணுகி அவர்களிடத்தில் பணம் பெறும்… கடன் பெறும் யுத்திகளை திறமையாக நினைத்தாலோ அல்லது ‘இந்த உலகத்தில் கடன் வாங்காமல் வாழ முடியாது’ என உங்களுடைய குடும்பத்தினர் உங்களுக்கு ஆலோசனை கொடுத்து அதன்படி செயல்பட்டாலோ பணம் உங்களிடத்தில் சேமிப்பாக மாறுவதற்கு பதிலாக கடனாக… கடன் கொடுக்க வேண்டிய தொகையாக மாறிவிடும்! அதாவது அற்ப சந்தோசம் அதிக பண இழப்பை உருவாக்கும். 

விதி எண் –5: உங்களுடைய பணம் சேமிப்பு கணக்கில் உள்ளதா அல்லது கடன் கட்டவேண்டிய கணக்கில் உள்ளதா என்பதை உணருங்கள்… 

விதி எண் –6: பணப்பற்றாக்குறை 10% மட்டும் இருந்தால் நீங்கள் கடன் இல்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உண்மை நிலை. 90% கடன் இருந்தால் நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு உடல் நலத்தை விற்றுக்கொண்டு மனநலத்தை இழந்து, சமூகப் பார்வையில் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

rs=w:1440,h:1440

இவற்றைச் சொல்லும் பொழுது உங்களுடைய மனதில் மிகப் பெரிய தொழிலதிபர்கள் கடன்பட்டு, கடன் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், நாம் ஏன் அவ்வாறு இருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றினால் உங்களுடைய டி என் ஏ கடன் பற்றிய எண்ணத்திலேயே செட்டாகிவிட்டது என்பதே உண்மை. கடன் உங்களை நெருங்கி விட்டது, கடன் உங்களுடைய சொத்தாக மாறிவிட்டது. இதை உணர்ந்து கொள்ளவே பத்தாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளியினை குறைக்கவே கடனில்லா வியாபாரம் கடனில்லா வாழ்க்கை மகிழ்ச்சியான தொழில் இவற்றை பெற பல தொழிலதிபர்களுக்கு நாங்கள் தொடர்ந்து உளவியல் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டு வருகிறோம். 

ஏழை ஆவதற்கு ஒரே காரணம் பணம் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ளாமல் அதீத செலவு செய்வது தான். ஏழை ஏழையாகவே இருப்பதற்கு காரணம் தான் ஏழையாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை தகுந்த நிபுணர்களிடம் ஆலோசனை எடுக்காமல் தனக்கு தோன்றிய வழியில் நடப்பதுதான்.

நெருப்பை நேரடியாக தேடக்கூடாது. நெருப்பை பெற தீப்பெட்டி அவசியம். தீப்பெட்டி இல்லாமல் நேரடியாக நெருப்பை சட்டைப்பைக்குள் அல்லது பேக்கில் வைக்க முடியாது. அப்படி வைத்தால் அது, தான் இருக்கும் இடத்தை அளித்து விடும். இதே போல தான் பணத்தை நேரடியாக தேடக் கூடாது, முயற்சிக்கவும் கூடாது. பணம் என்பது உழைப்பு என்ற கருவி வழியாகத்தான் பெறவேண்டும். பலர் பணத்தை நேரடியாக பெற முடிவு செய்து அந்தப் பணமே அவர்களை அழித்து விடுகிறது. பணத்தின் மூலப்பொருள் உழைப்பு உற்பத்தி தரம் சேவை தொடர் புதுமை மக்கள் தேவைக்காக புதிய படைப்பு சேவை போன்றவற்றை ஆர்வத்துடன் செய்து, தோல்வியை பற்றி கணக்கிடாமல் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். தடைகளை மயில் கல்லாக மாற்றிப் பார்க்க உலகியல் வழிகாட்டல் அவசியம்!

MSK Theory

பணம் எப்படி இயங்குகிறது என்பது அவரவரின் மனம் எப்படி இயங்குகிறது & இயக்குகிறது என்பதை பொறுத்தது தான். பணத்தை எப்படி பெறுவது என்பது வேறு, பணத்தை எப்படி சம்பாதிப்பது என்பது வேறு! பணத்தைப் பற்றி கவலைப்படுவதை விட, பணம் எப்படி சம்பாதிப்பது என்பதை தெரிந்து திட்டமிடுங்கள்!

செல்வம் என்பது பணமல்ல, நல்ல மனம். அன்பிற்கும் பணத்திற்கும் சுழற்றி விதி ஒன்று தான், கொடுத்தால் வளரும்! கொடுக்க மறுத்தால் வர மறுக்கும்!!

உங்களது பிசினஸ் யுக்தியில் கார்பரேட் ஆக மாறுங்கள்

ஒவ்வொரு பொருளுக்கும் இயங்கும் தன்மை உள்ளது… அந்த பொருளை இயக்குவதற்கும் தன்மை உள்ளது. தொழிலை நடத்தக்கூடிய தொழிலதிபர், அந்த இயக்கத்தை தெரிந்திருக்க வேண்டும்! வாகனத்தை இயக்கத் தெரியாவிட்டால் பெட்ரோல் இருந்தும் பயன் இல்லை! Driving போலவே Businessக்கும் ‘Business உளவியல்’ உள்ளது!

Business எனப்படுவது மக்கள், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் இந்த மூன்றின் கூட்டமைப்பே. ‘பிசினஸ் நுண்ணறிவு’ எனப்படுவது Data integrationல் துவங்கி, Informationஐ Collection செய்து அவற்றை Intelligent ஆக மாற்றி Decision Making வரை கொண்டு வரச் செய்யும் Process ஆகும்!

rs=w:1440,h:1440

இவற்றை பற்றி எதுவுமே தெரியாமல் நாம் பிசினெஸ் செய்து கொண்டிருந்தால் போட்டியில்லாத வரை அல்லது போட்டி மிகக்குறைவாக இருக்கும் வரையில் நம்மால் அந்த பிசினெஸ்இல் தாக்கு பிடிக்க முடியும். ஆனால், காலமும் சமூக சூழலும் மாறும் பொழுது நாமும் கர்போரெட் மனநிலைக்கு மாறாவிட்டால் நம் தொழிலை தக்க வைக்க முடியாது. 20 வருடங்களுக்கு மேலாக நம்மை வளர்த்த வாழவைத்த பெற்றோரைப் போன்ற நமது தொழிலில் தோல்வி ஏற்படுவதாகத் தெரிந்தால் இதைவிட நல்லதாக ஏதாவது கிடைக்குமா? என்ற எண்ணம் நமக்குத் தோன்றலாமா? கூடாது.

Business என்பதை வாங்குவதும் விற்பதுமான Repeated Actஆகவே மக்கள் செய்கிறார்கள்! ஆனால் அது தனக்கென ஒரு தனிப்பட்ட அமைப்பு மற்றும் அளவுடன் அதை execute பண்ணக்கூடிய planning system மற்றும் auditing system போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு Long Term Process! இது கார்பொரேட் கண்களுக்கு மட்டுமே தெரியும்!

MSK Theory

பணத்தை வைத்து Business பண்ணுவது இரண்டாம் கட்ட நிலை! உழைப்பை வைத்து பணம் பண்ணுவதும் அந்த உழைப்புக்கு தேவையான உபகரணங்களுக்கு முதலீடு செய்வதுமே முதல் நிலை!!

கடனில் இருந்து மீள உழைப்புதான் ஒரே வழி என்று தெரிந்தும், மீண்டும் கடன் வாங்க வழி கேட்டு ஆலோசனை பெற முயற்சி செய்பவர்களே அதிகம். ஆனால், உழைப்பை எப்படி உருவாக்குவது எனக்கேட்டு ஆலோசனை பெற முயல்பவர்களே பெருநிறுவன (கார்பொரேட்) பிசினெஸ்மேன் ஆக உயர்வு பெறுகின்றனர்!

‘கார்பொரேட்’ என்பது நிறுவனத்தின் செயல்முறை என்பது யாருக்கும் தெரிவதில்லை. பலரும் கார்பொரேட் என்றால் கொள்ளையடிக்கும் நிறுவனம் என தாங்களாகவே ஒரு அர்த்தம் வைத்துக்கொள்கிறார்கள்! கார்போரேட் என்றால் என்ன? அவர்கள் கண்டறிந்த தொடர் வெற்றிக்கான தொழில் இரகசியங்கள் என்னென்ன என்பவற்றை உங்களுக்கு விளக்குவதற்காகவே நாங்கள் “கார்போரேட் கண்களுக்கு மட்டுமே தெரிந்த தொடர் வெற்றிக்கான தொழில் இரகசியம்” என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

இந்தபுத்தகத்தில் கீழ்க்கண்ட விசயங்கள் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் விளக்கப் பட்டுள்ளன!

பணத்தை வைத்து தொழில் செய்வது என்பது தொழில் செய்வதன் இரண்டாம் கட்ட நிலை! அப்படியென்றால் முதல்நிலை……?

நீங்கள் ஒரு தொழில் செய்யத் துவங்கி விட்டால் என்னென்ன செயல்பாடுகளை செய்ய வேண்டும்?

‘கார்பொரேட்’ என்றால் என்ன? அவர்களின் வெற்றியின் இரகசியம் என்ன?

நமது வியாபாரத்திற்கு போட்டியாளர்களாக வருபவர்களை எவ்வாறு கையாளுவது?

வியாபாரம் தோல்விப் பாதையில் செல்வதாகத் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

நமது தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை யார் யாரிடம் கேட்கலாம்? யார் யாரிடம் கேட்கக் கூடாது?

பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை வதைக்கும் மாறுபட்ட மனநிலைகளை சமாளிப்பது எப்படி?

இன்னும் தொழில் செய்பவர்களுக்கு விடை தெரியாத பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன!

இது மட்டுமல்லாமல் ஐந்து வீடியோக்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில் பல அரிய தகவல்கள் உங்களுக்கு எளிதில் புரியும் படி விளக்கப்பட்டுள்ளது! இது மட்டுமல்லாமல் இந்த புத்தகத்தை படித்தபிறகு உங்களுக்கு இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் வந்தால் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் முகவரி இந்த புத்தகத்தின் இறுதிப்பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளது!

rs=w:1440,h:1440

உண்மையில் பல நபர்கள் சேர்த்து ஒரு நிறுவனத்தை நடத்தி அந்த நிறுவனத்தினுடைய உற்பத்தி பொருட்களை அந்த நிறுவனத்தின் மூலமாக அங்கு வேலை செய்பவர்களுக்கும் மக்களுக்கும் வினியோகம் செய்து அதன் மூலமாக மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு தன்னுடைய நிறுவனத்தையும் வளர்த்தக்கூடிய செயல்முறை தான் கார்போரேட் எனப்படுவது!

உதாரணமாக ஒவ்வொரு விவசாயியும் சமூகத்தை வளர்க்கும் கார்போரெட் தான்! ஒவ்வொரு தனிமனித ஆற்றலையும் ஒருங்கிணைத்து சமூகத்தைக் காப்பாற்றும் பிசினெஸ் இன்டெலிஜென்ஸ்ஐ முதன் முதலாக கண்டுபிடித்தவன் விவசாயி. அவன்தான் ஏழைக்கு வேலை கொடுத்து மற்றவர்களுக்கு உயிர் கொடுத்தவன்!

ஏழ்மையும், வேலையும் தன்னுடைய மனம் இயங்கும் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதை அறிந்து, உணர்ந்து செயல்படுகிறவன் கார்பொரேட் ஆக மாறி சமூகத்திற்கு உதவ முடியும்!

rs=w:1440,h:1440

ஆக, பல நபர்கள் சேர்த்து ஒரு நிறுவனத்தை நடத்தி அந்த நிறுவனத்தினுடைய உற்பத்தி பொருட்களை அந்த நிறுவனத்தின் மூலமாக அங்கு வேலை செய்பவர்களுக்கும் மக்களுக்கும் வினியோகம் செய்து அதன் மூலமாக மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு தன்னுடைய நிறுவனத்தையும் வளர்த்தக்கூடிய செயல்முறையே கார்போரேட்!

இந்த நிறுவன செயல்முறையினை புரிந்து கொண்டால்! நீங்களும் கார்பொரேட் ஆக மாற முடியும். அதற்காகவே நாங்கள் BBC எனப்படும் பிசினெஸ் பிராண்டிங் கண்செல்டன்சியை உருவாக்கியுள்ளோம். பிசினஸ்ஸில் ‘பிராண்ட்’ என்பது ஒரு பொருளின் மீதான மதிப்பு! இந்தப் பொருளுக்கு இந்த பிராண்ட் என்று மக்கள் மனதில் பதியச் செய்து விட்டால் போதும். அவர்கள் அதை மீண்டும் மீண்டும் வாங்குவார்கள்.

மக்கள் மனதில் ஒரு பொருள் பதிய வேண்டும் என்றால், அந்த பொருள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையானது, ஒரு பொருளை அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் போது கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட தொழிலுக்கு பிராண்டிங் செய்வது பற்றிய முழுமையான உளவியல் ஆலோசனைகளை எங்களது BBC இல் பெற முடியும். மேலும் விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கவும்.

rs=w:1440,h:1440

சரியான உழைப்பின் தரமான பலன்கள்

வெளிச்சத்தை வைத்து நிழலை சுருக்கலாம், ஆனால் நிழலைப் பார்த்து நிஜத்தை மாற்ற முடியாது! அதே வகையில் பணத்தை வைத்து நேரத்தை சுருக்கலாம், ஆனால் உழைப்பை சுருக்கி பணத்தை பெருக்க முடியாது!

சுமார் 70 வயது உடையவர் ஒருவர் நிறுவன மேம்பாட்டிற்கான ஆலோசனை பெற எங்களிடம் வந்தார். வந்தவர் தன்னைப் பற்றி முழுவதும் கூறினார். அவர் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்கியவர் எனத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது அதன் வளர்ச்சி குறைந்து விட்டது. தனது 40 வயது மகன் நிர்வாகம் செய்கிறார். எதுவும் என்னிடம் கேட்டதில்லை. நான் ஏதேனும் கேட்டாலும் கோபம் கொள்கிறான். வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு செலவுகளை செய்கிறார். இவை மட்டுமின்றி அடிக்கடி வெளியூர் செல்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை எனக்கூறி அழுதார்.

rs=w:1440,h:1440

அவரிடம் நீங்கள் உங்கள் மகனை மட்டும் என்னை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினேன். உடனே அவர் நான் எது சொன்னாலும் அவர் கேட்க மாட்டார். நீங்களே ஏதேனும் ஒரு வழியில் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று அவரின் அலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

பொதுவாக திறன் குறைந்தவர்கள் மற்றவர்களிடம் ஆலோசனை பெறுவதை தவிர்ப்பார்கள். காரணம், அவர்கள் ‘தங்களுக்கு எல்லாம் தெரியும்’ என்ற மமதையில் கனவு வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால் இவர்களில் பலவீனங்களை எளிதில் கண்டறியமுடியாது. பிரச்சனை முற்றிய பிறகே வெளியே தெரியும்.

ஆரம்பத்திலேயே உளவியல் நிபுணர்களை அணுகினால் மட்டுமே இவர்களை எளிதில் சரி செய்ய முடியும். இப்படிப்பட்டவர்கள் தன்னிடத்தில் சக்தி உள்ளது அதன் மூலமாக உங்கள் வாழ்க்கை சிறப்பாக முடியும் என்று சொல்பவர்களிடம் எளிதில் ஏமாந்து போவார்கள். அப்படி தன்னிடத்தில் சக்தி உள்ளது என்று கூறுபவர்கள்,  என்னிடத்தில் அறிவு உள்ளது அந்த அறிவின் துணை கொண்டு நீங்கள் வெற்றி ஆக மாறலாம் என்று சொல்கிறார்களா? இதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. இதைப் பற்றி எங்களது “வாழ்க்கை ஓர் உளவியல் பார்வை” என்ற புத்தகத்தில் தெளிவாக விவரித்துள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

அப்படி திறன் குறைந்தவர்களினால் தங்களின் பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்து அழிந்து வருகிறது. திறன் குறைந்தவர்களின் இயல்பு என்னவென்றால், தன்னைவிட குறைந்த திறன் உள்ளவர்களையும், ஜால்ரா போடும் நபர்களையும் மட்டும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். இப்படித்தான் அவரும் இருந்தார்.

பின்பு பல யுக்திகளைப் பயன்படுத்தி அவரை அழைத்து மூன்று மாத மனோதத்துவ ஆலோசனைக்குப் பின் அவருடைய தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.

70 வயது வாழ்க்கையில் எனது மகனோடு முதன் முதலாக 30 நிமிடம் பேசினேன். அதற்குக் காரணம் உங்களின் ஆலோசனை தான் என்று கூறி, அழுது கொண்டே நன்றியும் தெரிவித்தார்.

இது ஒரு உதாரணம் தான்! 1000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனர்களுக்கு ஆலோசனை செய்ததில் கண்ட உண்மை என்னவென்றால், அவர்கள் வயது ஆக ஆக தம்முடைய அறிவுதான் தனது வெற்றிக்கு காரணம் என நினைத்துக் கொண்டு, தங்களை புதுமைப்படுத்தி நவீன வழிகாட்டலுக்கு உட்படுத்துவதில்லை. இதனால் இவர்களின் நிறுவனம், தங்களின் அறிவைக் கொண்டே அவர்களின் கண் முன்னே அவர்களது குழந்தைகளினால் அளிக்கின்றது! எனவே மனதை மாற்றிக் கொண்டால் வெற்றி பெறலாம்.

rs=w:1440,h:1440

மனித மனதில் மூன்று வகையான எண்ணங்கள் தோன்றும். அவை: 

1. ஆசை 

2. விருப்பம்

3. செயல்பாடு… என்பன.

இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

1. ஆசை:

இது பெரும்பாலும் பிறர் பொருளை பார்ப்பதால் வருவதாகும். குறிப்பிட்ட பொருளை உழைத்து பெறுவதைப் பற்றி யோசிக்காமல் அதை அனுபவிப்பதில் மட்டும் கவனமாக இருப்பது இப்படிப்பட்ட எண்ணங்களின் தன்மை.

2. விருப்பம்:

இது ஒருவரின் தன்னலம் தொடர்பான எண்ணம். குறிப்பிட்ட ஒரு செயலை பிறர் தனக்கு செய்வது நன்றாக இருக்கும் என்ற மன நிலை.

3. செயல்பாடு:

இது உழைப்பு சார்ந்த எண்ணமாகும்.. எண்ணத்தை உழைப்பாக மாற்றினால் அது ‘செயல்பாடு’ ஆகும். இது தான் எம் எஸ் கே உளவியல் கோட்பாடு. எண்ணங்களை விட செயல்கள் அதிகமாக இருக்க வேண்டும்..

செயல் இல்லாத எண்ணங்கள் கற்பனையாகும். செயல் வெற்றி அடைவதற்கு பல ஆண்டுகள் உழைத்து இருக்க வேண்டும், அல்லது தோல்வி அடைந்ததற்கு பல செயல்கள் விடுபட்டிருக்க வேண்டும்.

இது ஆச்சரியமாக இருக்கும், ஆனால் உண்மை!

rs=w:1440,h:1440

இரத்த ஓட்டம் காற்றோட்டம் சீராக இல்லையென்றால் உடலில் வருவது உடல் நோய்… எண்ண ஓட்டம் சீராக இல்லையென்றால் மனதில் வருவது மன நோய்… உழைப்பு ஓட்டம் சீராக இல்லையென்றால் வாழ்வில் வருவது பணப்பற்றாக்குறை நோய்…

வியாபாரம், தொழில்துறை, உற்பத்தி, வளர்ச்சி, கல்வி இவற்றில் குறுக்கு வழியில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் நீண்ட காலம், நீண்ட தூரம் கடந்த பிறகு தான் புரிந்து கொள்கிறார்கள்… எவ்வளவு காலமாக எவ்வளவு தூரம் கடந்து சென்றோமோ, அதே கால அளவில், அதே தூரம் திரும்பி வந்து மீண்டும் பயணத்தை துவங்க வேண்டியுள்ளது என்று…. நீங்களும் நேரம், காலம், தூரம் இவற்றைக் குறைக்கவேண்டிய நிலையில் இருந்தால் உடனே எங்களை அணுகுங்கள்.

மன நோயின் உச்ச நிலையே சோம்பேறித்தனம்! பணம் பொருள் புகழ் இவை கிடைக்க வேண்டும், ஆனால் உழைக்க விருப்பம் இல்லை. இத்தகைய மனநிலை உடையவர்களும் நவீன பிச்சைக்காரர்களே! தன் உழைப்பை மட்டும் பெரிதாக கணித்து, அடுத்தவர்களின் பணத்தையும், நேரத்தையையும், உழைப்பையும் குறைத்து கணிப்பவர்கள் தான் ‘கடன்’ மன இயல்பு உடையவர்கள்!

MSK Theory

விதைப்பவனுக்கே அறுவடை, உழைப்பவனுக்கே பிழைப்பு, கொடுப்பவனுக்கே எடுக்கும் உரிமை. இதுவே இயற்கையின் நீதி!

பண நம்பிக்கையா? உழைப்பு செயல்பாடா? பணம் வரவில்லையா? உழைப்பைத் தரவில்லையா? ‘ஆராயுங்கள்.

பிசினெஸ்’ என்றால் பிசி – நெஸ் அதாவது ஓய்வில்லாமல் உழைப்பது என்றே பொருள். ஆனால் இங்கிலீஸ் மீடியத்தில் தமிழ் தெரியாமல் மனப்பாடம் செய்து வளர்ந்ததன் விளைவாக பிசினெஸ் என்றால் கடன் வாங்கி கடை வைத்தல் என பலர் புரிந்துள்ளனர்!

rs=w:1440,h:1440

உழைத்துக் களைத்துப் போனவர்களை விட உழைக்காமல் அடுத்தவர் உழைப்பை எடுத்து கொழு மொழு என்று உடல் எடையை அதிகப்படுத்தி களைப்படைந்தவர்கள் தான் இங்கே அதிகம்!

பணத்தை மட்டும் நேரடியாக பெற வேண்டும் என நினைத்து உழைப்பை தவிர்ப்பது நவீன பிச்சைக்காரத்தனம்! பணத்திற்காக உழைத்தல், பிறருக்கு உதவும் வகையில் உழைத்தல்… இவற்றில் உள்ள இடைவெளி பண வரவினை முடிவு செய்யும்!

விதையின் வீரியம் பாதுகாக்கப்பட்டிருக்கும் போது, நீர்மையும் ஊட்டச்சத்தும் கிடைக்கும் தருணத்தில் தானே வெளிப்படும் முளை போல உழைப்பில் இருக்கவேண்டிய உறுதியானது பாதுகாக்கப்படும் போது உழைப்பில் இருந்து பணம் தானாக வரும்!

உழைப்பின் பயனை பேனா மூலம் கணக்கிடலாம்! ஆனால் உழைப்பு இல்லாமல் அது பயன் தராது!

MSK Theory

பணச்சுழற்சி… உழைப்பு எழுச்சி…பணத்தை சேமியுங்கள்… உழைப்பை செலவிடுங்கள்… பணத்தில் இல்லை உயர்வு… உழைப்பில் தான் உள்ளது உயர்வு…

குறைந்த உழைப்பு – அதிக முதலீடு – கடன்!

அதிக உழைப்பு – குறைந்த முதலீடு – கடமை!

தொடர் உழைப்பு – இலாபம்!

உங்களுக்கு எது விருப்பமாகவும் பொழுதுபோக்காகவும் உள்ளதோ… அதில் ஆழமாக உங்களை செலுத்தி உங்கள் அறிவை வெளிப்படுத்தி வெற்றி பெற தோல்விகளை சந்தித்து உங்களை மாற்றியமைத்து பொழுதைப் போக்காமல் வாழ்க்கையை வாழ உழைப்பு உளவியலை பயன்படுத்துங்கள். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக செயல்படுகிறது என்று ஒருவன் உணர்கிறானோ அதுவே இயற்கை கொடுத்த படைப்பின் பங்கீடு ஆகும்.

அதில் ஈடுபட்டு, முறைப்படுத்தி அதனை சமூகத்திற்கு அறிவு சார்ந்த சொத்துரிமையாக உலகத்திற்கு கொடுப்பவர்கள் தான் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழும் இயற்கையின் பிரதிநிதிகள்.. இந்நிலையை அடைவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் அடக்குமுறைகள் நிராகரிப்புகள் போன்ற எதிர்வினைகளை அறிவின் மூலம் கையாண்டு அதனை நிலைப்படுத்த கடுமையான செயல் உழைப்பு செய்ய வேண்டும்.

கற்பனை வளம் உழைப்பாக உருமாற்றம் பெறவில்லை என்றால் அது பகல் கனவு… அதாவது உழைப்பில்லா நினைப்பு! கற்பனையை உழைப்பாக மாற்றுவதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் செயல் நுட்பங்கள் செயல் ஆலோசனைகள் செயல் மாற்றங்கள் நிபுணர்களின் ஆலோசனை அவசியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் தான் உலகில் மிகச்சிறந்த மிகப்பெரிய பெருநிறுவனம் என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் நிறுவன தொழிலதிபர்கள்.

rs=w:1440,h:1440

விவசாயியைப் பார்த்து கல்வி கற்றுக்கொள்ளுங்கள். லோன் வாங்காமல் உழைப்பை மட்டுமே முதலீடு செய்து உலகத்திற்கு உணவு கொடுக்கும் இயற்கையின் பிரதிநிதி அவர்!

விதைப்பவனுக்கே அறுவடை. உழைப்பவனுக்கே பிழைப்பு. கொடுப்பவனுக்கே எடுக்கும் உரிமை. இதுவே இயற்கையின் நீதி!

MSK Theory

பணத்தை போட்டு நேரத்தை சுருக்க முடியும். ஆனால் பணத்தை பெருக்க உழைப்பை சுருக்க முடியாது!

ஒரு இசையமைப்பாளர்… அவர் எடுத்த பாடலின் கருத்து, அந்த பாடல் நிகழும் இடம், அந்த பாடலுக்கான கதாநாயகன்- கதா நாயகி அவர்களின் நடத்தை இயல்புகள் போன்றவற்றோடு அந்த பாடலுக்கு சூழலுக்கு அல்லது சூழலை வெளிப்படுத்தும் இசை கருவிகள் அந்த கதையை சூழலுக்கேற்ப புறச் சூழலுக்கு ஏற்ப குரல் அமைப்பு இவற்றை முழுமையாக புரிந்து உணர்ந்து உள்வாங்கி அவற்றை பாடலின் மூலம் அல்லது பாடலின் உள் வைத்து அந்த இசையை முழு வடிவமாக மாற்றுகிறார்..

அதேபோல ஒரு மாணவன் அல்லது தொழிலதிபர் இவர்கள் செயலை முழுமையாக உணர்ந்து புரிந்து அதற்கேற்ப மனதளவில் தன்னை தயார்படுத்தி உழைத்தால் மட்டுமே முடிவை வெற்றியாக மாற்ற முடியும். இதற்காகத்தான் எங்களின் எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் சர்வதேச கற்றல் என்ற திறன் மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. படித்தல் என்ற செயல் உருவாகுவதற்கான அனைத்தும் உளவியல் சமூகவியல் ஆய்வு அடிப்படையில் ஒரு தனி மனிதனையும் நிறுவனத்தையும் மாற்றி வருகிறது.

உங்கள் குழந்தைகளை சிறு வயது முதலே ஆற்றல் மிகுந்தவர்களாக பகுத்தறியும் திறன் உள்ளவர்களாக பழக்குங்கள். கூலி வாங்கும் மனநிலையில் வளர்க்க வேண்டாம். இதைப்பற்றி எங்களது ‘உங்கள் குழந்தைகளை வளர்கிறீர்களா? பழக்குகிறீர்களா?’ என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

உழைப்பை பெருக்கினால் கடமை.

கடமை குறைந்தால் கடன்.

கடமை – உழைப்பு இணைந்தால் இலாபம்!

தொடர் வெற்றிக்கான இரகசியங்கள்

சரியான தேர்வு – நீடித்த முதலீடு – உழைப்பு என்ற குறிக்கோளை பின்தொடருங்கள். இத்தத்துவம் முதலில் முதலீட்டாளர்களாலேயே சரிவர புரிந்து கொள்ளப்படுகிறது.

விலைக்கு ஏற்ற தரமும், விலைக்கு ஏற்ற மதிப்பும் இருக்கும், அதாவது, ஒருவர் கொடுக்கும் பண மதிப்புக்கு ஏற்ப பொருளின் தரமும் செயல்பாடும் இருக்கும். குறைந்த விலையில் அதிக தரத்தையும் செயல்பாட்டையும் எதிர்பார்ப்பது சுய ஏமாற்று சிந்தனை. இது பெருநிறுவன தொழிலதிபர்கள் புரிந்து வைத்துள்ள வியாபாரம் தொழில் மெய்நிலை.

MSK Theory

உங்கள் வியாபார வெற்றிக்கு தொழில் நுட்பம் மட்டும் போதாது, பேச்சு நுட்பமும் தேவை! பேச்சில் தான் உள்ளது பணம், பணத்தில் உள்ளது பேச்சு!!

யாரிடம் எப்படிப் பேசுவது என்பது தெரியாததாலேயே பல குடும்பம், சமூகம் மற்றும் தொழில் துறை சார்ந்த பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன. பிசினெஸில் வெற்றி பெற பேச்சுத்திறன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பேச்சு வணிகத்தில் பல வகைகள் உள்ளன. நகைச்சுவை பேச்சு, கொள்கை பேச்சு, நம்பிக்கை பேச்சு, அரசியல் பேச்சு, வியாபாரம் வளர்ச்சி காண பேச்சு, சமூக விழிப்புணர்வு பேச்சு, மன மத நல்லிணக்க பேச்சு, சமூக முரண்பாடு இல்லாத மதம் சார்ந்த மனிதாபிமானமான பேச்சு, நிறுவனங்களுக்கான தூதரக பேச்சு இன்னும் பல…

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறும் என்கிறார் திருவள்ளுவர்.

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

(திருக்குறள், பால்: அறத்துப்பால், அதிகாரம்: வாய்மை, குறள் 292)

பொதுவாக இன்று உண்மையைச் சொல்.. என்ற தத்துவம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால்.. ‘பொய் சொல்லி என்னை சிரமப்படுத்த வேண்டாம்.. என்பதற்காகவும், எனது வேலையை சுலபமாக்கு.. இல்லையென்றால் உன்னுடைய உண்மையான தன்மையை கண்டுபிடிக்க நான் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.. என் வேலையை சுலபமாக்க நீ உண்மையைப் பேசு..’ என்பதற்காகவும் தான்! உண்மையை சொல்லக்கூடியவர்கள் சாதாரண மக்கள்.. இது உண்மையா என்று கண்டுபிடிக்க கூடியவர்கள் அதிகார மக்கள்! 

rs=w:1440,h:1440

அதிகார மக்கள் உண்மையை கண்டுபிடிக்க அதிக முயற்சி செய்யக்கூடாது… உழைக்கக் கூடாது… என்பதற்காக பொய் சொல்லாதே என்ற தத்துவம் குழந்தை பருவத்திலிருந்து உருவாக்கப்பட்டிருக்கலாம்… பொய் என்ற வார்த்தைக்கும், உண்மை இல்லை என்ற வார்த்தைக்கும், சரி இல்லை என்ற வார்த்தைக்கும், தவறு இல்லை என்ற வார்த்தைக்கும், மாற்றி பேசுதல் என்ற வார்த்தைக்கும், திரித்துப் பேசுதல் என்ற வார்த்தைக்கும், குறைத்து பேசுதல் அல்லது மிகை படுத்தி பேசுதல் என்ற வார்த்தைக்கும்.. உளவியல் அர்த்தங்கள் பல்வேறு உள்ளன என்பதை புரிந்து கொள்வதுதான் MSK கோகினிசன் உளவியல் என்று பெயர்.

வாழ்க்கை எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில்லை. நாம் எதிர்பார்ப்பது போல அடுத்தவர்கள் இருக்க வேண்டும் அல்லது நம் விருப்பப்படி அவர்கள் நடக்க வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் முறையான பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கவேண்டும். அப்படி நடந்திருந்தால் மட்டுமே அவர்கள் உங்களிடம் மிகவும் நன்றாக பழகுவார்கள்.

ஆக பேச்சு வணிகத்தில் நீங்கள் சிறந்து விளங்கும் போது அதுவே உங்கள் வியாபார வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்!

rs=w:1440,h:1440

இத்தகைய அடிப்படை புரிதல்கள் இல்லாமல் பணம் இருந்தால் பிசினஸ் தானாக வளர்ந்துவிடும் என நினைப்பது எந்தவகையிலும் சரியல்ல! உண்மையில் பிசினஸ்ஸுக்கு பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை. நம் மனநிலையினை பணவரவிற்கு ஏற்ப மற்றியமைத்தாலே நாமும் கார்பொரேட் ஆக அடித்தளம் அமைக்க முடியும்.

ஆனால் இந்த மனச் சீரமைப்பு வித்தையினை சரியான தொழில் சார்ந்த உளவியல் நிபுணர்களாலேயே நமக்கு திறம்பட செய்து கொடுக்க முடியும். நமது DNA வில் பதிவாகியிருக்கும் ஏழை மனநிலையினை மாற்றி, புதுக்கருத்துக்களை புகுத்துவதற்கு DNA modification தெரபி என்று பெயர். இதைப்பற்றிய தகவல்களை எங்களது
DNA modification With Psychological MSK Therapy என்னும் ஆங்கிலப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

பிசினெஸில் பல பேர் முன்னேற்றமடையாததற்கு காரணம், பிசினெஸ் நுட்பத்தை விட பிசினெஸ் பழக்கத்தையே திரும்பத் திரும்பச் செய்து தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாதது தான்!

MSK Theory

வயதாகும் போது அனுபவம் அதிகமாகலாம். ஆனால் businessக்கான அணுகுமுறைகள் அதிகமாவதில்லை.

ஒரு தொழில் துவங்குவது முதல் அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பது வரை எத்தனை வகையான செயல்பாடுகள் கார்போரெட்களால் செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

1. Start up strategy (பிசினெஸ் ஆரம்பிக்கும் போது உள்ள செயல்பாடுகள்)

2. Branding, developing and promotion (பிசினெஸ் ஆரம்பித்த பின் உள்ள செயல்பாடுகள்)

3. Business Management (நிர்வகித்தலுக்குத் தேவையான செயல்பாடுகள்)

4. Business Operation and organizational behaviour (இயக்குதல் மற்றும் நடத்தை உருவாக்குதல்)

5. Business workspace and working environment (வேலை செய்பவர்கள் எப்படி இயங்கினால் நாம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றிய செயல்பாடு)

6. Financial Debt & credit advisory consulting (பணம் வாங்குவதிலும் கொடுப்பதிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பணத்தை போடுவது)

7. Human performance and development (மனித ஆற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள்)

8. Consumer care and relationship (வாடிக்கையாளர்களை கவனித்தல் மற்றும் தொடர்பில் இருத்தல்)

9. Traditional and Neuro marketing (சந்தைப்படுத்துதல் சம்பந்தமான செயல்பாடுகள்)

10. Business crisis and Solutions (பிசினெஸில் வரக்கூடிய முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான செயல்பாடுகள்)

11. Deconflicting and Desensing consultation (நம்மை அறியாமல் வரும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான செயல்பாடுகள்)

rs=w:1440,h:1440

நீங்கள் இவற்றில் என்னென்ன செயல்பாடுகளை செய்யத் தவறியுள்ளீர்கள் என்பதை கொஞ்சம் கவனியுங்கள். இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் தொழில் வளர்ச்சியினை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மந்திரங்களோ பரிகாரங்களோ இத்தகைய செயல்பாடுகளை நமக்கு செய்து தருமா? கடன் வாங்கிய பணம் நமக்காக இத்தகைய செயல்பாடுகளில் தாமாக உழைக்குமா? வியாபார அனுபவம் இவற்றை கற்றுத் தருமா? உங்களது தனிப்பட்ட இத்தகைய செயல்பாடுகள் எப்படி வியாபாரத்தில் செயல்படுகின்றன என்பதை எங்களது மனப்பகுப்பாய்வு மற்றும் மேம்பட்டு உளவியல் நிபுணர்கள் (Mind Set Knowledge Experts) மூலமாக தெரிந்துகொள்ளுங்கள்.

rs=w:1440,h:1440

பணம் என்பது உளவியல் ஆற்றலின் வெளிப்படையான குறியீடு! ஆகவே வெளிப்படையான குறியீடாக இருக்கக்கூடிய பணத்தை பிற மனிதனுக்கும் ஆற்றல் கொடுப்பதற்காக பயன்படுத்தினால் நீங்கள் சமூக வலைப்பின்னலில் இருந்து சரியான இயக்க சக்தியை பிறருக்கு இணைக்கும் செயல்பாட்டு புள்ளியாக உள்ளீர்கள் என்று பொருள். ஆகவே ஆற்றலை பங்கிடுவோம்!

பணம் சேகரிக்க, பணம் உங்களை வந்தடைய எளிய உளவியல் நடத்தை…

பிறருக்கு பண மன ரீதியிலான உதவிகளை செய்ய வேண்டும் என்று உங்களுக்குள் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்! ‘தொழில்’ என்பது தோழமை மூலமாக செழிப்பை உருவாக்குவது. நம்மை சார்ந்தவர்களும் நம்முடைய திறன் மூலமாக தோழமையில் செழிப்பை உருவாக்குவது! பிசினஸ் லாஸ் ஆனவர்கள் பாஸ் ஆக ஒரே வழி உழைப்பு திறன் மேம்பாட்டு ஆய்வுடன் கூடிய பிசினஸ் ஆடிட்டிங் மட்டுமே! இதைப்பற்றிய விளக்கங்களை ‘Business Secrets of Corporate People’ என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் நீங்கள் காண முடியும். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

உழைப்பின் உருமாற்றம் வெற்றி! அதாவது வெற்றி என்பது பணத்தை உருவாக்கும் செயல்களின் மூலம் சமூக சேவையில் தேவையை நிவர்த்தி செய்வதால் கிடைக்கும் உழைப்பின் பின்னூட்டம் . வெற்றி இலவசமாக கிடைக்கலாம், ஆனால் அதற்கு கொடுக்கக்கூடிய விலையாகிய உழைப்பு தான் மிக மிக காஸ்ட்லியானது! வெற்றிகரமாக பயணங்களுக்குத் தேவை வாழ்க்கைத் திறன் சார்ந்த பயிற்சியே!

நிபுணரின் ஆலோசனை ஏன் தேவை!

காலமும் சூழலும் மாறுவதற்கு ஏற்ப தொழில்களின் செயல்பாடுகளில் என்னென்ன வகையான மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஆராய்ந்து கொண்டும் கார்போரேட்டுகளை வழிநடத்திக்கொண்டும் இருக்கக்கூடிய உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள் அவ்வளவு எளிதாக பிசினெஸ் செய்பவர்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. பிசினெஸ் நாலெட்ஜ் வேண்டும்… வேண்டும்… என்று தேடுபவர்களுக்கே அவை எளிதில் கிடைப்பதில்லை, எல்லாம் எனக்குத் தெரியும் என்பவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்?

rs=w:1440,h:1440

தாங்களாகவே தொழிலில் எற்படும் பிரச்சனைகளை சரி செய்துகொள்ள முடியும் என்று நம்புபவர்கள் தங்களைப் போன்ற பல மனிதர்கள் வேலை செய்யும் தங்களது நிறுவனத்தில் உள்ள எத்தனை பேரின் மனநிலையினை ஆராய்ந்து சீர் செய்ய முடியும்? இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை பார்ப்போம்.

ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வேலையை வேண்டாமென விட்டுச் சென்று கொண்டிருந்தனர். அதனால் அப்பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியரிடம் ஏன் இவ்வாறு? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் யாருக்கும் வேலை செய்யும் திறமை இல்லை என்று சொல்லி சமாளித்து வந்தார்.

தொடர்ந்து இப்படி நடப்பதால் அப்பள்ளியின் தேர்வுப் பலன் குறைந்து கொண்டே இருந்தது. மக்களிடம் பள்ளியின் மதிப்பும் குன்றி விட்டது. இதையறிந்த அப்பள்ளியின் மூத்த நிர்வாகி  58 வயது முதிய தலைமை ஆசிரியரை அழைத்து, நீங்கள் நிர்வாக உதவி செய்யுங்கள். பள்ளிப் படிப்பை கவனிக்க ஒரு  30 வயது ஆசிரியரை நியமிக்கலாம் எனக் கூறியதோடு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

rs=w:1440,h:1440

அதன் பின் சிக்கல் குறைந்தது. இவ்வாறு நடந்ததற்குக் காரணம்… அந்த 58 வயது ஆசிரியர் பழைய கால மாணவர்களின் அடக்க ஒடுக்கமான உறவைப் பற்றி பேசுவதைத் தவிர அவரால் இந்தக் கால மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் 30 வயது ஆசிரியர், மாணவர்களின் சிக்கல்களைக் கண்டறிந்து, என்னை அழைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனோதத்துவ ஆய்வு செய்யச் சொன்னார். அதன் பிறகு தான் மாணவர்களின் நடத்தை நேர் திசையான மாறுதல் அடைந்தது.

ஒழுக்கம் இல்லை, புத்தகம் கொண்டு வருவதில்லை, கெட்ட வார்த்தை பேசுவது, அடிக்கப் போனால் திரும்பி அடிக்க முயற்சி செய்வது, “என்னை மட்டும் ஏன் திட்டுறீங்க” என கேள்வி கேட்பது, பாட்டு பாடுவது, மிமிக்கிரி செய்வது, ஆசிரியர் சொல்வதை திரும்பச் சொல்வது, பிற மாணவர்களை கேவலப்படுத்துவது, தன்னை நடிகராக பாவித்து அனைவரின் முன்னால் தன்னை உயர்த்திக் காட்டுவது,

rs=w:1440,h:1440

ஆசிரியரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவது, எது சொன்னாலும் சிரிப்பது, மாணவிகளை கேலி செய்வது, சக மாணவர்களின் பெற்றோரை கெட்ட வார்த்தையில் பேசுவது, வெளியில் நிற்க வைத்தால் அடுத்த வகுப்பு மாணவர்களிடம் சாளரம் வழியாக பேசுவது… இங்கனம் ஒழுங்கில்லாத மாணவர்களிடம் தொடர்ந்து ஆலோசனையும், மனோதத்துவ சிறப்பு சிகிச்சையும் செய்த பின் இப்போது மாணவர்களும், ஆசிரியர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இவ்வளவுக்கும் முக்கிய காரணம் அந்த மூத்த நிர்வாகி தான். அந்த நிர்வாகி வயதில் மிகவும் முதியவராக இருந்தாலும் அவரால் சிக்கலை கண்டறிந்ததை தீர்ப்பதற்கு சரியான வழி காட்ட முடிந்தது.

MSK Theory

பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கு என்ன தெரியுமோ அதை வைத்துத்தான் பிறரைக் கணக்கிடுகின்றனர். பிறரின் திறனை குறைந்து மதிப்பிடுகின்றனர். பிறரை குறை கூறி வாழ்கின்றனர்.

மூன்று விஷயங்களில் அந்த மூத்த நிர்வாகி சரியான வகையில் செயல்பட்டுள்ளார்.

1. திறன் குறைந்தவரை மாற்றுதல்

2. திறன் உள்ளவரை வேலைக்கு அமர்த்தல்

3. அத்துறையில் உள்ள மனோதத்துவ நிபுணரின் மூலம் சிக்கலைத் தீர்த்தல்.

இவை போன்ற உலகை மாற்றும் வல்லமை உள்ள மூத்த நிர்வாகிகளின் திறனால் தான் பல நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போதைய மேலாண்மை யுக்தியும் இது தான். வேலை செய்பவர் வேலைக்காரர் அல்லது கூலிக்காரர். யாரை வைத்து செயல்பட்டால் ஜெயிக்க முடியும் என்று அறிந்து ஆணவத்தை விட்டு நிறுவனத்தை காப்பாற்றுபவர் தான் திறமைசாலி.

மேலே நாம் குறிப்பிட்டது ஒருவகையான சிக்கல் தான். உளவியல் ஆலோசனைகள் மூலமாக மட்டுமே தொடந்து நிறுவனங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இதுபோன்ற அடுக்கடுக்கான சிக்கல்களை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய முடியும்.

rs=w:1440,h:1440

வாடிக்கையாளர்களின் எதிர் வினையை பற்றி யோசிப்பதை விட வாடிக்கையாளர்களுக்கு நாம் என்ன தகவலை கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய வழிகாட்டல் பெற உளவியல் ஆலோசனை மிக மிக அவசியம் என்பது பெருநிறுவன தொழிலதிபருக்கு மட்டுமே புரிந்த சர்வதேச மெய் நிலை.

உங்களை கடனாளியாக மாற்ற ஆயிரம் நிறுவனங்கள் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு பணம் சம்பாதிக்க மற்றும் சேமிக்க சொல்லித்தர எங்களைப் போன்ற கார்பொரேட் கம்பெனிகளுக்கான உளவியல் நிபுணர்களால் மட்டுமே முடியும்!

விளக்கம் – விளக்கம் தரலாம், ஆனால் செயலை உருவாக்காது! அதிக விளக்கமும் அதிக தெரிதலும் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி குழப்பத்தையே ஏற்படுத்தும். இதனால்தான் தொழில் வளர்ச்சிக்கு நிபுணர்களின் தொழில் முறை ஆலோசனைகள் பெற வேண்டும். இதை தொழிலதிபர்கள் மட்டுமே நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

MSK Theory

நிர்வாக இயக்குனர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமையே அறிவாளிகளை பயன்படுத்தும் அறிவு தான்! சாதாரண மக்களோ தனக்கே எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் அறிவாளிகளை பயன்படுத்தி ஆலோசனைகளை பெறுவதில்லை!!

‘அறிவு’ என்பது நினைவில் வைத்துக் கொல்லுவது அல்ல! செயலாற்றுவது தான்! ஆகவே செயலில் இறங்குங்கள். பிசினஸ்க்கான நிபுணர்களின் ஆலோசனைகளில் எந்தவகையிலான ஆலோசனை உங்கள் தொழிலுக்கு உடனடியாகத் தேவை என்பதனை உடனடியாகக் கண்டறியுங்கள்.

பிசினஸ் கன்சல்டிங்கில் எத்தனை வகையான செயல்பாடுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

வணிக திட்டமிடல் மற்றும் வளம் (business planning and resource), அவுட்சோர்சிங் (outsourcing), விகிதாசார ஆலோசனை (proportional consulting), உத்தி ஆலோசனை (strategy consulting), மேலாண்மை மற்றும் வணிக நுண்ணறிவு (management and business intelligence), நிறுவன நடத்தை ஆலோசனை (organizational behavior consultancy), பணியிட ஆரோக்கியம் (workplace wellness), பணி சுற்றுச்சூழல் ஆலோசனை (work environmental consultancy), செயல்திறன் தணிக்கை (performance auditing),

வணிக பயிற்சி மற்றும் கட்டமைப்பு (business fitness), வணிக மேம்பாட்டு செயல்முறைகள் (business development processes), வணிக வளர்ச்சி மற்றும் பிரிவு இலக்கு (business development with segment target), நிதி கடன் மற்றும் கடன் ஆலோசனை (financial debt and credit advisory), மனித செயல்திறன் மேம்பாடு (human performance development), மனித மூலதனம் (human capital), நுகர்வோர் பராமரிப்பு மற்றும் மேம்பாடு (consumer care and development), நியூரோ மார்க்கெட்டிங் (neuro marketing), பாரம்பரிய சந்தைப்படுத்தல் (traditional marketing), வணிக நெருக்கடி மற்றும் தீர்வுகள் (business crisis and solutions).

தொழில் சார்ந்த இத்தனை வகையான நிபுணரின் ஆலோசனைகள் இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. ஆலோசனைகளுக்கும் ஆறுதலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் நிபுணர்களிடம் ஆறுதல்களை இலவசமாகத் தேடி வருபவர்களே அதிகம்.

rs=w:1440,h:1440

கூலி வாங்காமல் எப்படி தொழில் செய்ய முடியாதோ, பணம் பெறாமல் எப்படி வியாபாரம் செய்ய முடியாதோ, அதேப்போல வியாபார ஆலோசனைகளும் எங்கேயும் எப்போதும் இலவசமாகக் கிடைப்பது இல்லை!

எங்களது MSK பண ஈர்ப்பு விதியின்படி, இலவசமாக மக்களுக்கு கொடுக்க நினைப்பவர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள். இலவசமாக பெற நினைப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் மன ரீதியாகவும், பண ரீதியாகவும் வெறுமையாக இருப்பார்கள்!

சூழ்நிலை மாற்றம், கால மாற்றம், சமுதாய மாற்றம் உங்கள் வியாபாரத்தின் வேகத்தை குறைக்காதிருக்கட்டும்.

நம்பிக்கை தேய்ந்துவிடும் அளவிற்கு மனதில் அழுத்தம் ஏற்படுகிறதா? உங்கள் வியாபார செலவுகள் மற்றும் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்வு காண எங்களிடம் தொடர்பு கொள்ளவும்.

MSK Theory

பெற்றோரின் பணமும், கடனாகக் கிடைத்த பணமும் வளர்ச்சிக்கு உதவாது. பணத்தைப் பெருக்கும் ஆற்றல் இலவசமாகக் கிடைக்காது, அப்படி இலவசமாகக் கிடைத்தாலும் அது பயன்படாது!

பாதை தெரியாத பயணத்திற்கு அனுபவம் வாய்ந்த வழித்துணை இல்லாவிடில் வேகம் ஏது? நம்முடைய கஸ்டமர் யார் யார் என்பதை நாம் தேர்வு செய்ய தரமான சமூகம் மற்றும் தொழில் ரீதியிலான ஆலோசனைகளும் சேவைகளும் பெற வேண்டியது அவசியம்.

தொழிலுக்குத் தேவை வேகமான வளர்ச்சி, வளர்ச்சிக்குத் தேவை சரியான வழிகாட்டுதல்கள். வாருங்கள் வழி காட்டுகிறோம். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!

rs=w:1440,h:1440

வாழ்க்கை பிரச்சனைகளும், உடல் நோய்களும்

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை தேடுகிறார்கள். பொதுவாக பலரும் சிகிச்சையைத் தேடுவது நோயின் மூலகாரணத்தினை கண்டறிந்ததால் அல்ல… மாறாக, நோயின் அறிகுறிகளை கண்டறிவதாலேயே! மூல காரணத்தைத் தேடிக் கண்டறிய விருப்பமோ முயற்சியோ இல்லாமல் அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை பெற்று பலர் மனநிறைவு அடைகிறார்கள். பல நோய்களுக்கும் அடிப்படைக் காரணங்களைத் தேடிப் பார்த்தால் அவை உடலுக்கு வெளியில் வாழ்க்கை பிரச்சனையிலிருந்தே ஆரம்பமானவை என்று புரிந்து கொள்ள முடியும்.

மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக வாழ்ந்த சில மனிதர்கள் கூட தங்களது தொழிலில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை தாங்கிக்கொள்ளாமல் தங்கள் உயிரையே மாய்த்துக்கொண்ட செய்திகளை நாம் படித்திருக்கின்றோம். மனித மனத்தை சரிவர இயக்கத் தெரியாவிட்டால் அதில் பதிந்திருக்கும் சமுதாயச் சூழலின் தாக்கங்கள் நம்மை வெகுவாக பாதிக்க வல்லவை.

இதைப்பற்றி தெளிவான விளக்கங்களை எங்களது ‘AMAZING LIFE SYMPTOMS FOR UNDER MIND DISASTERS’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் விளக்கியுள்ளோம். (இந்த புத்தகத்தைப் பற்றிய தகவல்களை காண இங்கே கிளிக் Click செய்யவும். அல்லது கீழே உள்ள புத்தகத்தின் படத்தினை கிளிக் செய்யவும்).

rs=w:1440,h:1440

பொதுவாக வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில சிக்கல்களையும் அவற்றிற்கு வெளிப்பாடான நோய்களையும் இப்போது காண்போம்.

1. குழந்தைகள் தனது பேச்சைக் கேட்பதில்லை, யாரும் மதிப்பதில்லை என்ற பாதிப்பு. இதனால் மூட்டுப் பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.

2. என் குழந்தைகளின் நடத்தை சரியில்லை. அவர்கள் பெரும் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர் என்ற கவலை இருப்பின் மூட்டு, கை, கால்களில் வாதம் ஏற்படும்.

3. குடும்பத்தில் சமநிலையற்ற பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் அல்லது தொழில் பிரச்சனை ஏற்பட்டாலும் சர்க்கரை வியாதி ஏற்படும்.

4. பெருமைக்காக கடன் வாங்கி, அதை திருப்பித் தர முடியாமல் போனால் உடலில் அசதி ஏற்படும். பின்பு படபடப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும்.

5. பிறரிடம் தனது மதிப்பை உயர்த்த முயற்சி செய்து, அது நடக்குமா அல்லது தோற்று விடுமா என்ற தொடர் எண்ணம் மற்றும் அது நடந்தே தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் நீடித்தால் மன அழுத்தம் மற்றும் மன வேதனைஏற்படும்.

6. குடும்பத்தினர் புறக்கணித்து விட்டால் தனக்கு யாருமே இல்லை என்ற எண்ணம், அல்லது என்னை புரிந்து கொள்ள யாருமே இல்லை என்ற பாதிப்பு இருந்தால் தலைவலி ஏற்படும்.

7. கணவன், மனைவி இருவரிடத்தில் ஒற்றுமை இல்லை என்றால் மனைவிக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளும், கணவர்களில் சிலருக்கு ஆண்மை பிரச்சனையும், சிலருக்கு வக்கிர செயல்பாடும் உருவாகும்.

8. தன்னை விரும்பியவர்கள் இறந்து விட்டாலோ அல்லது பிரிந்து விட்டாலோ அல்லது பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தாலோ அல்லது வேறு வழி இல்லாமல் வலுக்கட்டாயமாக வேலை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டாலோ புற்று நோய் ஏற்படும்.

9. வாழ்க்கையில் விரக்தி, பயம், தோல்வி ஏற்பட்டால் சிறுநீரக பிரச்சனை உருவாகும்.

10. நினைத்தவை எல்லாம் நடக்கவில்லை என்ற எண்ணம் மற்றும் மற்றவர்கள் தன்னைப் பற்றி தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணம் இருந்தால் ஆஸ்துமா ஏற்படும்.

11. ஏமாற்றம் மற்றும் தோல்வி ஏற்படுவதாலும், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற எண்ணமும், என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலையும் ஏற்படுவதாலும் உடலில் தோல் சார்ந்த வியாதிகளும் வரும்.

இங்ஙனம் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும், உடல் நோய்களும் பல விதங்களில்  தொடர்புடையவை என்பது அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

rs=w:1440,h:1440

உங்கள் டிஎன்ஏவை மாற்ற சில கேள்விகள்

பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், ‘இது இயற்கையின் விருப்பம்’ எனக் கூறிக்கொண்டு கவலைகள் மற்றும் குறைபாடுகளை சாதகமாக மாற்றிக் கொள்ளும் மனக்கோளாறு இப்போது மக்களிடையே அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதை புரிந்துகொள்ள நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் தேடுவது அவசியம்.

உங்கள் டிஎன்ஏவை மாற்ற சில கேள்விகள் இங்கே உள்ளன.

 • மிக நல்லவர் என்று சொல்கிறவர்கள் மற்றும் எனக்கு கெட்ட பழக்கம் ஏதும் இல்லை என்று சொல்கிறவர்களுக்கெல்லாம் ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது? பல நேரங்களில் மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை உருவாக்கி, இதய அழுத்தத்தையும் ஏற்படுத்தி மரணம் வரையில் கொண்டு சென்று விடுகிறது. ஏன்..?
 • இதய அடைப்பு அதாவது ‘ஹார்ட் அட்டாக்’ இவைகள் உள்ளனவா? அப்படி உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை இல்லையா..?
 • பிரச்சினைகளினால் மனஅழுத்தம் மற்றும் இதய அழுத்தம் உருவாகிறது என்றால் ஏன் பிரச்சினையை கண்டறிந்து அறிவு சார்ந்த, சமூகம் சார்ந்த, தொழில் சார்ந்த, உழவு சார்ந்த பிரச்சினையை தீர்க்க மக்களுக்கு தெரியவில்லை… அல்லது மனிதர்களை பயன்படுத்தி வாழ ஏன் புரிவதில்லை..?
 • பெற்றோர்கள் என்பது குழந்தைகளுக்கு வசதி உருவாக்கக்கூடிய  ஏஜெண்டா… அல்லது எந்த சூழ்நிலையிலும் வாழ தகுதியை பழக்கிக் கொடுக்கும் பயிற்சியாளரா…? அல்லது வசதிகளில் மட்டும் வாழ பழகிக் கொள்ளும் குழந்தைகளை உருவாக்கும் பெற்றோரா…?
 • எட்டு மணி நேரம் பள்ளியில் அல்லது கல்லூரியில் சொல்லிக் கொடுப்பதை படிக்க இயலாத மாணவன், ஒரு மணி நேரம் டியூசன் அல்லது ஸ்பெஷல் கிளாஸ் போனால் அதிக மதிப்பெண் பெற்று விடுகிறான் என்றால், அதாவது எட்டு மணி நேரம் வீண் தான்… ஒரு மணி நேரம் தான் பலனளிக்கிறது என்றால்… ஏன் எட்டு மணி நேரத்தை வீணாக செலவு செய்ய வேண்டும்..? இதன் உளவியல் தன்மை இன்றளவும் புரியாமல் இருப்பதற்கு அறிவு சார்ந்த கோளாறுகள் என்ன….? நல்ல பள்ளி நல்ல கல்லூரி என்று சொல்வதில் என்னென்ன அளவுகோல்கள் உள்ளன…?
 • யாரையும் கஷ்டப்படுத்த கூடாது மனவேதனை படுத்தக் கூடாது என்று கூறுபவர்கள், தங்களுக்குள்ளேயே ஏன் மனவேதனை அடைந்து கொண்டே இருக்கிறார்கள்…?
 • நட்பும், உறவும் அதிகமாக வேண்டும் என்று நினைத்து உறவாடுவார்கள் ஏன் அந்த உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்..? இவர்களுக்கு ஏன் உறவு சார்ந்த உளவியல் ஆலோசனை தேவை என்பது புரிவதில்லை…?
 • இளகிய மனதோடு உள்ளவர்கள் ஏன் கடினமான‌ மனதோடு வாழ்பவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது வஞ்சிக்கப்படுகிறார்கள்…?
 • செலவுகளை கணக்கிட்டு செய்வதாக வாழ்பவர்கள் ஏன் கடன் வாங்கி கடன் பிரச்சினையினால் பாதிக்கப்படுகிறார்கள்…?
 • அகம்பாவம், திமிர், ஆணவம் இத்தகைய குணங்களோடு பிறரை அடக்கியாளும் நபர்கள் எப்படி வளமாக வாழ்கின்றனர்? இதன் உளவியல் உண்மை என்ன…?
 • பணம், பலம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள், பிறரிடத்தில் உதவியை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதில்லை ஏன்….?

இதுபோன்ற பல கேள்விகளுக்கும் ‘Business பிராண்டிங் கன்சல்டேசன்’ என்ற உளவியல் ஆலோசனை பெற உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

rs=w:1440,h:1440

எங்களைப் பற்றி

எம் எஸ் கே உளவியல்.. இது எங்களுடைய நவீன உளவியல் கோட்பாடு!  இந்த எம் எஸ் கே நவீன உளவியல் – உலகியல் கோட்பாடானது, மனிதனுடைய செயல்பாடு ‘மனம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் முடித்துக் கொள்வதை தாண்டி, அந்த மனம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் செயல்பாடான இணை மையம் என்ன என்பதை விளக்குகிறது. ஒரு மனிதனுடைய மூளை என்பதில் என்னென்ன செயல்பாட்டுகள் உள்ளன என்பது போலவே மனம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எது செயல்பாடாக – செயல் ஊக்கியாக – செயல் நினைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த எம் எஸ் கே நவீன உளவியல்! 

rs=w:1440,h:1440

எம் எஸ் கே என்பது மைண்ட் செட் நாலேஜ் என்பதன் சுருக்கம்தான். தமிழில் மன பதிவு சார் அறிவு என்று குறிப்பிடுகிறோம். இந்த எம் எஸ் கே நவீன உளவியல் கோட்பாட்டின்படி மனம் என்பது அறிவு என்பதனுடைய தொகுப்பாகும். இந்த அறிவு, உயிரினம் கருவுற்றிருக்கும் சமயத்தில் தன்னுடைய பதிவு நிலையை துவக்கி, தொடர்ந்து அந்த உயிரினத்தின் வாழ்நாள் எல்லை வரை தொடர்கிறது…

இந்த பதிவை மையமாக வைத்து வாழ்க்கையில் அனைத்து முடிவுகளும் தன்னையறியாமல் எடுக்கப்படுகிறது அல்லது முடிவெடுக்க தூண்டப்படுகிறது. இந்த முடிவுகளே வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் இவற்றிற்கு காரணமாக அமைகிறது. தனிமனித வெற்றியை உருவாக்க மனதிலுள்ள பதிவை முறைப்படுத்த வேண்டும்.  மனம் அறிவின் தொகுப்பு, செயலின் உள் கட்டமைப்பு, நடத்தையின் வரைபடம். மனம் பற்றிய மேலும் பல தகவல்களை எங்களது இந்த விழிப்புணர்வு பதிவுகளில் வழங்கியுள்ளோம்.

அது மட்டுமல்லாமல் வியாபாரத்திற்குத் தேவையான பலவிதமான சூத்திரங்களை தனியாக MSK Business Theories என்னும் பதிவினில் வழங்கியுள்ளோம். இதையும் நீங்கள் படித்து பயன் பெற முடியும். நமது MSK Life Clinic Foundationஇல் Mind Lab அதாவது மன ஆய்வகம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக நான்கு parametersஇல் எங்களை நாடி வரும் மக்களை measure பண்ணுகிறோம். அதாவது (1) கல்வி, (2) பொருளாதாரம், (3) உளவியல் ஆரோக்கியம், (4) சமூக நலம். இதில் ஒரு மனிதனுக்கு எது குறைவாக இருக்கிறதோ அது அவரிடமிருந்து மற்ற மூன்று விசயங்களையும்அழித்து விடும்!

rs=w:1440,h:1440

நமது எம் எஸ் கே செயல் நுட்பக் கோட்பாட்டின் படி குழந்தைகள், பெரியவர்கள், திருமண தம்பதிகள், வியாபார நிபுணர்கள், தொழிலதிபர்கள், திரைப்படத் துறை சார்ந்தவர்கள், அரசியல் துறை சார்ந்தவர்கள், இவர்களுக்கு செயல் திறனை அதிகரிப்பது செயல் நுட்பத்தை அதிகரிப்பது செயல் நடத்தைகளை திருத்தமாக மாற்றியமைப்பது போன்ற வெற்றி சார்ந்த உளவியல் சிறப்பு நடத்தைகளை ஆய்வு செய்து மாற்றி வெற்றியாளராக மாற்றுவதே இலக்காகும்.

உயிர்களை தனித்தனியே இயக்கவல்ல சிஸ்டத்தை உருவாக்கிய அமைப்பு விதியே அவற்றை இயக்குகிறது! அதேப்போல உங்களது பிசினஸ்ஐ இயக்கும் அமைப்பு விதியை உருவாக எங்களுடன் இணையுங்கள். அறிவு ரீதியாக யார் எப்படி இயங்கவேண்டும் என்பதை அறிந்து செயல்படுத்துங்கள்.

 • குழந்தை வளர்ப்பது எப்படி?
 • குழந்தையை பழக்குவது எப்படி?
 • ஆடு வளர்ப்பது எப்படி?
 • ஆட்டை பழக்குவது எப்படி?
 • மாடு வளர்ப்பது எப்படி?
 • மாட்டை பழக்குவது எப்படி?
 • பிசினசை வளர்ப்பது எப்படி?
 • பொருட்களை வாங்குவதற்கு மக்களை பழகுவது எப்படி?
 • மக்களை தங்களுடைய கஸ்டமர் ஆக மாற்றுவது எப்படி?
 • மக்களை நீண்ட கால கஸ்டமர் ஆக மாற்ற அவர்களை எப்படி பழகுவது? எப்படி வளர்ப்பது?
 • படிப்பது எப்படி?
 • படிப்பை வளர்ப்பது எப்படி?
 • படிப்புக்கேற்ற நடத்தையை உருவாக்குவது எப்படி?
 • கல்வியில் முன்னேறுவது எப்படி?
 • கல்வியில் முதல் தரமாக வளர்வது எப்படி?
 • உடல் நலத்தை கண்காணிப்பது எப்படி?
 • உடல் நலத்தை மேம்படுத்துவது எப்படி?
 • உடல் நோயை குறைப்பது எப்படி?

இது போன்ற அனைத்து விதமான தனி மனித வாழ்வியல், நிறுவன மேம்பாட்டு இயல் போன்றவற்றை உளவியல் ரீதியாக மேம்படுத்த முடியும். எங்களைப்பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள google.com இல் MSK Life Clinic Foundation என் டைப் செய்து பார்க்கவும் அல்லது இந்த இணைப்பை click செய்யவும்.

rs=w:1440,h:1440

பிசினெஸ் பற்றி நாம் இங்கே கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் MSK Theoryயின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவை! MSK Life Clinic பற்றிய மேலும் விவரங்களை www.msklifeclinic.in என்னும் இணையதளத்திலும்  MSK Life TV  என்னும்  youtube channelஇலும் நீங்கள் காண முடியும்! எங்களது சேவைகளை அவ்வப்போது தெரிந்துகொள்ள facebook.com/gsexperts  என்னும் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ள Just Call நம்பரில் அழையுங்கள்!

rs=w:1440,h:1440

Business is not an act! It is  a Process!!

உங்கள் தொழிலில் தொடர் வெற்றி காண வாழ்த்துக்கள்!
rs=w:1440,h:1440
Spread the love